(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.)
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் தாளம் போடுகிறது. அவர்களுக்கு எதனால் இது நடக்கிறது? என்ற உண்மை கூட தெரியாது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும் ,ஆனால் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் இதைப் பற்றி விமர்சனம் செய்யலாமா? இதை விமர்சனம் செய்கிறவர்கள் பெரும்பாலும் பிளாக் மணி வைத்திருப்பவர்கள். இல்லை என்றால் பா சிதம்பரம் போன்ற ஊழல்வாதியாக இருக்க வேண்டும். பணத்திற்காக நடிப்பவர்கள் சமுக மக்களுக்கு தெரியாது என்று எதையும் பேசக்கூடாது. அப்படி தான் தமிழ்நாட்டில் பல நடிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பை சினிமாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நிழல் வேறு ,நிஜம் வேறு, நிழல் உருவம் கையசைத்தால் தெரியாது. ஆனால் நிஜ உருவம் கை அசைத்தால் தெரியும்.. மேலும், அரசியல் என்பது மிகவும் கடினமான ஒன்று .அதிலும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற உண்மையான தேசபக்தியுடன் சேவை செய்பவர்கள் குறைந்து விட்டார்கள். அதனால், சினிமா நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர் சொல்லும் கருத்து, மேலே இருப்பவர்களுக்கு தெரியாது. இவரை அந்த இடத்தில் உட்கார வைத்தால், இவர் என்ன செய்வார்? நடிப்பார் .அங்கேயும் போய் நடிப்புதான் தெரியும். நடித்து பேசி விட்டு வந்தால் ,மக்களுக்கு எதுவும் வராது.
(இந்தியாவின் நோட் அடிக்கும் மெஷினை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்றது, பா சிதம்பரத்திற்கு ஞாபகம் இருக்கிறதா? பிரஸ்மீட்டில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதற்கு திணறியதாவது ஞாபகம் இருக்கிறதா? அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் இதைப் பற்றி பா.சிதம்யரம் பேசுகிறாரா? இனிமேலாவது பொதுமக்கள் யாரெல்லாம் கதறுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி)
அதனால் நடிகர்கள் , பொதுமக்கள்,சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். ஒரு காலத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் இருந்தார்கள். அவர்கள் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள். சிவாஜியின் தீவிர ரசிகர்கள். அதில் எம் ஜி ஆர் மட்டுமே அரசியளுக்கு வந்தார் .அவரே சினிமாவில் சாதித்ததை விட, அரசியலில் சாதித்தது மிகவும் குறைவுதான். அரசியலில் மக்கள் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஆனால், எதை எப்படி செய்ய வேண்டும்? யாருக்கு எதை செய்ய வேண்டும்? என்னென்ன திட்டங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஊழல் அற்ற ஆட்சியை அவரால் கொடுக்க முடியவில்லை. அவரால் சாராயம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியவில்லை. இது எல்லாம் எம்ஜிஆரின் அதிமுக ஆட்சியின் வரலாறு.
மேலும், அவர்களெல்லாம் அந்த காலத்தில் பணத்திற்காக, எப்படியும் நடிப்பவர்கள் அல்ல .பணம் ஒரு பக்கம் இருந்தாலும் மக்களின் நலனில் அக்கறை செலுத்தியவர்கள். இப்போது இருக்கிற நடிகர்கள் பணத்துக்காக மட்டுமே நடிக்கிறவர்கள். அவர்கள் எப்படியும் பேசுவார்கள் ,எப்படியும் நடிப்பார்கள் .
அதனால், அப்பாவி பொதுமக்கள் இப்படிப்பட்ட நடிகர்களிடம், ஊழல்வாதிகளிடம், இவர்களை எல்லாம் வைத்து பத்திரிகை தொலைக்காட்சி வியாபாரம் செய்யும் மீடியாக்களிடமும், உஷாராக இருப்பது நல்லது .
இவர்களிடம் ஏமாறும் இளைஞர்கள் சினிமா போதையில், கற்பனையில் வாழ்ந்து கொண்டு, கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டு ,சமூக அக்கறை இல்லாத இருப்பவர்கள் எல்லாம் இதைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் .இதை பேசும் தகுதி உள்ளவர்கள் நேராக சென்று ரிசர்வ் வங்கி இடம் பேசி விட்டு வரலாம்.