நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும் போது போலி சான்றிதழ்களுக்கு தமிழக அரசில் வேலை செய்வது வெட்கக்கேடான திமுக, அதிமுக ஆட்சி -படித்த பட்டதாரி இளைஞர்கள்.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 13, 2024 • Makkal Adhikaram

நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி அரசு வேலை கிடைக்காதா? என்று ஏங்கி தவிக்கும்போது, 25 சதவீதத்திற்கு மேல் போலி சான்றிதழ்கள் மூலம் அதிமுக ,திமுக ஆட்சியில் பல துறைகளில் உள்ளே வந்திருப்பதாக தகவல் . ஒரு பக்கம் கல்வித்துறை மற்றொரு பக்கம் உள்ளாட்சித் துறை அடுத்தது வருவாய் துறை இதில்தான் அதிகப்படியான மோசடிகள் நடந்துள்ளதாக தகவல் .

மேலும், பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் தமிழகத்தையே உலுக்கிய தலைமை ஆசிரியரின் இன் ஸ்கெட்ச் பார்த்து பள்ளிக்கல்வித்துறையே மிரண்டு போய் உள்ளது. அதாவது, பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் படிப்பதாக பள்ளியில் கணக்கு காட்டி பள்ளி நிர்வாகத்தை நடத்தியுள்ளார். இதனால், பள்ளிக்கல்வித்துறை மிரண்டு போய் தமிழக முழுவதும் இடையில் நடத்த பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன செய்தார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரால் அரங்கேற்றம் பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காண செய்திருக்கிறது.

 திருவள்ளூர் மாவட்டம் பம்மாத்து குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைமை ஆசிரியரான லதா மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து 230 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியில் 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார். இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும், அம்பலமாகியுள்ளது. இதோடு இல்லாமல் 220 மாணவர்கள் பெயரில் பள்ளி கல்வித்துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

 இதனால், அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற பல மோசடியும், முறைகேடுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

 மேலும், தொடர்ந்து தலைமை ஆசிரியர் லதா மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில் இதன் எதிரொளியாய் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மாணவர்களின் வருகை பதிவேடு, உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *