மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தால் பொய்யான செய்திகளை பரப்பினால்! மூன்றாண்டு சிறை. ஆனால்,50 ஆண்டு காலமாக சாமானிய பத்திரிகைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

 (If the new criminal law of the central government spreads false news! Three years imprisonment. But why has the rights of ordinary press been denied for 50 years? )

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற, கூட்டத்தில் பல புதிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றி புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 அது பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா மசோதா மற்றும் பாரதிய சக்ஷவா மசோதா  ஆகியவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவையும் முன்மொழியப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலியான செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவோருக்கு சட்டப்பிரிவு 195 ன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் .

 மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் 153 பி பிரிவின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டுள்ளது .இந்த சட்டம் கொண்டு வருவது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய மக்களுக்கு நீதி வழங்குவது, அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாப்பது, ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த மூன்று மசோதா கலையும் கொண்டு வந்துள்ளோம்.

 மேலும், சட்டத்தில் உள்ள அடிமைத்தனத்தின் அனைத்து அறிகுறிகளையும் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதை நிறைவேற்றியுள்ளோம்.மேலும், இந்திய தண்டனை சட்டம் 1860க்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா  மசோதா, 2023 குற்றவியல் நடைமுறை சட்டம், 1898க்கு பதிலாக பாரதிய நாகரி சுரக்ஷா சன்ஹிதா  மசோதா மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 1872 க்கு பதிலாக பாரதிய சாட்சாய மசோதா கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 860 குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்றுக்கு பதிலாக இந்த புதிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டத்தில் ஆட்சியாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் களையும் , பத்திரிகைகளையும் எளிதில் கொண்டு வர வாய்ப்புள்ளது. இருப்பினும், தவறு நிரூபித்தால் மட்டும் தானே தண்டனை .

தவிர, சில பேர் செய்கின்ற தவறுகளால், இன்று பத்திரிகை துறைக்கு இது போன்ற சட்டங்கள் கொண்டுவர வேண்டிய நிலைமைக்கு பத்திரிகை துறை உள்ளது. ஆனால், 50 ஆண்டு காலமாக பத்திரிக்கை துறையில் உள்ள விதிமுறைகள்  கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்கள் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்து வரும் மத்திய மாநில அரசின் செய்தி துறைகளில் உள்ள பல சட்டங்களை ஏன் மாற்றவில்லை?

பொய் செய்திகளை பரப்பினால் மூன்றாண்டு சிறை என்று சொல்லும் மத்திய அரசு ,இதில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் தீர்வு காண இது வரை சட்டம் கொண்டு வரவில்லை .மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இணையதளம், பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறேன்.

மத்திய, மாநில அரசுகள் அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன் உங்களுக்கு தேவையான போது தேவையான சட்டங்களை கொண்டு வருகிறீர்கள்? ஆனால், சாமானிய பத்திரிகைகளுக்கு எந்த சலுகைகளும், எந்த விளம்பரங்களும் இல்லாமல் எப்படி பத்திரிக்கை நடத்துவது, பற்றி மத்திய மாநில அரசுகள் சட்ட விதிமுறைகளை ஏன் மாற்றி அமைக்கவில்லை? ஏழைக்கு ஒரு சட்டம்? பணக்காரனுக்கு ஒரு சட்டமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *