நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.
மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் ,இலவச திட்டங்கள், கடன் தள்ளுபடி இலவச விநியோகம், எதையும் எந்த அரசாங்கமும் அறிவிக்க முடியாது. இது தவிர ,அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்குகளை இலவசங்கள் கொடுத்தும், இலவச அறிவிப்புகள் வழங்கியும்,( பொதுமக்களை )அதாவது வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுகிறார்கள்.
அதனால், எந்த திட்டங்கள் இனி அறிவித்தாலும்,அரசு முதலில் அதன் வரைபடங்களை சமர்ப்பித்து, இந்த அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் . இது தவிர, எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள், இவர்களின் சம்பளம் மற்றும் அவர்கள் பெறும் சலுகைகள் அதைக் கண்காணிக்கவும், தேவையற்றதை நீக்கவும் குறைக்கவும், இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், ஜனநாயகம் என்பது வாக்களிப்பதில் மட்டும்தானா? அதன் பிறகு, வரி செலுத்துவோர் ஆகிய நமக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன? என்பது இந்த அமைப்பு பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும், இது தவிர, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இந்த அமைப்புக்கு உரிமை இருக்க வேண்டும். வரி செலுத்துவோரின் மூலம் தான் இவர்கள் அனைவரும் சம்பளம் பெறுகிறார்கள்.
அதனால், இந்த அமைப்பு விரைவில் உருவாக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது . தவிர ,இலவசங்களை அறிவித்தாலும், அதை திரும்ப பெரும் உரிமையும் விரைவில் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. ஆக கூடி இந்த அமைப்பு ஆட்சியாளர்களுக்கு ஒரு செக் என்பது தெள்ளத் தெளிவான உண்மை .இது சட்டத்தின் அதிகாரம் மக்கள் அனைவரும் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த அமைப்பின் நடவடிக்கையால், நாட்டில் ஊழல் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல் ரவுடிகள், அரசியல் கட்சி பின்னணியில் உள்ள சமூக குற்றவாளிகள், காவல்துறை அதிகாரிகள், என எவரும் இனி மக்களின் அதிகாரத்திலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.