கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மணவாள நகர், பேரம்பாக்கம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது, இதை ஆரம்பத்திலே தடுக்காமல், இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமா? மேலும்
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கிறார்களா ? டெங்கு ஒழிப்பிற்காக மத்திய – மாநில அரசும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறது. ஆனால் ,அது முறையாக இத்திட்டத்திற்கு போய் சேருகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி?
மேலும், இம் மாவட்டத்தின் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜகவர்லால் இது பற்றி ஆய்வு செய்து கட்டுப்படுத்திய வருகிறாரா? மேலும், ஒரு இடத்தில் டெங்கு காய்ச்சல் இருக்கிறது என்றால், அந்த இடத்தில் மட்டுமே மருந்து அடிக்கப்படுகிறது. அங்கே மட்டுமே சுத்தம் செய்துவிட்டு வந்துவிட்டால், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்துவிட முடியுமா? என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு,
மேலும், இந்த மருந்து அடிப்பதற்காக அல்லது இந்த மருந்து வாங்குவதற்காக அனுப்பப்படும் கிராமங்கள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் யார் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது ? மருந்து வாங்குகிறார்களா? அல்லது வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்களா? தவிர, வாங்கிய மருந்தை ஒழுங்கான முறையில் தெளிக்கப்படுகிறதா? இது பற்றிய கணக்கு வழக்குகள் சுகாதாரத்துறை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.
மேலும், யாரிடம் இந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது? நகரத்திற்கு எவ்வளவு இந்த கொள்முதல் அனுப்பப்பட்டுள்ளது ?கிராமங்கள் தோறும் எவ்வளவு அனுப்பப்பட்டது? அது முறையாக மருந்து தெளிக்கிறார்களா? எதுவுமே இல்லை என்று தான் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். தவிர, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் உயர் அதிகாரிகள் அளவில் விசாரணை நடைபெற்று வந்ததெல்லாம் தற்போது அவை சரிகட்டி விட்டார்களா ?
மேலும் கடம்பத்தூர் ஒன்றியத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியுமா ? இது தவிர, டெங்கு ஒழிப்பிற்காக போடப்பட்ட தினக்கூலி பணியாளர்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தி விட்டு, அவர்கள் வேலையே செய்யாமல் ,கணக்கு காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார். இப்படி இருந்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் எப்படி டெங்கு ஒழிக்கப் போகிறார்கள்? என்பது பொதுமக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது .