பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் கார்த்திகை சாமியை நிரபராதி ஆக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தி நோக்கம் என்ன?

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் உண்மை எழுதும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், மிகவும் குறைவு. அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை ,கௌரவம் கொடுக்க விட்டாலும், காவல்துறை பொய் வழக்கு என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மேலும்,

https://youtu.be/NHkGjGNUuhw

 கோடி, கோடியாக அரசியலில் கொள்ளையடித்து ,சொகுசு வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் தேட ஓடி வருவதில்லை. ஆனால், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு ஆசிரியரை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன்.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வரும் இவர், நன்னிலம் தாலுகாவில் உள்ள ஆணை குப்பம் என்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் கார்த்திகை சாமி என்ற ஒரு கணித ஆசிரியர் ஏழாம் வகுப்பு ,எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.இவருடைய சேட்டைகள் தொடரும் போதுபள்ளி மாணவிகள், ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியரிடம் புகாராக எழுதி, இவரைப் பற்றி கடிதம் கொடுக்கிறார்கள். இந்த விஷயம் பாலமுருகனுக்கு தெரிய வருகிறது.

 அவர் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையாசிரியர் குலசேகரனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கிறார். அதற்கான ஆடியோ ரிப்போர்ட் ஆதாரமாக உள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனுவை அனுப்புகிறார். அதற்கான ஆதாரமும் அவரிடம் உள்ளது.

மேலும், இப்பிரச்சனை சம்பந்தமாக கல்வித்துறையின் அப்போதைய திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பெயரில், டி இ ஓ விசாரணை செய்கிறார். விசாரணையில்  இவருடைய தவறு நிருபணமாகி, ஆசிரியர் கார்த்திகை சாமி  சஸ்பெண்ட் செய்கிறார்கள். கார்த்திகை சாமி  சஸ்பெண்ட் ஆறு மாத காலத்திற்கு மேல் நீடிக்கிறது. அதன் பிறகு கணித ஆசிரியர்  கார்த்திகை சாமி  CEO தியாகராஜனிடம் மறுபடியும் வேலையில் சேர கெஞ்சி கூத்தாடி பார்க்கிறார். அவர் எதற்கும் மசியாமல் பணி ஓய்வு பெற்று விட்டார் .

அதன் பிறகு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா பணி ஓய்வு பெற ஒரு மாத காலத்திற்குள் கார்த்திகைசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை  வேலையில் சேர்த்து ,இடமாற்றமும் செய்து கொடுக்கிறார். ஒரு மாவட்ட கல்வி அலுவலர் இவருடைய தவறுகளை அல்லது குற்றங்களை வைத்து இவருக்கு பணி கொடுக்க மறுத்துவிட்டார் .அதே மற்றொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா எப்படி இவருக்கு வேலை கொடுத்தார்?

 மேலும், இவர் முதலில் பணியமர்த்திய ஊர் ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி ,அதே பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் இவர் எங்கள் பள்ளிக்கு ஆசிரியராக பணியாற்ற வந்தால், எங்கள் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கும், ஆசிரியர் பெண்மணிகளுக்கும் எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி அரசு அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளரான பாலமுருகனுக்கும் ஒரு நகல் கொடுத்துள்ளனர்.

 

இந்த ஆதாரங்கள் போதாதா? இதை தவிர, ஜெயா டிவியில் வந்த செய்திகள், நியூஸ் ஜெ,யில் வந்த செய்திகள், அரசியல் ஒற்றனில் வந்த செய்திகள்  எல்லாம் பொய். ஆனால், நியூஸ் 18, ஷாலினி youtube சேனலில் வந்த செய்தி எப்படி உண்மை? மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின், மனைவி சகாயமேரி சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் குற்றவாளியா ? அல்லது

இச்செய்தியை குற்றவாளி ஆசிரியர் கார்த்திகை சாமிக்கு ஆதரவாக வெளியிட்ட நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி யூடியூப் சேனல் செய்தியின் நோக்கம்  பணமா? அல்லது சாமானிய பத்திரிகையாளர்களை பழிவாங்கும் நோக்கமா? இல்லை இப்பிரச்சனைக்கு

பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான பாலமுருகன் குரல் கொடுத்து போராடியது தவறா?  அல்லது சமூக குற்றமா? அல்லது அவர் சமூக குற்றவாளியா?  இதுதான் கார்ப்பரேட் ஊடகத்தின் உண்மைத் தன்மையா? அதாவது பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக போராடிய ஒரு பத்திரிகையாளர் மீது, குற்றவாளியின் மனைவி 20 லட்சம் கேட்டு எங்களை மிரட்டுகிறார் என்ற பொய்யை சொல்லி மக்களை நம்ப வைக்கும் மோசடி வேலையா ?அல்லது குற்றவாளிகளுக்கு துணை போகும் இவர்களுடைய ஊடக கடமையா? தவிர,

 ஒரு பக்கம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக விவாதம், மற்றொரு பக்கம் இது போன்ற பொய்செய்திகளை வெளியிட்டு, மக்களிடம் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்துவது தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான முகம். .இவர்களின் பொய்யான செய்திகளால் உண்மைகள் மறைக்கப்படுகிறது. அந்த உண்மைகளை வெளி கொண்டு வருவது சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள். மேலும்,

,நாட்டில் குற்றங்கள் பெறுகவும், மறைக்கவும், கார்ப்பரேட் நிறுவன தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மறைமுகமாக செயல்படுகிறது. எது உண்மை? எது பொய்? அதை சொல்வது தான் ஊடகத்தின் கடமை இது ஒரு புறம் இருக்கட்டும், கார்த்திகை சாமிக்கு பணியில் சேர்த்து இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அந்த இடம் மாற்றும் கூட மாணவர்கள் பள்ளியில் மட்டுமே அவரை ஆசிரியராக பணி நியமனம் செய்கிறார்கள். அப்படி என்றால், இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், இதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்ட

கார்த்திகை சாமி தற்போது குடவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.இந்த நேரத்தில் கார்த்தி சாமியை 20 லட்சம் கேட்டு பாலமுருகன் மிரட்டுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தி வெளியிடுகிறது. இந்த குற்றச்சாட்டை யார் சொல்கிறார்கள்? என்றால், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி சகாயமேரி சொல்கிறார். மேலும்,

இந்த செய்தியை நியூஸ் 18 ன் தொலைக்காட்சிக்கு கொடுத்த நிருபர் ராஜசேகர் செய்தியை வெளியிடுவதற்கு முன் ஆதாரத்தை கொடுத்திருக்க வேண்டும். அல்லது நியுஸ் 18 தொலைக்காட்சியின் ஆசிரியராவது அதற்கான ஆதாரத்தை கேட்டிருக்க வேண்டும்.

 தவிர, இது சம்பந்தமாக ஆடியோ அல்லது வீடியோ தெளிவாக வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால்,எதுவுமே இல்லாமல் ஒரு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவி சகாயமேரி சொன்னதை வைத்து எப்படி ? இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை நியூஸ் 18 ன் தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தியாளர் இளவரசன் சொன்னதை வெளியிட்டுள்ளது? இப்படி தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது

நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர கொடுக்கப்பட்ட வழக்கறிஞர் நோட்டீசுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிக்கையாளர் பால முருகன். அதனால், கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மையான முகம் பொதுமக்களுக்கு தெரியாது. அந்த உண்மை முகம் அனுபவமுள்ள பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தெரியும் என்பதை மறந்து விடக்கூடாது .

மேலும் ஒரு உண்மையை வெளியே கொண்டு வரும் வேலை தான் ஊடகத்தின் கடமை. ஆனால், வெளியே கொண்டு வர போராடும் சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடக கடமை அல்ல . இனியாவது கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை நிலை என்ன ?என்பது பற்றி இப் பிரச்சனையின் மூலம் பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்,புரிந்து இருக்கும்.

இருப்பினும், இச்சம்பவம் முதல்வர் மு க ஸ்டாலினின் சொந்த திருவாரூர் மாவட்டத்தில் நடந்திருப்பதால், மேலும் இது போன்ற சம்பவங்கள் மாணவிகளுக்கு நடக்காமல் இருக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இப் பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா ?  என்பது அம் மாவட்ட மக்களின் முக்கிய ஆதங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *