மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பெரிதல்ல, உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏலத்தில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்குமா? சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 31, 2024 • Makkal Adhikaram

நாட்டில் தேர்தல் என்பது எதற்கு? அதனுடைய அர்த்தம் தெரியாமல் தேர்தல் ஆணையம் மக்களிடம் தேர்தல் நடத்துவது வீணென்று பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதில் சட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறதா? ஒருவன் பணத்தை எதற்காக மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஒருவன் எதற்காக பரிசுப் பொருட்கள் தர வேண்டும்? 

மக்களுக்காக உழைக்க வருபவன் ,தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, பணமும் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியம் என்ன? இதை மக்களும் சிந்திக்கவில்லை. தேர்தல் ஆணையமும் சிந்திக்கவில்லை. கடமைக்கு தேர்தல் நடத்துவது அல்லது அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் நடத்துவது, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த நாட்டின் மீதுபொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. 

மேலும், உள்ளாட்சித் தேர்தல் என்றாலே பணம் தான் உள்ளாட்சித் தேர்தல் என்று நினைக்கும் அளவுக்கு, மக்களை ஏலத்தில் எடுப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மேலும், ஒரு சில கிராமத்தில் யார் அதிக தொகை கொடுக்கிறார்களோ, அவர்கள் தேர்தல் இன்றி அந்த கிராமத்தில் தேர்வு செய்யப்படுபவர்களும் இருக்கிறார்கள். இதை எல்லாம் ஒரு தேர்தல் என்று சொல்வதற்கு அத்தமற்ற வேலை .

மேலும், தேர்தல் நடத்துவது எவ்வளவு பெரிய கடுமை ஆன விதிமுறைகள் இருக்க வேண்டும் ? இங்கே ஆளுங்கட்சி சொல்லுகின்ற வேட்பாளர்களை அறிவிக்கக்கூடிய நிலைமை கூட உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் சரி ,திமுக ஆட்சியிலும் சரி, தனக்கு வேண்டிய நபர்கள் அவர்கள் கவுன்சிலராக இருந்தாலும், பஞ்சாயத்து தலைவர்களாக இருந்தாலும், தோல்வியே அடைந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இது எல்லாம் அதிகாரிகளுக்கு அவர்கள் கொடுக்கின்ற மறைமுக அசைன்மென்ட் .மேலும், 

எத்தனையோ பீடிஓ க்கள் ,இந்த வேலையை மறைமுகமாக செய்து இருக்கிறார்கள். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும், அந்த கிராமத்து வேட்பாளர்கள் சண்டை போட்டதுதான் மிச்சம். இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், உடனடியாக அந்த பீடிஓ க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் . மேலும், நகராட்சி ஆணையர்களோ அல்லது மாநகராட்சி ஆணையர்களும் இது போன்ற தவறுகள் செய்தால் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் .மேலும், 

தவறு நடக்கின்ற கிராமங்களிலோ, நகரங்களிலோ அந்தப் பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தப்பட வேண்டும். அல்லது ஓட்டு எண்ணிக்கை ஆவது மறுமுறை ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். தேர்தல் என்பது நியாயமான முறையில் இருக்க வேண்டும். இங்கே அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இருக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, தேர்தல் நடத்த வேண்டும். மேலும்,

இங்கே ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது ஒவ்வொரு நிமிடமும் கேமராக்கள் நிறுத்தப்படக் கூடாது. தவிர, தேர்தல் நடந்த பிறகு அதை மறுநாளே ஓட்டு எண்ணிக்கை நடை பெற வேண்டும் . ஒரு வாரம், ஒரு மாத காலம், 10 நாள் இந்த கால அளவில் வாக்கு பெட்டிகள் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது . ஏனென்றால் ஆட்சி அதிகாரம் திமுகவிடமுள்ளது. அது எதுவும் நடக்கும் என்ற அச்சம் மற்ற அரசியல் கட்சிகளிடம் உள்ளது. 

இது தவிர, நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட வேண்டும். இல்லை என்றால், அவர்களை மிரட்டுவார்கள் அல்லது ரவுடிசம் செய்வார்கள் அல்லது உயர் அதிகாரிகளை வைத்து பழிவாங்க செய்வார்கள் இந்த வேலையெல்லாம் அண்டர் கிரவுண்ட் தேர்தல் வேலை. இதையெல்லாம் நடக்காமல் பார்த்துக் கொள்வது இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சிகளும், சமூக நலன் பத்திரிகையாளர்களும், வைக்கின்ற முக்கிய கோரிக்கை. மேலும்,

 நாட்டில் தேர்தல் என்பது அதிகாரத்திற்கு உட்பட்டு ஜனநாயகத்தின் தேர்தல் நடத்துவது அதை தனக்கு சாதகமாக இருந்தால் அரசியல் கட்சிகள் இது ஜனநாயகத்தின் தேர்தல் என்று நம்முடைய கார்ப்பரேட் தொலைக்காட்சி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவார்கள் .அதுவே ,ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு அது சரியான முறையில் அங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தால், இது ஜனநாயகத்திற்கு முறைகேடான தேர்தல் என்று அறிக்கை விடுவார்கள் .இது எல்லாம் பார்த்து தேர்தல் என்று அரசியல் தெரிந்தவர்கள், எப்படி ஏற்றுக் கொள்வது என்று எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்?இதற்கு மாநில தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? 

மேலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இதுதான் முக்கிய கேள்வி? தவிர, மாநில தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய  செயலாளர் கே சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி காலியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும், தற்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. அதனால், ஊரக உள்ளாட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளது. அதில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ,உருவாக்கப்பட்ட ,ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது .

மேலும், 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால், 2026 இல் சட்டப்பேரவை தேர்தல் வருவதால், அதற்கு முன்னதாக தன்னுடைய அதிகாரம் கையில் இருக்கும் போதே அனைத்து உள்ளாட்சிகளுக்கும், தேர்தல் நடத்த திமுக அரசு யோசித்து வருகிறதாம். மேலும், தேர்தல் என்றால் வாக்காளர்கள் !

 பணத்திற்காகவா? அல்லது கிராமத்தில், நகரத்தில் உள்ள பொது சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளயடிக்க வா? அல்லது கிராமங்களில் நகரங்களில் ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்யவா ? இதையெல்லாம் மக்கள் சிந்தித்து வாக்களித்தார்களா? என்பதை உங்கள் மனசாட்சி தொட்டு நீங்கள் கேட்டுப் பாருங்கள் .

தகுதியற்றவர்களை பணத்திற்காக வாக்களித்துவிட்டு, கிராமங்களில் பின்னாளில் புலம்பி கொண்டிருக்கிறார்கள். நகரங்களில் புலம்பி கொண்டிருக்கிறார்கள் .அது எதற்கு என்றால்? இவர்கள் பணம் வாங்கிக் கொண்டும், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டும், வாக்களித்து வெற்றி பெற்ற நபர்கள், அந்த கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள். ரவுடிசம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை.என்று புலம்புகிறார்கள்.

மேலும், பொது சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். கிராமங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சரியான முறையில் செய்யாமல் பஞ்சாயத்துகளில் போய் கணக்குகளை எழுதி வைக்கிறார்கள். இது எல்லாம் உங்கள் கிராமத்திற்கு தேவையா? என்பதை வாக்காளர்கள் சிந்திப்பார்களா? அதேபோல், நகர மக்கள் சிந்திப்பார்களா? வாக்களிக்க முன் பணத்தைக் கொண்டு வந்து அல்லது பரிசு பொருட்களை கொண்டு வந்து கொடுப்பவர்கள், எப்படிப்பட்டவர்கள் ?என்பதை உங்களுக்கு அந்த கிராமத்தில் அல்லது அந்த நகரத்தில் இவர்கள் யார் ?என்பது நன்கு தெரியும். தெரிந்துதான் பணம் வாங்குகிறீர்கள்.

 பிறகு அவன் ரவுடியாக இருந்தால், உங்களை அடக்கி உட்கார வைப்பான். கொள்ளையடிப்பவனாக இருந்தால் எதில் எல்லாம் நாம் கொள்ளையடிக்கலாம்? என்று திட்டம் போட்டு தான் வருகிறான். அதனால், சமூக சேவை செய்ய உங்களுக்கு தகுதியான நபர்கள் யார்? என்பதை பணத்தை தூர தூக்கி எறிந்து விட்டு ,பரிசு பொருட்களை தூரத் தூக்கி எறிந்து விட்டு, மனசாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு வாக்களியுங்கள்.

மேலும், பிரச்சனைகளை வாக்காளர்கள் உருவாக்கிவிட்டு ,அந்தந்த கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோர்ட்டுக்கும், காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலை. நீங்கள் பொதுநலத்துடன் வாக்களித்தால், இந்த பிரச்சனை எந்த கிராமத்திற்கும் ,நகரத்திற்கும் ஏற்படாது என்பதை இது சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள்,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ,வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் முக்கிய கருத்து மற்றும் கடமையாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *