அதிமுகவில் செங்கோட்டையன் யார்? அதிமுகவில் எடப்பாடியின் நிலைமை என்ன? – எடப்பாடியை விட சீனியர்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமியை விட, மூத்த சீனியர்.

எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன் சசிகலா முதலில் கேட்டது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நபர்களில் அவர் தான் முதலிடத்தில் இருந்தவர்.

கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க என்னால் அவ்வளவு பணம் இல்லை என்று சசிகலாவிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு தான், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்ட அடிக்கிறது.கூவத்தூரில் பணத்தை எம்எல்ஏக்களுக்கு நான் கொடுக்கிறேன் என்று இரண்டே நாளில் அவ்வளவு பணத்தையும் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு கொடுத்து முதலமைச்சர் ஆகிவிட்டார்.

இப்படிதான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் யோகம் அடித்தது.மேலும், இவர் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஜெயலலிதா இருந்த போது, இவரை அறிவிக்கவில்லை.

அதனால் தான் இன்று அதிமுகவில் இருக்கின்ற சீனியர்களுக்கெல்லாம் இவர் மீது ஒரு வெறுப்பும், வேதனையும் இருக்கத்தான் செய்கிறது. கட்சிக்காக எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து எம்எல்ஏ பதவி கூட அடைய முடியாதவர்களும் உண்டு. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த அளவுக்கு எந்த போராட்டமும் ,கஷ்டமும் இல்லாமல் அதிர்ஷ்டத்தால் முதலமைச்சர் பதவி கிடைத்துவிட்டது.

கிடைத்து விட்டது மட்டுமல்ல, இன்று கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் கிடைத்துவிட்டது. அதிர்ஷ்டம் என்பது நீண்ட நாளைக்கு இருக்காது. அது குறிப்பிட்ட சில காலம் வரை தான் இருக்கும். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. இதை எப்படி இவர் தக்க வைத்து கட்சியை வழிநடத்த போகிறார்? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஏனென்றால், இந்த கட்சியின் நிறுவனர் கூட இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். எந்த ஒரு ஒப்பினியன் எதுவும் செங்கோடையனிடம் கேட்காமல், பழனிசாமி அவரை கட்சியில் பதவி நீக்கம் செய்து விட்டார். இதனால் உண்மையான அதிமுக விசுவாசிகள் அதிருப்த்தியில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,

ஈரோட்டில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தமிழக முழுதும் பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு அதிருப்தி கடிதத்தை அனுப்பி வைத்து வருகின்றனர்.

ஏனென்றால் , அதிமுக கட்சியின் நலம் விரும்பிகளில் இவரும் ஒருவர். அதனால்தான், கட்சியில் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் மக்களிடம் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும், சசிகலாவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சசிகலா அதிமுக கட்சியின் முக்கிய விசுவாசி .அதில் ஒன்று மாற்று கருத்து இல்லை. இதற்கு ஒரு உதாரணமும் தெரிவிக்கிறேன். கூவத்தூரில், தன் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காமல், வேற்று சமுதாயத்தை சேர்ந்த செங்கோட இணைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுத்திருக்கிறார். இதிலேயே சசிகலா தன் சொந்த ஜாதியினருக்கும் , சொந்தக்காரர்களுக்கும் முதலமைச்சர் பதவியை கொடுக்காமல்,எடப்பாடி பழனிசாமிக்கும் , செங்கோடையனுக்கும் தான் முதலமைச்சர் பதவியை கொடுக்க தீர்மானித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலையில் விழுந்து பதவியை பெற்றது கட்சிக்கு நான்கு தெரியும். தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். சசிகலா காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி, பிறகு சசிகலாவின் காலையே வாரி விட்டது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். மேலும்,

அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி எவ்வளவு பெரிய கிரிமினலாக இருப்பார்? இதையம் கட்சி வட்டாரம் பேசுகிறது. அது மட்டுமல்ல, டி டி வி தினகரனை சார், சார் என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் என்கிறார்கள். அவர் அலுவலகத்தில் அவரைப் பார்க்க காத்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டம் எப்படி அடித்திருக்கிறது? இது எல்லாம் தற்போது கட்சி வட்டாரத்தில் கட்சிக்குள்ளே தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவரைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கிறார்.

காலம் எவ்வளவு தான் ஒரு மனிதனை உயரத்தில் உட்கார வைத்தாலும், பழைய நிலைமை என்ன? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் .அவன் தான் மனிதன். அரசியல் என்பது யாரை கீழ தள்ளிவிட்டு, யார் காலை பிடித்து மேலே ஏறிச் செல்லும், அரசியல் கட்சியினர் வாழ்க்கை என்பது, வசதி மட்டுமே வாழ்க்கையாக நினைத்துக் கொண்டு பந்தா காட்டிக் கொண்டியிருப்பவர்கள்.

நேத்து வரைக்கும் பைக் கூட இல்லாதவன் இன்று காரில் செல்கிறான். அப்படிதான் இவர்கள் பழசை உடனுக்குடன் அப்போதே மறந்து விடுவார்கள். இதற்கு என் அனுபவத்தில் நான் பார்த்த ஒரு நபர் பெஞ்சமின் !இவர் கட்சியில் பெரிய பொறுப்பில் இல்லை. என்னிடம் நான் நிருபராக இருந்த போது, என் பெயரை கொஞ்சம் சேர்த்துக்கோங்க அண்ணா என்று சொல்லுவார். சரி என்று இவர் பெயரையும் போட்டுக் கொள்வேன்.

இதே நபர் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்து, தலைமைச் செயலகத்தில் நான் இவரை மந்திரியாக பார்க்கிறேன். என்னை எங்கேயோ பார்த்த மாதிரி பார்க்கிறார். ஆளே அடையாளம் தெரியவில்லை . இதுதான் இந்த போலி அரசியல்வாதிகளின் வாழ்க்கை ‌.

இன்னும் சொல்லட்டுமா? ஒரு அமைச்சராக வரவேண்டும் என்றால்! மக்களுக்காக உழைத்து, மக்கள் பணியாற்றி வர வேண்டும். எந்த தகுதியும் இல்லாமல், சீட்டு குலுக்கி போட்டு, தேர்வு செய்யும் ஜெயலலிதா, அதிர்ஷ்டத்தால் மந்திரியாகி, இவர்களுக்கெல்லாம் அந்தப் பதவியின் தகுதி என்னவென்று இவர்களுக்கு தெரியும்?

அதனால்தான் எல்லாம் ஊழல் மந்திரிகளாக கட்சிக்காரனுக்கும், இவர்களுக்கும், பதவியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அர்த்தம் தெரியாத கூட்டங்கள் கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதுக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டம் ரூ :1000 ,500 வாங்கிக் கொண்டு, ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி இருந்தால் உழைப்பவன் எப்படி முன்னேறுவான்? முன்னேற முடியாது. கட்சி என்று ஊரை ஏமாற்றுபவன் தான் முன்னேறுவான். இவர்கள் முன்னேறுவதை உழைப்பவன் வேடிக்கை பார்ப்பான். இதற்கு தான் தகுதியான அரசியல்வாதிகள் ,மக்களுக்கு பணியாற்ற கூடியவர்கள், அரசியலுக்கு வர வேண்டும் என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் இந்த மக்கள் நலனுக்காக செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

இப்போதாவது அண்ணா திமுக யார்? திமுக யார் ?என்பது மக்களுக்கு புரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *