ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram
நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக இருக்க வேண்டிய இன்றைய பத்திரிகைத்துறை ,ஆட்சியாளர்களுக்காக சுயநலமாக மாறிவிட்டது. அதற்கு என்ன காரணம் செய்தித் துறையில் சலுகை ,விளம்பரங்கள் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கிறோம் என்று சொல்லி மோசடி, ஊழல் மிக்க ஒரு துறையாக இன்று செய்தி துறை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
சர்குலேஷன் சட்டம் இது யாருக்காக? மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? இந்த சட்டத்தை வைத்து தினசரி பத்திரிக்கை, வார பத்திரிக்கை, மாத பத்திரிக்கை என்று பிரித்து ஒவ்வொன்றுக்கும் சலுகை, விளம்பரங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதாவது பத்தாயிரம் பிரிதிகள் தினசரி பத்திரிகை ஆனாலும், மாத பத்திரிகை ஆனாலும், வார பத்திரிகை ஆனாலும் அச்சடிக்க வேண்டும்.
ஆனால் அந்த செய்திகள் நடுநிலையா? அல்லது உண்மையா? அரசியல் கட்சி சார்பற்றதா? அல்லது அது கட்சி பத்திரிகையா? அல்லது வியாபார பத்திரிகையா? அல்லது பொழுதுபோக்கு பத்திரிகையா ?எதுவும் தேவையில்லை. ஆனால் சர்குலேஷன் தான் தேவை. அதில் நாலு அரசு செய்திகள் இருந்தால் போதும், அவர்கள் சொல்லும் செய்தி மட்டும் வெளிவந்தால் போதும்.
அப்படி என்றால் இதில் மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை கொடுக்கக் கூடாது. ஏனென்றால், மக்களுக்காக எத்தனை பத்திரிகைகள்? இன்று நடுநிலையான, உண்மையான செய்திகளை கொடுக்கிறது? ஒற்றை இலக்கத்தில் இருக்குமா? என்பதே சந்தேகம். அந்த அளவிற்கு இந்த பத்திரிக்கை துறை அவரவர் சுயலாபங்களுக்காக இது மாறிவிட்டது.
நீங்கள் பணம் கொடுத்தால், என்ன செய்தி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போட்டு தருகிறோம். நீங்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால் ஆட்சியாளர்கள் என்ன சொன்னாலும், அதை செய்தியாக போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நான்காவது தூணின் லட்சணம்.
இதற்கு இவர்களுக்கு மட்டும் தான் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக செய்தித்துறை அதிகாரிகள் அதிகாரத்தின் உச்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை என்பது நியாயத்தின் பக்கமா? அல்லது அநியாயத்தின் பக்கமா? எது என்று தெரியாமல் இன்று பத்திரிகைத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், ஒரு பக்கம் ஆட்சியாளர்களின் ஊழல் என்றால், மற்றொரு பக்கம் இந்த பத்திரிகை நடத்தக்கூடிய முதலாளிகளின் ஊழல்கள் ஒருபுறம், அதனால், மக்களிடம் நடுநிலையான உண்மையான செய்திகளை எப்படி வெளியிடுவார்கள்?
சமீபத்தில் வின் டிவி நடத்தக்கூடிய முதலாளி ஊழல் பிரச்சனையால் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அடுத்தது தினமலர் பத்திரிக்கை முதலாளியும் கோயில் நிலத்தை அபகரிப்பு செய்ததில் அவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டு இன்று விசாரணைக்கு போய்க் கொண்டிருக்கிறது.
இன்னும் சில வெளிவராத தகவல்கள் இருக்கிறது. பெரும்பாலும் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை நிறுவனங்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள், சாராய ஊழலில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள், அரசியலில் கொள்ளை அடித்தவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சி, நடத்தக்கூடியவர்கள், எப்படி சமூக நலனுக்காக ,இந்த தேச நலனுக்காக செய்திகளை வெளியிடுவார்கள்? என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை நீதித்துறை அவசியம் கவனித்து நீதிபதிகள் உள்வாங்கி, உண்மைத்தன்மையோடு ,நடுநிலையான தீர்ப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு சேவை மனப்பான்மையோடு வெளிவரும் பத்திரிகைகள் எது? என்பதை இன்றுவரை எங்களாலே புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி அரசியலில் ஊழல்வாதியும், தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வான். கொள்ளையடிப்பவனும் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வான். சமூக நலனுக்காக போராடுபவனும் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வான். இதில் யார் உண்மையானவர்கள்?.
