திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த அண்ணாமலைக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் திமுக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
அதனால் அவர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது அண்ணாமலை சொன்ன ஊழல் புகாருக்கும், சொத்துக் குவிப்புக்கும், திமுக தொடுக்கின்ற ஒரு அரசியல் யுத்தம் என்று தான் சொல்ல வேண்டும். இதுபோல் திமுகவின் கூட்டணி கட்சிகளின் அறிக்கைகள், போராட்டங்கள் அது ஒரு புறம் இருக்கும். மற்றொருபுறம் திமுகவிற்கு ஆதரவான அமைப்புகள், இந்த போராட்டத்தில் ஈடுபடலாம்.
மேலும்,இதற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக பத்திரிகை தர்மத்தையும், அதனுடைய கடமையும் மதிக்காமல், கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக பல பத்திரிகை, தொலைக்காட்சிகள் இந்த அரசியல் யுத்தத்தில் ஈடுபடலாம். அதற்கு தேவை பணம், சலுகை அதனால், உண்மையை மறைத்து என்ன பொய் சொன்னாலும் அதை அப்படியே வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்.மேலும்
சுயநல அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கிரிமினல்களுக்கும், மோசடி பேர்வழிகளுக்கும், உழைக்காமல் ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கும், இவை எல்லாம் இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை வைத்து கும்மி பாட்டு பாடிக்கொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு தகுந்தார் போல் யார் ஓத்து ஊதுவார்களோ, அதை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
இது தவிர, அம்பேத்கரை வைத்து அரசியல் செய்பவர்கள், அவருடைய கொள்கையை மறந்து, மனசாட்சியை மறந்து ஜாதியை பெரிதாக நினைத்துப் பேசிக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும், திருடனும், கொள்ளையடிப்பவனும் அரசியலில் நல்லவர்கள் வேஷம் போட்டுக் கொண்டு, சமூக நன்மைக்காக பாடுபடுவது போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் அரசியல் தெரிந்தவர்கள் ஏமாற மாட்டார்கள். தெரியாதவர்கள் இப்போதும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.மேலும்,
அந்த மக்களுக்கு எப்போது விழிப்புணர்வு ஏற்படும்? எப்பொழுது அவர்கள் உண்மையை மனசாட்சியோடு பேசுகிறார்களோ, அப்போது அந்த மக்களும் இந்த ஏமாற்றத்திலிருந்து விடுதலை பெற முடியும். இல்லையென்றால் ஜாதியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் கூட்டம், அரசியல் ஊழல்வாதிகளோடு கைகோர்த்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இப்படித்தான் போராடிக் கொண்டிருப்பார்கள். மக்கள்தான் ஏமாறாமல் விழித்துக் கொள்வது ஒவ்வொரு வாக்காளர்களின் புத்திசாலித்தனம்.
மேலும், திமுக வின் வாய்ச்சொல் வீரர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள்? அக்கால முதல் இக்காலம் வரை பேசத் தெரிந்த பேச்சாளர்கள். மைக் கொடுத்து விட்டால் போதும், மைக்குக்கு தான் வலிக்கும், இவர்களுக்கு வலிக்குமா? என்பது தெரியவில்லை. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேடையில் பேசும்போது நன்றாக தான் இருக்கிறது. அவர் சொல்வது போல், மக்களிடம் மைக்கை நீட்டி கேளுங்கள் என்கிறார்.
அப்படி கேட்டால், ஒவ்வொரு மாவட்டத்திலும், தங்கள் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏ, எம்பிக்கள், எப்படி செயல்படுகிறார்கள்?என்பதை புரிந்து கொள்ள, நேர்மையான அதிகாரிகள் எப்படி புலம்புகிறார்கள்?பொதுமக்கள் எப்படி புலம்புகிறார்கள்? சமூக ஆர்வலர்கள் எப்படி புலம்புகிறார்கள்? சமூக நன்மைக்காக போராடுகின்ற பத்திரிகைகள் எவ்வாறு போராடுகிறார்கள்? என்பதை உளவுத்துறை மூலம் தமிழக முதல்வர் ஆய்வு செய்து பார்த்துக்கொள்வது நல்லது.