அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram
சேலம் மாவட்டம் :ஓமலூர் :முன்னாள் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசிய இன்ஸ்-பெக்டர், வேதாரண்யத்துக்கு இடமாற்றப்பட்டார்.சேலம் மாவட்டம் ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்-டராக பணியாற்றியவர் லோகநாதன்.48. இவர் கடந்த, 25ல், வேதாரண்யத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்-டதால், நேற்று முன்தினம் ஓமலுாரில் பணியை விடுவித்து புறப்-பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:லோகநாதன், முன்னதாக கோவை மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்-சியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆட்சி மாற்றத்தால் லோகநாதன் தர்மபுரிக்கு மாற்றப்-பட்டு பின் சேலம் மாவட்டம் ஓமலுாரில் கடந்த ஜனவரியில் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த, 14ல், ஓமலுாரில், அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள்கூட்டம் நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். அப்போது இன்ஸ்-பெக்டர் லோகநாதன், வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த விஷயம் வெளியே வர தற்போது மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.