பாண்டிச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால், தமிழக மக்கள் திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியது தமிழகத்தின் துரதிஷ்டம்.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

 மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்களுக்காக செயல்படுத்தும் போது தான் அது மக்களுக்கான ஆட்சி ! அந்த வகையில் புதுவை முதல்வர் ரங்கசாமியை அங்கு உள்ள மக்கள் சிறிய விஷயத்துக்கு கூட, அவரை எளிதில் பார்த்து தங்கள் பிரச்சனைகளை முறையிடுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அவர்களுடைய முகத்தைக் கூட பார்க்க முடியாது. கார் கண்ணாடி தான் பார்க்க முடியும்.மேலும், அந்த காலத்தில் இருந்த மக்கள் தலைவர்கள், முதலமைச்சர்கள், எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்களோ, அதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் புதுவை முதல்வர் ரங்கசாமி. அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள் புதுவை மக்கள். ஆனால்,

தமிழ்நாட்டில் அது பெரிய விஷயமாக இருந்தாலும் ,முதலமைச்சரை சந்திக்க முடியாது .ஏன் பத்திரிகைகள் கூட சந்திக்க முடியாது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த துரதிஷ்டம். ஒரு முதல்வர் என்ற பாகுபாடு இல்லாமல், மக்களோடு மக்களாக இருக்கும் அவருடைய ஆட்சி ,இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் செய்யாத ஒரு ஆட்சி தான் புதுவை முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி.இங்கு,

முதல்வருடைய பி. ஏ. வை கூட பார்த்து கோரிக்கைகளையோ அல்லது பிரச்சனைகளையும் சொல்ல முடியாது. ஏன் மந்திரிகளிடம் சொன்னால் கூட நடந்து விடப் போகிறதா? இப்படி வாங்கி அப்படியே குப்பையிலே போட்டு விடுவார்கள். அதிகாரிகள் அதற்கு ஏதாவது ஒரு பதிலை எழுதி நடவடிக்கை எடுக்காமல், அதையும் குப்பியிலே போடுகிறார்கள். இதுதான் நம் தமிழ்நாட்டில் நடக்கின்ற மக்களாட்சி. இதற்கும் பாண்டிச்சேரியில் நடக்கின்ற மக்களாட்சிக்கும் எவ்வளவு வித்தியாசம்? என்பதை நம் தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் .இதை நான் நேரில் சென்று பார்த்து தான், இந்த உண்மையை தமிழக மக்களுக்கு, மக்கள் அதிகாரம் சார்பில் இந்த செய்தியை வெளியிடுகிறேன்.

உண்மை தெரியாமல், அரசியல் தெரியாமல் ,நீங்கள் ஏமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்கம் ஜாதியாலும், இன்னொரு பக்கம் மதத்தாலும், இன்னொரு பக்கம் அரசியலாலும், உங்களை நன்றாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மதம் வேறு, ஜாதி வேறு ,அரசியல் வேறு, என்று கூட தெரியாமல், நம் மக்கள் ரூபாய் 1000 ,2000 ஆயிரம், 500, டாஸ்மாக் பாட்டில், பிரியாணி, இலவசம் இதற்காக வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இன்னும் அரசியல் தெரியாத அப்பாவி மக்கள், புரியாத மக்கள் ஏமாந்து வாக்களித்து, இன்று புலம்பும் நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் மனசாட்சி உள்ள அதிகாரிகள் புலம்புகிறார்கள், சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள், சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த மக்களுக்காக போராடுகிறார்கள். போராடி என்ன பயன்? நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் நேர்மையான மக்களுக்காக, செயல்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவில்லை.ஏன் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை. மேலும்,

தமிழ்நாட்டில் ஒரு மந்திரி கூட ஊழல் செய்யாத மந்திரிகள்? வழக்குகள் இல்லாத மந்திரிகள்? ஒருவர் உண்டா? இல்லை. இது எதனால்? உங்களுக்கு அரசியல் தெரியவில்லை. இப்படி தெரியாமல் அவர்களுடைய பொய்களை நம்பி ,ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்களை தான், சில கார்ப்பரேட் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் உங்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகளே விழித்துக் கொள்ளுங்கள்.

இளைய தலைமுறைகள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், ஊரை ஏமாற்றுபவன் அதி புத்திசாலியாகவும், ஊர் சொத்தை கொள்ளை அடிப்பவர்கள் திறமைசாலியாகவும், அதற்கு உடந்தையான அதிகாரிகள் அறிவாளிகளாகவும், இருப்பதை உங்கள் காலத்திலாவது மாற்றம் கொண்டு வர முடியுமா ?

மேலும், நம் பக்கத்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்து மக்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அரசியல், ஆட்சியாளர்கள்? அங்கு எப்படி இருக்கிறார்கள்? எப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்? என்பதை தீர்மானியுங்கள்.இது

 ஒருவேளை தமிழக மக்கள் செய்த பாவத்தின் சம்பளத்திற்காக, இறைவன் இப்படிப்பட்ட ஆட்சியாளர்களையும், அரசியல் கட்சிகளையும் கொடுத்திருக்கலாம். அந்த கணக்கும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. அதனால், மனசாட்சி உள்ள மக்கள், உண்மையை பேசுகின்ற மக்கள், சிந்திக்கின்ற மக்கள், தர்மத்தை கடைபிடித்து வாழ்கின்ற மக்கள், ஒரு போதும் தவறானவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால், மக்கள் எவ்வழியோ, மன்னனும் அவ்வழி தான் . புதுச்சேரி மக்கள், மனசாட்சி உள்ள மக்கள், அதனால் தான், மனசாட்சி உள்ள முதல்வரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்,

முதலில் மக்கள் திருந்தங்கள். மக்கள் கொடுக்கின்ற அதிகாரம் தான் மக்களாட்சி .அது தமிழ்நாட்டில் மக்களுக்காக இல்லை .அது அவர்களுக்காக! அவர்கள் குடும்பத்திற்காக! இருக்கிறது என்பதை சொத்து பட்டியல், ஊழல் பட்டியல், பார்த்துக் கூட நீங்கள் திருந்தவில்லை என்றால், நீங்கள் எல்லாம் வாக்காளர்களாக சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம் இல்லை. மேலும் அது சிறிய மாநிலம் என்று சொல்வார்கள். மாநிலம் சிறியதாக இருந்தால் என்ன? பெரியதாக இருந்தால் என்ன? ஆட்சி எப்படி இருக்கிறது? அரசியல் எப்படி இருக்கிறது? அது எப்படிப்பட்ட ஆட்சி? அதுதான் தேவை .

உதாரணத்திற்கு சிறிய பத்திரிகையாக இருந்தால் என்ன? பெரிய பத்திரிகையாக இருந்தால் என்ன? அதில் உள்ள உண்மை தான் தேவை. அளவு தேவையில்லை. இது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, செய்தி துறை அதிகாரிகளுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும்.

மக்களின் நலனில் என்றும் மக்கள் அதிகாரம்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *