இந்தியாவில் முதலமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்கு முன் உதாரணம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இங்கே ஊழல் என்பதற்கு இடமில்லை .அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். தவிர, ஒரு முதலமைச்சர் மக்களின் குறைகளை கேட்கும்போது அவர்களை வரிசையில் கூட நிற்க வைக்காமல் ,வரிசையாக உட்கார வைத்து அவரே வந்து வாங்குகின்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் யோகி ஆதித்யநாத் ஒருவர் தான்.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் பார்ப்பதற்கு கூட மக்கள் வரிசையில் நின்று காத்துக் கிடக்க வேண்டி இருக்கிறது. ஆனால், ஒரு முதலமைச்சமுதலமைச்சரே மக்களின் குறைகளை நேரில் வந்து மனுக்களை பெற்று விசாரிப்பது, இந்தியாவில் யோகி ஆதித்யநாத் ஒருவர் தான் .மற்ற மாநிலத்தில் முதல்வரின் முகத்தைக் கூட பார்க்க முடியாது. ஆனால், ஷோ காட்டுவதற்கு பார்ப்பார்கள். அந்த ஷோவை மீடியாக்கள் மக்களிடம் காட்டிக் கொண்டிருப்பார்கள். அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.
யோகி ஆதித்யநாத் போன்ற முதலமைச்சர்கள் செயல்பட்டால் அரசியல் கட்சியினர் முதல் அரசு அதிகாரிகள் வரை தவறு செய்ய பயப்படுவார்கள். இங்கே தவறே அரசியலாக இருக்கின்ற லட்சணத்தில், மீடியாக்கள் உத்தமர்களாக காட்டிக் கொண்டிருப்பார்கள். உண்மையை மறைத்து பொய்யான விஷயங்களை இந்த ஊடகங்கள் மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறது. மக்கள் இந்த உண்மையைப் படிக்காமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள், அதுதான் முக்கியமான விஷயம் .
மேலும், தற்போது கூட ஒரு நண்பர் பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய குடை மற்றும் பேக் கொடுத்த செய்தியை போட சொன்னார். இதனால், மக்களுக்கு என்ன பயன்? இது ஒரு விதமான விளம்பர செய்தி. இதில் பயன் அடைந்த பள்ளி குழந்தைகளுக்கு நல்லது. ஏதோ ஒரு மாவட்டத்தில், ஏதோ ஒரு பகுதியில், ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம். இந்த செய்தியை மக்கள் படிப்பதனால் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? எதுவும் இல்லை. இப்படிதான் இன்றைய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷன் (just information) களை செய்திகளாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைதான் செய்தித் துறையும் , ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷன் (just information) களை விளம்பர செய்திகளாக அரசு நிகழ்ச்சிகளை ,பத்திரிகைகளுக்கு கொடுத்து விளம்பரப்படுத்துவது செய்தி துறையின் வேலை.
இதனால் மக்களுக்கு என்ன பயன்? எதுவும் இருக்காது. இப்படிப்பட்ட செய்திகளால் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அரசின் பணி என்ன? அரசு அதிகாரிகளின் பணி என்ன? அமைச்சர்களின் பணி என்ன? மக்களுக்காக அதன் நன்மை என்ன? அதன் தீமை என்ன? அதனால், மக்கள் அடைந்த பயன்கள் என்ன? எவ்வளவு பேர் பயன் அடைந்தார்கள்? எதுவுமே இருக்காது.
இப்படிப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? அதை மக்கள் படித்தால் என்ன? படிக்காமல் போனால் என்ன? அதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை.. மேலும், ஒரு முதல்வர் அவர் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்டு சரி செய்யும் போது ,அந்த மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். வாக்களித்த மக்கள் ஒரு சரியான தேர்வாளர்களை நாம் தேர்வு செய்துள்ளோம் என்ற மகிழ்ச்சி உள்ளத்தில் இருக்கும் .
ஆனால், இன்று தமிழ்நாட்டில் ஒரு பொது விஷயத்துக்கு கூட மக்கள் படையெடுத்து மாவட்ட ஆட்சியரை பார்த்து உண்மையை சொன்னால் கூட கிடப்பில் போட்டு விடுகிறார்கள் . மக்கள் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்கவில்லை என்கிறார்கள். இது ஆட்சியா? அல்லது அது ஆட்சியா? மேலும், மக்கள் எது பத்திரிக்கை செய்தி? எப்படிப்பட்ட பத்திரிக்கை நமக்கு தேவை? என்பதை மக்கள் உண்மையை புரிந்து கொண்டால் சரி .