ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram
திமுக, பிஜேபி இரண்டும் எதிர், எதிர் துருவமாக இருந்து வந்த அரசியல் கட்சிகள் இன்று கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் ஒன்று கூடி, விழா மேடையில் சந்திக்கிறார்கள்.
மேலும், சில தினங்களுக்கு முன் சுதந்திர தின விழாவின் போது, ஆளுநரின் தேநீர் விருந்து விழாவிலும் முதலமைச்சர் ,அண்ணாமலை ,ஆளுநர் சந்தித்து தேநீர் விருந்து ஒன்றாக சாப்பிட்டார்கள்.
இவர்களை பிடிக்காதவர்கள் ஒரு பக்கம் திமுக வையம் ,இன்னொரு பக்கம் பிஜேபியும் மாறி ,மாறி பத்திரிகைகள் இவர்களுடன் சேர்ந்து போட்டி ,போட்டு இவர்கள் சொல்வதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தார்கள். தவிர, சொல்லாததையும் எழுதிக் கொண்டிருந்தார்கள் .
மேலும், இந்த இரண்டு கட்சியின் ஐடி விங்கும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் கூட அடைத்தார்கள். பாவம் அம்பாக இருந்தவர்கள் நிலை! இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா?
அதேபோல், இரண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை சச்சரவுகள், போட்டி பேச்சுக்கள், இது எல்லாம் நடந்து முடிந்த கதை என்றாலும், மக்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஓட்டுக்கு பணம் தான் குறிக்கோள். ஆளும் கட்சியினருக்கு அரசியல் வியாபாரம் தான் குறிக்கோள். இரண்டு பேர் குறிக்கோளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
மேலும், இதையெல்லாம் எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்ய நல்ல வாய்ப்பை திமுகவும் பிஜேபியும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .
(தேநீர் விருந்தில் எச். ராஜா ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்துவிட்டு செல்கிறார். மேலும், அடிக்கடி பிஜேபி ஒரு மதவாத கட்சி என்று பேசி வந்தார்கள். இது எல்லாம் அரசியலில் சகஜமோ)