பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram
தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

மேலும், அவர்கள் கேட்கின்ற ஒரு கேள்வி? இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஓபிஎஸ், இது பற்றி அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்படி போலியான பட்டாக்களை கொடுத்து ,அவர்களுக்கு மரியாதை செய்வதற்கு பதிலாக அவமரியாதை செய்து விட்டார்கள். இது இப்படி இருக்க, அவருடைய மகன் ரவீந்திரநாத் எம் .பி. தேர்தலில் எவ்வித வில்லங்கமும் வந்து விடக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் அவசரகதியில், அதுவும் அனைத்து பத்திரிகையாளர்களின் வீட்டிற்கு சென்று, R. I , தாசில்தார், விஏஓ ,ஆகிய அனைத்து அலுவலர்களும், அவரவர் பத்திரிக்கையாளர்கள் வீட்டிற்கு சென்று அவர்களது பெயரில் சொத்து இல்லை என சான்று வழங்கிய பின், அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பரிந்துரையின் படி 54 பத்திரிக்கையாளர்களுக்கு பட்டா வழங்கி ஏமாற்றி இருக்கிறார்களா?

இந்த குமுறல், ஒவ்வொரு செய்தியாளர்களுக்கும் இருந்து வருவதோடு அதை வெளிப்படுத்த முடியாமல், ஆட்சியாளர்களுக்கு பயந்து இந்த உண்மையை மறைத்து வருகின்றனர். மேலும், ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த இடத்தில் ஒரு செய்தியாளரை எனக்கு 40 வருடமாக தெரியும், 30 வருடமாக தெரியும் என பெருமையாக சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட செய்தியாளர்களுக்கும் இடம் வழங்காதது ஏன்? எங்களுக்கு புரியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இது தவிர, இவர்கள் எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த பட்டா வழங்கினார்களா? அல்லது லட்சுமிபுரம் கிணற்றை பத்திரிக்கையாளர்கள் பிடுங்கி கொடுத்து விட்டார்கள் என்ற காரணத்திற்காக தேனி மாவட்ட செய்தியாளர்களை பழி வாங்குகிறார்களா ? இப்படி ஒவ்வொன்றும் அவர்கள் மனதிற்குள் தேக்கி வைத்து, இந்த மனக்குமுறல்களை எமது செய்தியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லிச் சென்ற தேனி மாவட்ட திமுகவின் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு 5 சென்ட் இடம் இலவசமாக வழங்குவோம் என்று சொன்னார் .ஆனால் சொன்னது போல, ஆட்சி அமைந்தது. நான்காண்டுகள் நிறைவடைந்து, மீண்டும் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் வரப் போகிறது. ஆனால், எங்களுக்கு சொன்ன வாக்குறுதி படி இலவச இடம் தான் கொடுக்கவில்லை.

இப்படி இவர் ஒருபுறம் என்றால், மற்றொரு புறத்தில் தேனி மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களிடமும், இந்த செய்தியாளர்கள் 19 முறை நினைவுப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்போது, நானே பல மாவட்டங்களுக்கு ஆட்சியில் இருக்கும் பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு பட்டா வழங்கினேன். அதேபோல் இம்முறையும் தேனி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு நானே பட்டா வழங்குவேன் என ஒவ்வொரு முறையும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வந்துள்ளார். ஆனால், நான்காண்டுகள் கடந்து விட்டது. பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வந்த பாடு இல்லை.

இதைவிட ஒரு முக்கிய செய்தி என்னவென்றால்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேனி மாவட்டத்திற்கு வந்தபோது அவர்களிடமும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு கொடுத்து இருக்கிறார்கள். கொடுத்து வருடம் ஆகிவிட்டது. ஆனால், இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வரவில்லை. இதில் என்ன ஒரு கூத்து? ஒருவேளை இன்னும் பத்து மாதங்களில் தேர்தல் நெருங்குவதால் ,அவர்களுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடக்கூடிய பத்திரிகையாளர்கள் தேவைப்படுவார்களே என்ற எண்ணத்தில் மீண்டும் இது போன்ற பொய் பட்டா வழங்குவார்களா? அல்லது இதுவும் இல்லாமல் ஏமாற்றுவார்களா? என்ற ஆதங்கத்துடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள் மனக் குமுறல் .