வருமான வரித்துறை தொடரப்பட்ட வழக்கில் முதன் முதலாக ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது – வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில்இந்நிதியாண்டில் (2023-24) வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளை மீறிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்குகளில் ஒரு வழக்கில் இந்நிதியாண்டின் முதல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும்,

2023-24 நிதியாண்டில், வருமான வரித்துறை (தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி), வருமான வரி சட்டம், 1961, பிரிவு 276C(2)இன் கீழ் வழக்கு விசாரணை தொடுக்கப்பட்டு, 11.04.2023 அன்று வரி செலுத்தத் தவறியவருக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு  தண்டனை வழங்கப்பட்டது. தவிர

  வரி செலுத்தத் தவறியது, கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.  இந்நிறுவனம் 2017-18 ஆம் ஆண்டிற்கான வரித் தொகையை செலுத்தாமல் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்துள்ளது.  மேலும், கூடுதல் பெருநகர நீதிபதி (சென்னை பொருளாதார குற்றங்கள் – 1) ஆணை பிறப்பிக்கும் நாள் வரை அந்நிறுவனம் அந்த வரித் தொகையை செலுத்தவில்லை. மேலும்,

 வரி செலுத்தாமல், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததற்காக வருமான வரிச் சட்டம், 1961,  பிரிவு  276C(2) மற்றும் 278Bஇன் கீழ் அந்நிறுவனம்  மற்றும் அதன் இரண்டு இயக்குனர்களுக்கு எதிராக  கூடுதல் பெருநகர நீதிபதி (சென்னை பொருளாதார குற்றங்கள் – 1), முன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  வருமான வரித்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் எல். முரளிகிருஷ்ணன் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றங்களை பதிவு செய்து வழக்காடினார்.

இந்த வழக்கில்,  கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி (சென்னை பொருளாதார குற்றங்கள் -1), 11.04.2023 அன்று, வரி செலுத்தாத அந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்,  குற்றவாளிகள் என ஆணை பிறப்பித்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனம் மீது ரூ.25,000/- அபராதமும் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு முறையே 1 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.25,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *