பத்திரிக்கை சுதந்திரம் பொதுநலனுக்காகவா? இல்லை, அவரவர் சுய லாபங்களுக்காக கூலிக்கு மாரடிக்கும் வேலையா? இவர்களுக்கும் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது தமிழக அரசின் செய்தி துறை கொள்கை முடிவா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 05, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் பத்திரிக்கை ,தொலைக்காட்சி, youtube சேனல்கள், தேர்தல் நேரத்தில் அவர்களுடைய உண்மையான சுய ரூபம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சிலர் கரை வேட்டி மட்டும் தான் கட்டவில்லை. அத்தனையும் ஆளும் திமுக விற்கும், அண்ணா திமுக விற்கும் செய்து கொண்டிருக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .மேலும்,

மக்களே இன்று உண்மையை புரிந்து பேசினால் கூட, இவர்கள் ஒரு உண்மையை சொல்வது போல் ,பல பொய்களை தொகுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்என்கின்றனர் .இவை எல்லாம் மக்களுக்கு தெரியாது. ஏனென்றால், தெரியாத மக்களிடம் தான் இவர்கள் பேசிக் கொண்டிருக்க முடியும். தெரிந்தவர்கள் கேள்வி கேட்பார்கள்?கேள்வி கேட்கிறார்கள்.மேலும்,

மக்களிடம் சென்று செய்தியாளர் மணி திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று நேரடியாக கரைவேட்டி கட்டிக்கொண்டு ஓட்டு கேட்கலாம் .அதற்கு பதிலாக இவர்  திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால், இந்தியாவே செத்து விடும் போல் பேசுகிறார் . இதையே ஒரு யூ டியுப் சேனலில் சொல்வதை விட. கரை வேஷ்டி கட்டிக்கொண்டு மேடைகளில் பேசலாம் .பொதுமக்களாவது பத்திரிக்கை துறையை விமர்சனம் செய்யாமல் இருப்பார்கள்.மேலும்,

பத்திரிக்கை சுதந்திரம் மனசாட்சி உள்ள பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தானா? இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும், மக்களிடம் உண்மையை  போன்று திணிக்கும் திறமைசாலிகளா ? தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்று மக்களே புலம்பும் போது கூட, இவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால், பத்திரிக்கை மற்றும் யூ டியூப் சேனல்கள் சில இது போல் பேசுவது பத்திரிக்கை சுதந்திரத்திற்கும், சமூக நலனுக்கும் எதிரான கருத்துக்கள். இப்படிப்பட்ட கருத்துக்களை எல்லாம் மூத்த பத்திரிகையாளர் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? தவிர 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி போதை கலாச்சாரத்தை உருவாக்கி, மணல் கொள்ளை விசாரணை, அளவுக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு,பல அமைச்சர்களின் வழக்கு விசாரணைகள் என இப்படி ஒரு பக்கம் திமுக இருந்து கொண்டு, மற்றொரு பக்கம் மக்களுக்கு விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, மக்களின் வாழ்க்கை போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இவை அத்தனையும் ஒட்டுமொத்தமாக திமுக ஆட்சியில் நடந்துக் கொண்டிருக்கிறது.இதையெல்லாம் மக்களிடம் வெளிப்படுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது.

 ஆனால், கூலிக்கு மாரடைப்பவர்கள் போல, மனசாட்சி இல்லாமல் யூடியூப் சேனல்களில் பேசிக்கொண்டு, சில ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க ஊடகங்கள் மக்களுக்கு தேவையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி? இதற்கும் சலுகை, விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பதுதமிழக அரசின் செய்தித்துறை கொள்கை முடிவா? 

இப்படிப்பட்ட செய்தி துறையின் கொள்கை முடிவுக்கு செய்தித்துறை நிச்சயம் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். இது மக்களுடைய வரிப்பணம் என்பதை உணர்ந்து செயல்படாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்காக தான் கன்ஸ்யூமர் அமைப்பும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் சேர்ந்து, இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது.மேலும்,

ஒரு நாட்டின் நிர்வாகம், மக்களின் பொருளாதார வளர்ச்சி, தேச பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, சமூக குற்றவாளிகள் ,சமூக குற்றங்கள், இவை அனைத்தையும் அரசியல்தான் தீர்மானிக்கிறது. இங்கே அரசியலில் தீர்மானிக்க வேண்டியவர்களே, சமூக குற்றவாளிகளுக்கு உடந்தையாக,திமுகவில் பொறுப்பு கொடுத்து,இவன் மூலம் பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் வாக்குமூலம் தெரிவிக்கிறது.

 மேலும்,இதையெல்லாம் மக்கள் சிந்திக்காமல் இருக்க, இந்த ஊடகங்கள் இவர்கள் சொல்லும் சம்பந்தமில்லாத கருத்துக்களை வெளிப்படுத்தி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை முட்டாளாக்குவதற்கு ஊடகங்கள் தேவையில்லை. மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வருவதற்கு தான் ஊடகங்கள் தேவை.மேலும், இன்று தினசரி பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்ளும் நூற்றுக்கு 98 சதவீதம் ,அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது மக்களுடைய வரிப் பணத்தை ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் தமிழக அரசின் செய்தித் துறை மூலம் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

 அதில் வரும் செய்திகள் என்ன முக்கியத்துவமானது? என்பதை செய்தித் துறை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் .இதற்கு பஸ் பாஸ், சலுகை எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? என்பதை விளக்க வேண்டும். இது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும். இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் .அடுத்தது இம்பார்ட்டன்ஸ் நியூஸ் (IMPORTENCE NEWS & UN IMPORTENCE NEWS) அண்டு அன் இம்பார்ட்டன்ஸ் நியூஸ்,தவிர, அன் வாண்டட் (UN WANTED NEWS & WANTED NEWS) நியூஸ் வாண்டட் நியூஸ் எதை வேண்டுமானாலும் பக்கங்களில் நிரப்பி, செய்தித்தாள் ஆக்குவது பெரிய காரியம் அல்ல .அதற்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்க வேண்டிய அவசியம் தேவையா? மேலும்,

மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை பெறுகின்ற பத்திரிகைகள் ,சமூக நலனுக்கான முக்கியத்துவம் இல்லாமல்,எப்படிப்பட்ட செய்திகளையும் அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல் கட்சிக்காரர்களின் பொய்களுக்கும், பத்திரிக்கை சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு இதுவரை மத்திய, மாநில செய்தித் துறையில் இருந்து எந்தவித சலுகை, விளம்பரங்களும் அதன் வளர்ச்சிக்கு கொடுக்காமல் இருப்பது பத்திரிக்கை துறையே கேவலப்படுத்தும் செயல்.

 சர்குலேஷன் என்ற விதிமுறையும். தினசரி பத்திரிகை என்ற விதிமுறையும், பத்திரிக்கை துறையை அழித்துக் கொண்டு, பொது மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதாவது மத்திய, மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகளுக்கு தெரியுமா?மேலும்,இவையெல்லாம் மக்களுக்கு முக்கியத்துவமான செய்திகளா ? இது பற்றி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தது உண்டா? இவ்வளவு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து இது பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் போது கூட, அதிகாரிகள் அலட்சியப்படுத்தும் நோக்கம் என்ன?

மேலும், இந்த பத்திரிகைகளின் சர்குலேஷன் எவ்வளவு? எங்கே விற்பனை? எங்கே ரிட்டன்ஸ்? ஆடிட் ரிப்போர்ட் என்ன சொல்கிறது? பாங்க் அக்கவுண்ட் என்ன சொல்கிறது? இதைப்பற்றி எதுவும் இல்லாமல் செய்தித்துறை தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகள் என்று கொள்கை முடிவை எடுத்து செயல்படுத்தி வரும் செய்தித் துறைகளின் கொள்கை முடிவு பத்திரிக்கை சுதந்திரமா?அல்லது பத்திரிகைத்துறை ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு துறையா? அல்லது மக்களுக்கான செய்தி துறையா? இல்லை ஆட்சியாளர்களின் செய்தித் துறையா? 

இந்தத் துறை வரிப்பணத்தை பொது நலன் இல்லாமல், அரசு என்ன தவறு செய்தாலும், ஆட்சியாளர்கள் என்ன தவறு செய்தாலும், அதை எல்லாம் மறைத்து, கண்டும் காணாமல் இவர்கள் செல்லும்  அரசு செய்திகளை போடுபவர்களுக்கு மட்டுமே, பத்திரிகையின் சலுகை விளம்பரங்கள் என்றால்,பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் ,இது பொது நலனில் அக்கறை காட்டுகிறதா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக அக்கறை காட்டுகிறதா? என்பதை நீதித்துறை தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.

