மே 31, 2024 • Makkal Adhikaram
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி, இதில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலை களைய வேண்டும் என்றால் பயோமெட்ரிக் முறையில் பணித்தளத்தில் கைரேகை பதிவின் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது .அதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு பருத்திச் சேரி ராஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா வந்த பிறகு ஊராட்சிகளில் முறைகேடுகள் தடுப்பதற்கு முக்கியத்துவம் தருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் எந்தத் துறைக்கு போனாலும், அந்த துறையில் இவருக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்துவிட்டு தான் வெளி வருவார். அந்த வகையில் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வந்ததும், இவர் வந்த பிறகுதான்.
இதில் எப்படி ? இந்த ஊழல் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நடைபெற்று வந்துள்ளது என்று பொதுமக்களும் நினைக்கலாம். அதாவது பஞ்சாயத்து தலைவருக்கு வேண்டியவர்கள், அவர்கள் சொந்தக்காரர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள் ,இவர்கள் அனைவரும் வேலைக்கு வராமலே, இந்த பணத்தை அவர்களுடைய அக்கவுண்டுகளுக்கு போய்க் கொண்டிருக்கும். இதை தான் திருவள்ளூரில் பஞ்சாயத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஒருவரிடம் நான் இதைப் பற்றி சொன்ன போது, அவர் வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக பேசினார்.இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் அக்கவுண்டுகளுக்கு போய் விடுகிறது .இதில் ஊழலோ, முறைகேடோ நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்..நான் சொன்னேன் இந்த விஷயத்தை அப்போதே கேள்விப்பட்டேன்.
இன்னும் கேட்டால் ஒரு நண்பர் ஒருவர்( வட்டார வளர்ச்சி அலுவலர்) என்னிடம் சொன்னார் .அப்போது இருந்த ஒரு மாவட்ட ஆட்சியர் இந்த பணத்தில் ஏழு பர்சன்ட் கமிஷன் கொடுங்கள் என்று கேட்டார் என்று சொன்னார் . அதிமுக ஆட்சி ,அந்த அம்மாவின் கணவர் தான் எல்லா காண்ட்ராக்ட் முதலாளிகளுக்கும் உறுதி செய்பவர். அதன் பிறகு அந்த அம்மா சென்ட்ரல் விஜிலென்ஸில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கம்ப்ளைன்ட் கொடுத்து, வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமி வெளியே தூக்கி போட்டார்.தற்போது
இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வந்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக ஆர்வலர் பருத்திச் சேரி ராஜாவை கிராம மக்கள் பாராட்ட வேண்டும். ஏனென்றால், உண்மையிலேயே அவருடைய பொது சேவை எந்த எதிர்பார்ப்பு இன்றி இதை செய்துள்ளார். இதனால், எந்த நோக்கத்திற்காக மத்திய மாநில அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்ததோ ,அதன் பயனாளிகள் இனி நன்மை அடைவார்கள்.
மேலும், ஒவ்வொரு பஞ்சாயத்து நிர்வாகத்தையும்,உள்ளாட்சி நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளையும், இந்த போலி கணக்குகள் மூலம் ஆடிட்டில் சரி செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் சிஏ படித்தவர்கள் தலைமையில் ஆடிட்டர்கள் டீம் கணக்குகளை சரி பார்க்க வேண்டும். பஞ்சாயத்து என்றாலே, பொது சொத்துக்களை பங்கு போட்டு சாப்பிடும் வேலை என்றும், அந்த பொது சொத்துக்களை பங்கு போட்டு சாப்பிட உடம்பை காட்டி ஊரில் பொதுமக்களை பயமுறுத்தி விடலாம் என்ற நினைப்பில் தான் இப்போது ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்களும், ஊரில் உலா வருகிறார்கள்.
ஏனென்றால் ,உடம்பு பார்த்து மக்கள் போய்விடுவார்கள் .அதே சமயம் எவனும் நம்மை கேள்வி கேட்க மாட்டான். அப்படியும் கேள்வி கேட்டால், ஒவ்வொரு ஊரிலும், எப்படியும் ஒரு 20, 30 குடிகாரர்கள் இருப்பார்கள் .அந்த குடிகாரர்களை சரி செய்து விட்டால், அவர்கள் எல்லோரும் தலைவர் வாழ்க என்று சொல்லிக் கொண்டு, இந்த குடிமகன்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதனால், பஞ்சாயத்து நிர்வாகத்தை இனி தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் நடைபெறுகின்ற ஊழல்களுக்கு உயர் அதிகாரிகள் மட்டத்தில் புகார் அளித்து தீர்வு காணும் என்பதை கிராம மக்கள் சார்பில் இதை தெரிவிக்கிறோம் .
அதற்கு இதுபோன்ற ஆடிட் அக்கவுண்ட் முதல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய பொறியாளர்கள்,மாவட்ட பொறியாளர்கள் பணியின் தரம் எவ்வளவு? இந்த பணியை பஞ்சாயத்து தலைவர்கள், சொந்தக்காரர்கள் அல்லது இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்த வேலைகள் கொடுக்கப்படுகிறதா? இதையெல்லாம் ஆய்வு செய்ய ஒரு தனி டீம் உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகை தெரிவித்து வந்துள்ளது.
அது மட்டுமல்ல, இன்று பஞ்சாயத்து நிர்வாகத்தை ஆன்லைனில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலில் இந்த திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது மக்கள் அதிகாரம். அதனால், ஊராட்சிகளில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுக்க உடனடியாக எந்த வேலை எது நடந்தாலும் என்ன செயல்பாடுகளில் உள்ளது என்பதை கிராம மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் தெரிவிக்க வேண்டிய கணக்கு வழக்குகள் அத்தனையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இவ் விஷயத்தை செயல்படுத்திட வலியுறுத்தி வருவதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன் .