
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில், நான்கு நாட்களுக்கு மேலாக கிராம பஞ்சாயத்து குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியூற்று வருகின்றனர்.மேலும், குடிநீர் ஏன் வரவில்லை என்பது கூட கிராம மக்களுக்கு தெரியவில்லை.
மேலும், இது சம்பந்தமாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரது எண்களை : 9402606184,தொடர்பு கொண்ட போது, ஒன்று கூட இன்கமிங் வசதி இல்லை என்று அந்த எண்களில் இருந்து வரும் தகவல்.

இப்படி எல்லாம் திமுக ஆட்சி அவல நிலை இருக்கிறது. எந்த தைரியத்தில் இவர்கள் நாங்கள் 234 சீட்டு ஜெயிப்போம் என்று தெரிவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும்,மக்களை பணத்தை கொடுத்தால் எப்படிப் பட்ட மோசமான நிர்வாகத்தை கொடுத்தாலும் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான் இவர்களுடைய தைரியமோ,தவிர, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரோ பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டால் கூட எடுக்க மாட்டார்.

அதனால், கிராம மக்கள் இப் பிரச்சனை சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்கின்றனர்.