 மேலும், இன்று பத்திரிகை என்று சொன்னால்! அதற்கு எத்தனை பத்திரிகைகள் தகுதியானவை?தகுதியற்றவை? இணையதளத்தில் இவர்களுடைய பார்வையாளர்கள் எவ்வளவு பேர்? இந்த பத்திரிகையின் சர்குலேஷன் எவ்வளவு? மேலும், பொதுநலனின்றி, சுய லாபங்களுக்காக, பத்திரிகையா?தினசரி பத்திரிகை என்று பத்திரிகை உலகத்தை ஏமாற்றி வரும் இந்த தினசரி பத்திரிகைகள், 10 ஆயிரம் பிரதிகள் தினசரி குறைந்த பட்சமாவது அச்சடிக்க வேண்டும் . 

ஆனால் நூறு, இருநூறு, முன்னூறு, 500ம்,பல பத்திரிகைகள் அது கூட அச்சடிக்காமலே ஜெராக்ஸ் காபிகளில் 50, 100, போட்டுக்கொண்டு செய்தி துறையையும், பத்திரிக்கை உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதாவது செய்தித் துறைக்கு தெரியுமா? இப்படி இந்த பத்திரிகைகள் செய்திகளிலோ அல்லது கட்டுரைகளிலோ சமூக நலன் சார்ந்த கருத்துக்களிலோ எதுவுமில்லாமல் சில பத்திரிகைகளில் வரும் செய்திகளை காப்பி to பேஸ்ட் செய்யக்கூடிய எத்தனை பத்திரிகைகள் என்பதை செய்தித்துறை அளவீடு செய்தால், உண்மை செய்தி துறை அதிகாரிகளுக்கு தெரியும்.

 இதற்கும் சலுகை, விளம்பரங்கள், அரசு அடையாள அட்டை கொடுக்க அந்த பத்திரிகைகளுக்கு அவை தகுதியா ?என்பது கூட தெரியாமல் அதிகாரிகள் இருந்து வருகிறார்கள்.ஆனால், தகுதியான பத்திரிகைகளை புறக்கணிப்பது எக்காலத்திலும் ஏற்க முடியாது. இது பொதுமக்களை ஏமாற்றி, பத்திரிக்கை துறையை ஏமாற்றி ,பத்திரிக்கை சுதந்திரத்தை ஏமாற்றி செயல்படுவது பற்றி மக்களுக்கு தான் தெரியவில்லை என்றால், உயர் அதிகாரிகளுக்கும் இது புரியவில்லையா? 

எனவே, பத்திரிகையின் தரம் ,தகுதி வைத்து தான் அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டுமே ஒழிய இது தினசரி, வாரம், மாதம் என்ற கணக்கில் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது தவறான விதிமுறை .இதைப் பற்றி பத்திரிக்கை ஆய்வாளர்கள் ஆய்வு செய்யட்டும். தவறு இருந்தால் பதில் கொடுக்கட்டும். இது உண்மையா? பொய்யா? என்பதை விமர்சனம் செய்யட்டும் வரவேற்கிறேன்.மேலும், 

சொந்த வெறுப்பும், விருப்பும் அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய பத்திரிக்கை துறை இன்று எவ்வளவு கேவலமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பத்திரிக்கை துறை தனது பொறுப்பு மிக்க கடமையை மறந்து நடுநிலை இல்லாமல் செயல்படும்போது மிகப் பெரிய கேவலத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையும் இழந்து அது சமூக குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவாக செயல்பட்டால் ,பொது மக்களின் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் மிகவும் அச்சுறுத்தலானது .

 எனவே, தகுதியான பத்திரிகைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் தகுதியற்ற பத்திரிகைகளுக்கு கொடுத்து, கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, செய்தித் துறையின் தவறான கொள்கை முடிவுகள் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது நாட்டுக்கே ஆபத்து. எனவே, தகுதியற்ற பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் சலுகை ,விளம்பரங்கள் செய்தித் துறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை .

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *