ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள்.
ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. இதற்குள் பல பிரச்சனைகள் இருதரப்பிலும் ஏற்படுகிறது. ஒரு பக்கம் உயிரிழப்பும் வரலாம், மற்றொரு பக்கம் சண்டை சச்சரவுகளும் ஏற்படலாம்.இப்படி இந்த சொத்து பிரச்சனைகளால் பல பிரச்சனைகள் தொடர்கிறது .அந்த வகையில் போலி பத்திர பதிவும் ஒன்று .
மேலும், பல வழக்கறிஞர்கள் இதை வாய்தா வாங்கிக்கொண்டு, இரு தரப்பிலும் பணத்தை வாங்கிக்கொண்டு காலதாமதம் செய்வதால், நியாயம் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் பாதிக்கப்படுவது நாங்கள் தான் என்கிறார்கள் பொதுமக்கள் .
இதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டு இந்த சட்டம் மக்கள் நலனுக்காக தமிழக அரசு கொண்டு வந்தது. இதை ரத்து செய்ததால் பொதுமக்கள் வேதனையை அடைந்துள்ளனர் .