பத்திரிகை துறை மற்ற துறைகளை விட சமூகத்திற்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான துறை. இந்த துறையில் ஒரு பக்கம் அரசியல் தலையீடு, சில கட்சி பத்திரிகைகள்,(சிறிய,நடுத்தர பத்திரிகைகளின் தலையீடு) பத்திரிகை வியாபாரம் நிறுவனகள், இதுதான் பத்திரிகை என்ற ஒரு கட்டமைப்பை சமூக மக்களிடம் உருவாக்கி உள்ளது.
இதிலிருந்து உண்மையை மட்டும் ஆய்வு செய்யக்கூடிய மக்கள் தற்போது வெளிவந்திருக்கிறார்கள், மேலும், இது தவிர, பத்திரிக்கை என்றால் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அவரவர்க்கு என்ன தெரியுமோ, அதையெல்லாம் போட்டு ( Breaking news) செய்தி என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர,பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியாளரின் அடையாள அட்டை இருந்தாலே, நானும் ஒரு செய்தியாளன் என்று மிரட்டுகிறார்கள்.
இது எதனால்?பரந்து விரிந்த இந்த பத்திரிகை உலகத்தை இன்று ஒரு கைக்குள் கொண்டு வந்த செல்போன்கள் தான், இதற்கு முக்கிய காரணமா? இருப்பினும், எந்த நோக்கத்துக்காக பத்திரிகை என்பதை தெரியாமல், பத்திரிகையும், தொலைக்காட்சியும் இருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பணக்காரன் ,பதவியில் இருப்பவன் பொய் சொன்னாலும், இந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது.ஆனால், ஒரு ஏழை உண்மை சொன்னாலும் , அதை அலட்சியமாக பார்க்கிறது.
ஏன்? பாமர மக்களை விட, பத்திரிகை நடத்துகின்ற அல்லது செய்தியாளர்களாக இருக்கின்ற, எத்தனையோ பேர் நிலைமை இதுதான். இவர்கள் எப்படி சமூக மாற்றத்திற்காக போராடுவார்கள்? மேலும்,இவர்கள் மாற்றத்திற்காக போராடவில்லை என்றாலும், உண்மையை சொல்லக்கூடிய தைரியம் இல்லாமல், அதை சொல்லக்கூட தகுதி இல்லாமல், நானும் பத்திரிகை என்று சொல்வது ஒரு கேவலமான வார்த்தை.
மேலும், அது கார்ப்பரேட் ஆக இருக்கட்டும், சாமானிய மக்களின் பத்திரிகையாக இருக்கட்டும், இரண்டும் ஒரே நிலை தான்.இன்னும் அந்த மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படவில்லை .அந்த சமூக மாற்றம் தான் ,மக்களுக்கான ஆட்சி மற்றும் அரசியல் மாற்றம். அந்த மாற்றம் தான் அரசியல் விழிப்புணர்வு, அதை எந்த பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் இன்றுவரை செய்யவில்லை. அதற்கு காரணம் வருமானம் நோக்கி தான் இவை அனைத்தும் நிற்கிறது. தவிர, கட்சி சார்ந்த பத்திரிகைகள், வியாபாரம் நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கு மட்டுமே, மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் சலுகை ,விளம்பரங்கள் முக்கியத்துவம் ஆக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பத்திரிகை துறையின் அரசு விதி, சர்குலேஷன் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இதை நிர்ணயித்திருப்பதாகவும், தினசரி பத்திரிகை மட்டும் தான் இந்த விதி பொருந்தும் என்றும், ஒரு தவறான விதிமுறைகளை இந்த பத்திரிகை துறையில் இதனால் வரையில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது தான், முக்கிய காரணம்.
மேலும்,தொடர்ந்து 50 ஆண்டு காலமாக இதில் பல கோடிகளை சம்பாதித்த இந்த பத்திரிகைகள், அரசின் சலுகை, விளம்பரத்தை வைத்து சர்குலேஷன் காட்ட முடியும். மற்ற பத்திரிகைகளுக்கு இந்த சலுகை விளம்பரங்கள் கொடுக்காமல் எப்படி காட்ட முடியும்? இதை மாற்ற வேண்டும் என்றால், இதற்கு அரசியல் தலையீடு இருக்கக்கூடாது, முடியுமா ?
