விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! தவிர,அந்த விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா? விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்தால் வேலையாட்கள் கிடைக்காமல் ,எவ்வளவு இன்னல் படுகிறார்கள்? புயல் ,மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றங்களால், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனையோ விவசாயிகள், நிலங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை தான் விவசாயிகளின் வாழ்க்கை.
இதை கருத்தில் கொண்டு ,மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தது விவசாயிகளுக்காகவா? அல்லது பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்காகவா? என்பதை மத்திய மாநில அரசுகள் இதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ,ஒரு விவசாயி ஏக்கருக்கு சுமார் 9484 ரூபாய் காப்பீடாக செலுத்துகிறார். அவருடைய பயிர் களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர் கட்டிய பணத்தை காட்டிலும், மூன்று மடங்கு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது அரசாணை.
ஆனால், இங்கு மூன்றில் ஒரு பங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு, அதற்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கூட ,காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது. மேலும் ,2022- 2023 ஆம் ஆண்டில் காப்பீட்டு பிரிமியர் தொகை ரூபாய் 2,319 கோடிகள் வசூலித்த காப்பீட்டு நிறுவனம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அவர்கள் கட்டிய தொகைக்கு மேலாக சுமார் 20% மட்டுமே அதாவது 560 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கி இருக்கின்றன. மீதமுள்ள 1759 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தனது லாபமாக சுருட்டி கொண்டன.
மேலும், 24.25 லட்சம் ஏக்க ர் சம்பா நெல் சாகுபடி பயிர் காப்பீட்டு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சுமார் ரூபாய் 32,500 என்ற அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படப்போவதில்லை .அதனால், பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கட்டிய பிரிமியத் தொகையுடன் வெறும் ரூபாய் 10.41 மட்டும்தான் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளிடம் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது .
மேலும் ,இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை பாதுகாப்பதை விட, அவர்களுடைய வளர்ச்சியை தடுத்து, நஷ்டத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். தவிர, 2022 – 23 ஆம் ஆண்டில் 24.45 ஏக்கர் நிலங்கள் பிரதமரின் பயிர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டது. அதற்காக செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் ரூபாய் 2319 கோடி இதில் 1375 கோடியை தமிழக அரசும், ரூபாய் 824 கோடியை மத்திய அரசும், ரூபாய் 120 கோடியை விவசாயிகளும் செய்திருக்கிறார்கள்.
ஆனால், எந்த ஒரு ஆண்டிலும் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களுக்கு அரசு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படி விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை எந்த ஒரு நிறுவனமும் வழங்குவதில்லை. இதனால், பயிர் காப்பீட்டு நிறுவனங்களை, மத்திய- மாநில அரசு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை .
REPORTER – T.B.Leema