தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி, முக்கிய நிர்வாகிகள் NIA வால் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் . முக்கியமாக சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக் மற்றும் திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
சில அரசியல் தெரியாதவர்கள் என்னிடம், நன்றாக பேசுகிறார் என்று தெரிவித்தார்கள். பேசுவதற்கும், செய்வதற்கும் அரசியல் கட்சிகளிடம் சம்பந்தமே இருக்காது. செய்பவர்கள் சிலர். பேசுபவர்கள் பலர் .இப்படித்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் நிலைமை .
இதில் சீமானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் எப்படி வந்தது? இதுதான் NIA ஏவின் முக்கிய கேள்வி? இது சம்பந்தமாக முக்கிய நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. இது தவிர, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மேலும் விசாரணையில் வெளிவரும் தகவல்.
ஆக கூடி அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு பணம் எதற்காக? ஏன் வருகிறது? இதுவரை விசாரணையில் எவ்வளவு தொகை வந்தது? என்பது இன்னும் தெரிய வரவில்லை .மேலும், கட்சி நிதி என்று வசூல் செய்தாலும், இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் உள்ள தொடர்பு எதற்கு ? ஏன்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் சீமான் இருக்கிறார் .
இப்போதாவது இந்த பத்திரிகைகள், பத்திரிகை நிருபர்கள் ,தொலைக்காட்சி நிருபர்கள், youtube சேனல்கள் எந்த அரசியல் கட்சியும், என்ன செய்து கொண்டிருக்கிறது? அவர்களுக்கு எப்படி எல்லாம் பணம் வருகிறது? எப்படி எல்லாம் சொத்துக்கள் வருகிறது? எதுவும் தெரியாது. மேலும் ,மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள் ?என்பதும் தெரியாது. ஆனால் சேவை செய்வது போல் பேசுவது ,அந்த செய்திகளை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து, ஊடகங்களும் ,இது போன்ற அரசியல் கட்சிகளும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?