மேலும், சமூக முன்னேற்றத்திற்காக போராடும் பத்திரிகைகளுக்கு மட்டும், இதுவரை அரசின் எந்த சலுகை, விளம்பரமும் இல்லை. அது எதனால்? தவிர,பத்திரிகை ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காகவா? அல்லது மக்களின் பொதுநலத்திற்காகவா? எது? என்பதை இனியாவது மத்திய – மாநில அரசு துறை உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்வார்களா? மேலும்,
இது தவிர, மத்திய – மாநில அரசுகள் ஆன்லைன் (e – book ;e – papers) பத்திரிகைகள் அனைத்தும் முறையாக தற்போதைய காலத்தின் கட்டாயத்தில் அங்கீகரிக்க வேண்டும். அதிலும் வெளிவரக்கூடிய செய்திகளின் அடிப்படையில், கட்டுரைகளின் அடிப்படையில், மக்களுக்கான உண்மையான செய்திகளின் அடிப்படையில், அவைகளை அங்கீகரித்தாக வேண்டும்.அதுவும் அரசியல் தலையீடு இன்றி அதை அங்கீகரிக்க வேண்டும்.மேலும்,அதற்கும் அக்ரிடேசன் கார்டு accreditation card வழங்கி, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.தவிர, சென்னையில் மட்டுமே பதிவு செய்த பத்திரிகைகளுக்கு அக்கிரிடேஷன் கார்டு accreditation card கொடுக்கும் விதிமுறை எந்த மாநிலத்திலும் இல்லை. அது தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இப்படிப்பட்ட குளறுபடிகளை செய்தி துறை நீக்க வேண்டும்.
அப்படியென்றால் , இவர்களுக்கு அந்த உண்மைகள் தெரியவில்லையா? மேலும், மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்வதற்கு தான் பத்திரிகை. ஆனால்,ஆட்சியாளர்களின் பொய்யையும், அரசியல் கட்சிகளின் பொய்யையும், உண்மை போல, மக்களிடம் எடுத்து சொல்வதற்கு பத்திரிகைகள் தேவை இல்லை. அதற்கு சலுகை, விளம்பரங்கள் தேவையில்லை.
கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க தேவையில்லை. இவையெல்லாம் கருவேல மரம் முட் புதராக எப்படி ஓரிடத்தில் வளர்ந்துள்ளதோ, அது போன்று இந்த சமூகத்திற்கு எவ்வித நன்மையும் இல்லாமல் வளர்ந்து நிற்கிறது. இதன் வளர்ச்சியை தடுத்தால் தான், அரசின் திட்டங்கள், நேர்மையான ஆட்சி, ஏழை, எளிய நடுத்தர, மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும்.
அது எப்படி என்றால்? மக்களின் கோடிக்கணக்கான வரியை செய்தித் துறை இதற்கு சலுகை ,விளம்பரமாக கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரையில், இந்த மக்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா பயன்களும் இந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் வெளிவந்து கொண்டிருக்கும்.
அதனால் மத்திய – மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற செய்தி துறை உயர் அதிகாரிகள் இது பற்றி ஒரு நாளாவது சிந்தித்து இருப்பார்களா? இல்லை, இதற்கு மாற்றம் தேவை என்று நினைத்து இருப்பார்களா? இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் உண்மையான பத்திரிகையாளர்களின் கோரிக்கை.தவிர,
,அதிகாரிகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தாலும், ஆட்சியாளர்கள் அதற்கு ஒப்புக் கொள்வார்களா ?ஆனால், நீதிமன்றம் நினைத்தால், இது ஒரு சமூக அநீதி என்பதை புரிந்து கொண்டு, இதற்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தும். அப்போதாவது சமூக நன்மைக்காக போராடும் சில பத்திரிகைகள்,இந்த மாற்றங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனால், இந்த மாற்றத்தை பத்திரிகை துறையில் கொண்டு வர வேண்டும் என்று சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பாக மக்கள் அதிகாரம் பத்திரிகை,
நமது நாட்டின் பிரதமர் மோடிக்கும், : உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும், ஜனாதிபதி மூர்மூக்கும், முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், மத்திய- மாநில செய்தித்துறை அமைச்சர்களுக்கும்,புகார் அனுப்ப முடிவெடுத்துள்ளதை பத்திரிகை உலகத்திற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
Media can’t usurp courts’ jurisdiction; media trial not protected speech: Kerala High Court
-ஆசிரியர்.