இது எல்லாம் எதுவுமே மத்திய மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கொடுக்கின்ற கமிஷன் மட்டுமே தெரிகிறதே ஒழிய, சமூக நலன், தேச நலன் எங்களைப் போன்ற சாமானிய மக்கள் பத்திரிக்கை நடத்துவதற்கு எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? என்று கூட புரியாமல் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.மேலும்,
ஒரு பத்திரிகையின் தரம், தகுதி ,எதுவும் பார்க்க மாட்டார்கள். பெரிய பக்கங்களை பார்க்கிறார்கள் .அந்தப் பக்கங்களில் மக்களுக்கான உண்மையான, நடுநிலையான செய்திகள் எத்தனை? என்று கூட பார்க்க தெரியாது. ஏதோ நாலு அரசு செய்தி வந்தால், அதை கட்டிங் போட்டு, மாவட்ட ஆட்சியருக்கும், ஆட்சியாளர்களுக்கும் அனுப்பி கொண்டு இருப்பார்கள். இந்த லட்சணத்தில் செய்தித்துறை இருந்தால், மக்களுக்கு என்ன நன்மை ஏற்படுத்த முடியும்?
ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் எவ்வளவு பொய் சொன்னாலும், அதை எல்லாம் பக்கமாக, போட்டோக்களாக செய்தியாக நிரப்பி, பத்திரிகை என்று மக்களை ஏமாற்றுவது பெரிய திறமை அல்ல. அதேபோல், நானும் செய்தியாளர் பெரிய பத்திரிக்கை என்று அதற்கு அரசு அடையாள அட்டை கொடுப்பதால், எந்த பிரயோஜனமும் இல்லை. பத்திரிக்கை என்றால் எந்த நோக்கத்திற்கானது?
அவரவர் கட்சி பத்திரிக்கைகள், கட்சி தொலைக்காட்சிகள், தங்கள் சுயலாபத்திற்காக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். அது உங்கள் கட்சிக்கு கொண்டு போங்கள். அப்பாவி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்போது, நீங்கள் எவ்வளவு பொய் சொன்னாலும், அதைப் படித்து ஏமாந்து தான் போவார்கள். அதற்கும் சர்குலேஷன் சட்டம் பொருத்தி இந்த சலுகை, விளம்பரங்களைக் கொடுப்பார்கள்.
அதேபோல் வியாபார பத்திரிகைகள், பொழுதுபோக்கு பத்திரிகைகள், காப்பி to பேஸ்ட் பத்திரிகைகள், இவையெல்லாம் இன்று பத்திரிக்கை என்று சொல்லி பத்திரிக்கை துறையை சீரழித்து வருகிறது. இங்கே உழைப்பவனும், ஒன்று ஏமாற்றுபவனும் ஒன்று. இது என்ன அரசியல் கட்சியா? எப்படியும் பேசிக் கொள்ளலாம். எப்படியும் எழுதிக் கொள்ளலாம். இதற்கு ஒரு முடிவு கட்ட நீதிமன்றத்தால் மட்டும் தான் முடியும்.
தகுதி வாய்ந்த, நேர்மையான நீதிபதிகள் உண்மையை ஆய்வு செய்து சமூக நலனுக்காகவும், தேச நலனுக்காகவும், ஆட்சியாளர்கள் மற்றும் செய்தித் துறை அதிகாரிகள் கொடுக்க மறுக்கின்ற சலுகை, விளம்பரங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இன்று பத்திரிகையின் இணையதளங்களை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும்.
அதேபோல் அந்த பத்திரிகையின் யூ டியூப் களை தரத்தின் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் அதற்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீதித்துறைக்கும், பொது மக்களுக்கும்,செய்தி துறைக்கும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கை கூட்டமைப்பு சார்பில் இந்த உண்மையை தெரிவிக்கிறோம்.