தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.
மேலும், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட பசுமை குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், சாலை அமைக்க பணிக்கு இடையூறாக இருந்த தமிழகத்தின் பொது இடங்களில் உள்ள பனை மரங்களை வேருடன் பெயர்த்து மாற்று இடத்தில் அதற்கு பாதிப்பு இன்றி நட்டு வளர்க்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால், ஒரு பனை மரக்கன்று வீதம், ஏழு பனைமரக் கன்றுகளுக்கு 700 பனை மரக்கன்றுகளை நட்டு, நட்ட இடத்தின் பனைமர கன்று நிழல் படங்களை எடுத்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் இதை அறிவுறுத்தியுள்ளார்,
அதைப்பற்றி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம், ஏழு பனமறைக்கன்றுகளை பிடுங்கி எரிந்து விட்டார்கள். அது காய்ந்த சருகாக காட்சியளிப்பதை பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச் சேரி ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண் உமாநாத் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பிறகு ஒன்றுக்கு நூறு பங்கு வீதம் நீர்முளை ஊராட்சியில் 700 பனை மரக் கன்றுகளை நடுவதற்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளனர் .