நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் .
அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி ஆகியோர் மனு மீதான உண்மை தன்மையை மனுதாரர் நிரூபிக்க வேண்டும். இதற்காக ஹைகோர்ட் கிளை பதிவாளர் முன்பு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். இதை நீதிபதிகள், அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொண்டு ,அதற்கு நீதி வழங்குகிறார்களா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையேயும் வழக்கறிஞர்களிடையேயும் எழுந்துள்ளது.
மேலும் ,அப்படி உண்மையென்று நீதிபதிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டால், சட்டமும் ,நீதிமன்றமும் பொது மக்களுக்கு தேவையில்லை. தவிர,உண்மைத்தன்மை என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் அல்லவா? பொதுநல வழக்கு தொடர்ந்தவர் உண்மை தன்மையை ஆராயும் நீதிபதிகள் ,அதே போல் அரசு அதிகாரிகள் மற்றும் குத்தகை எடுத்தவர் உண்மைத்தன்மையை ஆராய வேண்டியது முக்கிய கடமை.
இரு தரப்பும் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததால் தான், உண்மை நீதிபதிகளுக்கு தெரியவரும். அந்த வகையில் நீதிபதிகள் அரசு அதிகாரிகள் சொல்வதை மட்டும் எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்கிறார்கள்? அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையில்லா? இந்த தீர்ப்பு அங்கே என்ன நடக்கிறது? என்பதை தாங்களோ, தங்களை சார்ந்தவர்களோ நேரில் சென்று ஆய்வு செய்தால் தான், உண்மை நீதிபதிகளுக்கு புரியும் .ஒரு பக்கம் சட்டத்தின் படி பேப்பர் இருந்தால் மட்டுமே பொதுநல வழக்கு என்று தெரிவிக்கிறார்கள். சட்டம் பேப்பரில் தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதற்கு தான் பொதுநல அக்கறை உள்ளவர்கள் வழக்கு தொடர்கிறார்கள். மேலும்
ஒரு குளத்திற்கோ அல்லது ஏரிகளுக்கோ அல்லது ஆறுகளுக்கோ மணல் அள்ளுவதற்கோ அல்லது சவுடு மண் எடுப்பதற்கோ மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் உத்தரவு வழங்கி விடுகிறார்கள். ஆனால், அதில் எத்தனை லோடு எடுக்க வேண்டும்? என்றும் தெரிவிக்கிறார்கள். சுமார் ஒரு ஏரியில் அல்லது ஒரு குலத்தில் 5000 லோடு எடுப்பதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படுகிறது .
ஆனால், அந்த எல்லையை, எந்த கனிமவளத்துறை அதிகாரியும் வரையறுப்பதில்லை .அதன் பிறகு எத்தனை லோடு எடுத்தார் என்ற கணக்கும் அவர்கள் கொடுப்பதில்லை. அந்த கணக்கு பொய்யான ,போலி கணக்கு தெரிவிக்கிறார்கள். இதனால், கூட்டுக் கொள்ளை இந்த கனிமவளத் துறையில் தொடர்வதை சமூக ஆர்வலர்கள் பொதுநல வழக்கு தொடரும்போது, நீதிபதிகள் முட்டுக்கட்டையா?
மேலும், எந்த ஒரு குவாரிகளிலும், சொன்ன விதிமுறைப்படி அல்லது அரசு உத்தரவு வழங்கிய எத்தனை லோடு என்றுதான் குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது 3000, 5000 ,2000 இது போன்று யாரும் எடுப்பதில்லை. கணக்கிற்கு தான் அதிலே 5000 லோடு என்று பணம் கட்டுவார்கள். ஆனால் ,அந்த ஏரி மண்ணையே காலி செய்து விடுவார்கள். அது மட்டுமல்ல, அதனால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதிப்பு, பின் விளைவுகள் எதை பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
இதில் தனியார் குத்தகை எடுத்தவரும், அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பது தான், இந்த கனிம வள கொள்ளை. இதை எதிர்த்து ஒருவர் வழக்கு தொடர்வதே மிகப்பெரிய விஷயம். காரணம் ,அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அவர் எங்களை பணம் கேட்டு மிரட்டுகிறார் என்ற வடிவேல் காமெடி போன்ற கொடுமைகளையும், அவர் அனுபவிக்க வேண்டும் .அதாவது திருடன் ,கொள்ளையடிப்பவன், அதி புத்திசாலி என்பதை நாட்டில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அரசியல்வாதியாக இருந்தாலும் என்ன ?சாமானிய மக்களாக இருந்தாலும் என்ன? இரண்டும் ஒன்றுதான்.
இவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள். அவன் எடுக்கவில்லை. அவ்வளவுதான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். இதில் நீதிபதிகள் இரண்டு பேர் சொல்லுகின்ற கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுதான் தீர்ப்பு வழங்குகிறார்கள். அப்படியானால், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் சொல்லுகின்ற பொய்யை மட்டும் ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? அந்த உண்மையை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டாமா? யார் சொன்னது பொய் ?யார் சொன்னது உண்மை? என்பதை இவர்களே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், இவர்களுக்கு ஒரு முக்கியமான ஒருவரை அனுப்பி அங்கே ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பது புரியும். அதனால், நீதிபதிகள் இது போன்ற டெபாசிட் தொகை அல்லது அபராதம் விதிப்பதை உச்ச நீதிமன்றமும், சட்ட ஆணையமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.