
கொரோனாவின் பாதிப்பு முடிந்து விட்டது என்ற நிலைமையில் மக்கள் இருந்து வரும் போது, மீண்டும் கொரோனா வந்துவிட்டதாக மருத்துவ ஆய்வு தகவல். தவிர, கொரோனாவின் பாதிப்பு அமெரிக்கா, சீனா, ஜப்பான், போன்ற பல நாடுகளில் இருந்து வருகிறது.
இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இருந்தாலும், அதற்கான பழைய விதிமுறைகளை கடைப்பிடிக்க, மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இது தவிர, கொரோனாவின் ஆய்வு ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவர்கள் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு. அதனால், இனி பொதுமக்கள் உஷார் நிலையில் இருப்பது அவசியம்.