ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram
மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர் . இவர் பி இ படித்தவர். எட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளின் சொந்தக்காரரான இவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் ஒரு ஓட்டல். இது தவிர எட்டு வில்லாக்கள், எட்டு விலை உயர்ந்த குடியிருப்புகளின் வாடகை மற்றும் சொந்த வீடு, பங்களா போன்ற பெரிய அளவில் இவருடைய மாத வருமானம் ரூபாய் 7 கோடி .இதற்கு வரி விலக்கு, இப்படிப்பட்ட நிலையில் இவர் மும்பையில் 22 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கும்போது வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார் .
அப்போது இவருடைய இரு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கமாக ரூபாய் 460 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஆச்சரியத்துடன் வாயை பிளக்கிறார்கள் .ஆம் யாராக இருந்தாலும், ஒரு பிச்சைக்காரன் கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றால், யார் தான் வாயை பிளக்க மாட்டார்கள்? நாட்டில் தொழில் செய்து, வியாபாரம் செய்து ,தன்னுடைய உழைப்புக்கு கூட ஊழியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒருவன் பிச்சை எடுத்து உலகின் மிகப்பெரிய பணக்காரன் ஆகியிருக்கிறார் என்றால் !
இந்த நாட்டில் உழைப்புக்கு, உண்மைக்கு, நேர்மைக்கு என்ன மரியாதை ? மேலும், பாரத் ஜெயனிடம் இன்று ஒரு துறையில் 18000 பிச்சைக்காரர்கள் வேலை செய்கிறார்கள். தாராவியில் ஒரு நல்ல வீடு மற்றும் பிச்சை எடுக்கும் வாடகையாளர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு ,ஆகியவற்றிற்கு ஈடாக அனைவரின் தினசரி வசூலில் 20% தள்ளுபடி செய்கிறார். பிச்சை எடுக்கும் தொழில் செய்ய கொல்கத்தாவில் ஐ ஐ எம் படித்து ரேங்க் பெற்றுள்ளார்.
நாட்டில் பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம், எப்படியும் வாழலாம் என்பது படிக்காத மக்களாக தான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், படித்தவர்கள் கூட இப்படி ஒரு பிச்சை எடுக்கும் தொழிலை செய்து உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக வளரும் வருகிறார் என்றால், இது நம்ப முடியாத ஒன்றாக தான் இருக்கிறது.
இருப்பினும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கி இருப்பதால் இனிமேல் தான் தெரியும் இவருடைய சொத்து மதிப்பு என்ன ?மேலும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் சிண்டிகேட் பிச்சை எடுத்தது எவ்வளவு ? அனைத்தும் இனிமேல் தான் வெளிவரும் .இருப்பினும் இவர் சொத்து சேர்ப்பதில் நம்ம நாட்டு அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டார்.