வன்னியர் சமூகத்தில் பல லட்சம் கோடி அறக்கட்டளை சொத்துகள் இருந்தும் வன்னிய சமூகத்தில் உள்ள ஏழை ,நடுத்தர மக்களுக்கு ஏன் அது பயன்படவில்லை ?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 17, 2024 • Makkal Adhikaram

வன்னியர் சமூகத்தில் உள்ள அறக்கட்டளை சொத்துக்கள் பல லட்சம் கோடி இருந்தும், சமூக மக்களுக்கு அது பயன்படவில்லை . ஒரு சில அறக்கட்டளை சொத்துகள் தான் தற்போது அதுவும் முழுமையாக, இந்த மக்களுக்கு பயனளிக்கவில்லை. அது போன்ற ஒரு கட்டமைப்பை இந்த சமூகத்தின் ஜாதி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கி உள்ளது என்கிறார்கள் வன்னியர் சமூகத்தினர். 

அதாவது அறக்கட்டளை சொத்துகள் முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அந்த வருமானத்தை அவரவர் பங்கு போட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூக நன்மைக்காக அந்த காலத்தில் வாழ்ந்த நல்ல உள்ளங்கள் கொடுத்த கொடை தான் இந்த சொத்துக்கள். அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த சொத்துக்களை, தனக்குப் பின்னால் இந்த சமூகம் பயனடைய வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் பங்கு போட்டு வலிமை உள்ளவன், இதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வலிமையற்றவர்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் மூலம் இதை ஒன்றும் செய்ய முடியவில்லை .

ஆனால், இந்த எழுதி வைத்த ஆத்மாக்கள் அது உயர்ந்த ஆத்மாக்கள். அவர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கான பலன் இவர்களுக்கு நிச்சயம் உண்டு. இன்று பலபேர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்லூரியில் பணம் கட்ட முடியவில்லை. பள்ளிகளில் சேர்க்க பணம் கட்ட முடியவில்லை என்று என்னிடமே பல தெரிவித்து இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும்? நானும் இது சம்பந்தமாக முக்கிய  IAS அதிகாரி ஒருவரை அணுகிப் பார்த்தேன் .அவரும் இதற்கு வழி இல்லை. நானே என்னுடைய சொந்த பணத்தில் நாலு பேருக்கு கொடுத்துள்ளேன் என்றார். எவ்வளவு வேதனையாக இருக்கிறது?

 எல்லோருக்கும் பயன்பட வேண்டிய இந்த அறக்கட்டளை சொத்துகள் குறிப்பிட்ட சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டிக் கொண்டும், கடைகளை கட்டிக்கொண்டு, கல்யாண சத்திரம் கட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். பல இடங்களில் கட்டப்பட்ட இது போன்ற கல்யாணசத்திரங்கள், கடைகள், வாடகைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடும்பங்களே, வழிவழியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் ராமதாஸ் கவலைப்பட மாட்டார். பேஸ்புக்கில் ஒரு செய்தி வந்தது. அதில் யாரோ ஒருவர், ஒவ்வொரு ஐந்து ஆண்டு தேர்தல் போது இவருக்கு 500 கோடி வருமானம் வருகிறது என்று போட்டிருந்தான். அந்த அளவிற்கு இந்த சமுதாயம் ராமதாஸால் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதுதான் இவர் இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருப்பார். தேர்தல் முடிந்ததும் மறந்து விடுவார். இப்படித்தான் இந்த கட்சி 40 ஆண்டு காலமாக செய்த இதன் வரலாறு. ஆனால், சமுதாயம் இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கும் என்று தான் இந்த தேர்தல் முடிவு சொல்கிறார்கள். 

மேலும்,இந்த சமூகத்தில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் எத்தனை பேர் வெளிவந்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தனி கட்சியும், அமைப்பும் ஏற்படுத்திக் கொண்டு, ராமதாஸ் காட்டிய அதே வழியை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், சமுதாயம் தொடர்ந்து ஏமாறும் என்பதுதான் இவர்களுடைய கணக்கு தவறாகிவிட்டது. இது உழைத்து வாழுகின்ற சமுதாயம். ஊரை ஏற்றி வாழ்கின்ற சமுதாயம் அல்ல,ராமதாஸ் வந்த பிறகுதான் இந்த மக்களுக்கு சமுதாயத்தை ஏமாற்றுவது எப்படி? என்று தெரியும். அதுவரை யாருக்கும் சமுதாயத்தை ஏமாற்றத் தெரியாது. மேலும்,

வன்னியர் சமுதாயம் தற்போது உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளை சார்பில் இயங்குகின்ற கல்லூரிகள் , பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள், வன்னியர் சமுதாயத்திற்கென்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் மிக மிக குறைந்த அளவு மார்க் எடுத்திருந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். தங்கிப் படிக்க இலவசமாக உணவு மற்றும் விடுதிகள் உள்ளது. இந்த அறக்கட்டளை நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இதனை வன்னியர் சமுதாயம் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேறுவது அவர்களுடைய வளர்ச்சிக்கானது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *