பிஜேபிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட அல்லது கருத்துக்களை வெளியிடும் யூ டியூபர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்று பேசிய திமுக மேடைக்கு, மேடை , அதே கருத்து சுதந்திரம் ,இன்னொரு கட்சியினர் மீது எப்படி தவறாக பயன்படுத்தலாம் ?மேலும்,
, மாரிதாஸ், உமா கார்க்கி ,கார்த்திக் கோபிநாத்,சூர்யா போன்றவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இவர்களுக்கு மட்டும் தானா ?அது மற்றவர்களுக்கு இல்லையா?ஒரு கருத்து சுதந்திரத்தையே இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத போது, அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுகிறார்கள் .ஆனால்,
இவர்களுடைய அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் சட்டப்படி நிறைய தவறுகளை செய்துவிட்டு, தங்களை உத்தமர்கள் போல பேசி காட்டிக் கொண்டால், இந்த பேச்சுக்களை தினமும் தினசரி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மக்களுக்கு காட்சி படுத்திக் கொண்டிருப்பது மக்கள் ஏமாளிகளா? அல்லது முட்டாள்களா ? மேலும்,
மத்திய அரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் அல்லது பணப்பரிவர்த்தனை மோசடி செய்தால் அவர்கள் மீது குற்ற வழக்குகள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் போது, எங்களை இந்த சட்டத்தின் மூலம் மிரட்டுகிறார்கள் என்று சொல்லி வரும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர் போன்றோர், சிபிஐ, அமலாக்கத்துறை ,வருமானவரித்துறை இவை எல்லாம் நாட்டில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அரசியல் கட்சியினரால் ,அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதைக் கூட கேட்காத ஒரு அரசாங்கம் எப்படி மக்கள் நலனுக்காக செயல்படுகிறது என்று சொல்ல முடியும்?
மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை ஆயுதங்களாக பயன்படுத்தி எங்களை பழி வாங்குகிறார்கள் என்று பலமுறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .சரி அப்படியே பழி வாங்குவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வேண்டியது தானே, ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்? இதற்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.
சட்டம் என்பது உங்களுக்கு ஒரு தனி சட்டம் .பொது மக்களுக்கு ஒரு தனி சட்டம் என்று இல்லை. மேலும் பேசுவதற்கும் அதை மக்களிடம் செயல்படுத்துவதற்கும் ,எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பது முட்டாள்களிடம் செய்கின்ற அரசியல். தமிழ்நாட்டில் எல்லோரும் அரசியல் தெரியாத முட்டாள்களாக இல்லை என்பதை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி.