
வகஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

அந்த மக்களுக்கே இந்த உண்மைகள் தெரியாது. முஸ்லிம்களின் வஃப் போர்டுக்கு இத்தனை லட்சம் கோடி சோத்துக்களா?என்று அவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு இன்று உண்மை அந்த மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால், அரசியல் சுயநலத்திற்காக இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது உண்மை தெரியாத மக்கள் இதுவரை பிஜேபி முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி என்ற ஒரு மாயையை உருவாக்கி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் மக்கள் இப்போது தான் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் மதவாத கட்சி என்று அதற்கு முலாம் பூசி அரசியல் செய்து ஏமாற்றி இருப்பது முஸ்லிம் மக்கள் உணர்வார்களா? அதனால், பிஜேபி முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. மேலும்,முத்தலாக் சட்டம் இன்று முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவமான ஒரு சட்டம். எத்தனை லட்சம் குடும்பங்களின் பெண்களை இன்று மோடி காப்பாற்றி இருக்கிறார்?

தலாக், தலாக் என்று மூன்று முறை சொல்லி, நடுத்தெருவில் நிற்கின்ற முஸ்லிம் பெண்கள், அதே சமூகத்தை சேர்ந்த மக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுமட்டுமல்ல இன்றைய படித்த பெண்கள்,,இதை மிகவும் வரவேற்கிறார்கள்.
எங்களுடைய அடிமைத்தனத்தை விட்டு இந்த சட்டத்தின் மூலம் வெளிவந்திருக்கிறோம் என்று பேசும் அளவிற்கு முத்தலாக் சட்டம் இருக்கிறது. நடுத்தெருவில் விட்டு விட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டார்கள். அதையெல்லாம் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்வேன்.
இதையெல்லாம் முஸ்லிம் மக்கள் உங்களுக்கு இது நல்லதா? கெட்டதா?என்பதை உங்கள் மனசாட்சியுடன் நினைத்து பார்த்தால், உண்மை உங்களுக்கே புரியும்.