மக்கள் அதிகாரம் மக்கள் நலன் சார்ந்தது,நான் சில நண்பர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போல, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அது உண்மைதான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ,
ஆனால், அதே சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நீங்களும், கவர்னர் ஆர். என். ரவியும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்னும் மோசமாக, கேவலமான நிலைக்கு வந்திருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், நான் மக்கள் அதிகாரத்தில் பலமுறை குறிப்பிட்டது போல, இன்று தமிழ்நாட்டில் பிஜேபி இல்லையென்றால், எதிர்க்கட்சி இல்லை என்று இதை கடந்த வருடமே சொல்லிவிட்டேன்.
தவிர, திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும், கடந்த காலங்களில் கூட குற்ற வழக்குகளை எடுத்துப் பாருங்கள். அதிமுக ஆட்சியை விட அதிகமாக தான் இருக்கும். இதற்கு காரணம், திமுகவில் ரவுடிசம் அதிகம். அதைவிட குறைவு அதிமுகவில், இது பொது மக்களுக்கு தெரிந்த உண்மைதான். ஆனால், எப்படியோ இவர்களுடைய அதிர்ஷ்டம் ,மக்களுக்கு துரதிஷ்டமாக இருக்கிறது. அதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவோ உண்மைகளை எடுத்துச் சொல்கிறோம். அரசியல் கட்சி என்றால் என்ன? அரசியல் பற்றி அடிப்படை விஷயங்கள் எல்லாம் மக்களுக்கு சொன்னாலும், மக்கள் இந்த உண்மை உடனடியாக அதை புரிந்து கொள்ளும் அளவில் அவர்களுடைய மனநிலை இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு வலி ஏற்பட்டால் மட்டும்தான் துடிக்கிறார்கள். அந்த வலிக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் தனக்கு வெள்ள நிவாரண பணம் வரவில்லை என்றால் கத்துகிறார்கள். அதே போல் தான் அரசு அதிகாரிகளும், தான் பாதிக்கப்படும்போது தான், அவர்களுக்கு திமுகவின் ஆட்சி மிகவும் மோசமானது என்று தெரிவிக்கிறார்கள். அதுவரை யாரும் சொல்வதில்லை. ஆனால், ஒரு சில துறையில் உள்ள சில நண்பர்கள் இந்த ஆட்சியை பற்றி என்னிடம் சொல்லும்போது, அதிமுகவே மேல், அவர்களாவது நாங்கள் பார்த்துக் கொடுத்தால் வாங்கி கொள்வார்கள்.இவர்கள் நீங்கள் கையெழுத்து மட்டும் போடுங்கள் மற்ற எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
மேலும், திமுகவில் அரசு அதிகாரிகளை மிரட்டுவது, கொலை செய்வது, காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவது, பெண் காவலர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது, இது எல்லாம் அவர்களுடைய அதிகார ஆணவத்தின் உச்சம் .மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை, திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் என்ற நபர் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.
இது திமுக ஆட்சியில் காவல்துறையின் மாண்பு எந்த அளவிற்கு கீழ் இறங்கி இருக்கிறது என்பது காட்டுகிறது. ஒருவர் கட்சிக்காரர் என்ற ஆணவத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் காவலரை தாக்க முடியும் என்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன ?
பொது மக்களுக்கு இப்போதுதான் திமுக ஆட்சியின் அராஜகம், அடாவடித்தனம், ரவுடிசம் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல, இவர் தனது 2006 to 2011 ஆட்சிக்காலத்தில் செய்த அடாவடிகளால் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்ததை திமுக மறந்துவிட்டதா? தவிர,
பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக குண்டர்களை போல், பொதுமக்களும் சட்டத்தை கையில் எடுத்தால், திமுகவினருக்கு தெருவில் கூட இடம் இருக்காது. என்பதை மறந்து விட வேண்டாம். பெண் காவல் அதிகாரியை தாக்கிய ஸ்ரீதரன் என்ற திமுக நபரை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் அவரது அண்ணன் ஜீவானந்தம் என்ற நபரை உடனடியாக பதவி நீக்க செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.