அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் கலக்கத்தில் முதல்வர் குடும்பம்.நோ அப்பயிண்ட்மெண்ட் டெல்லி மேலிடம்.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள்

தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டில் முதல்வர் குடும்பம் ஆடிப் போய் இருக்கிறது. இதில் ஏராளமான ஆவணங்கள் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து ,தோண்ட, தோண்ட அமலாக்கத்துறைக்கு லிங்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் டெல்லி மேல் இடத்துக்கு அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார் .அதற்கு டெல்லி மேலிடம் மறுத்துவிட்டது. அதனால் முதல்வர் வேதனையில் என்ன ஆகும்? என்ற கலக்கத்தில் முதல்வர் குடும்பம் இருந்து வருகிறது.

 இதில் மருமகன் சபரீசன் மற்றும் அவருடைய நண்பர்கள் வட்டாரம் அனைத்தும் கலக்கத்தில் இருந்து வருகிறது.ஆற்றில் தோண்ட தோண்ட மணல் வருவது போல், இந்த ரெய்டு தொடர்கிறது. அதாவது ஜி ஸ்கொயர் ரெய்டுக்கும் நமக்கும் நேரடி சம்பந்தமில்லை. அதனால் மாப்பிள்ளைக்கு பிரச்சனை வராது. பிறகு நம்மிடம் ஏன் வரப்போகிறது? என்று அசால்டாக முதல்வர் குடும்பம் இருந்திருக்கிறது.

மேலும், அமலாக்கத்துறை இதற்காக ஒரு தனி டீம் போட்டு, ரெய்டு நடத்தியுள்ளது. அதாவது யாரை முக்கிய புள்ளியாக வைத்து ரெய்டு நடத்துகிறார்களோ, அவருடைய போன் பேச்சு ,அவர் தொடர்பில் உள்ளவர்கள் போன் பேச்சு, எல்லோருடைய வங்கி கணக்கு மற்றும் பல விஷயங்களை எல்லாம் சேகரித்து தான், ஒரே நாள், ஒரே நேரம் பிக்ஸ் பண்ணி இறங்குகிறார்கள்.

 இந்த ரைடு சம்பந்தமான விஷயம் பட்டியலிடப்பட்டு ,அதன் விலாசம், அந்த நபர் யார் ?என்ற விவரம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தவிர ,ரெய்டு போகும்போது, வருமான வரித்துறை வாகனங்களை பயன்படுத்த மாட்டார்கள். இது பற்றிய விஷயம் டிரைவர் மூலம் கூட போகலாம். அல்லது அலுவலகத்தில் இருப்பவர்கள் மூலம் கூட போகலாம் .அதனால், வாடகை வாகனத்தை மட்டுமே எடுப்பார்கள். அதுவும் நள்ளிரவே வந்துவிடும். ரெய்டு அதிகாலை கிளம்பும்போது தான், விலாசத்தை டீம் இடம் கொடுத்துப் போகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட சீக்ரெட் ஆக இருக்கும். அதே போல் தான், ஜி ஸ்கொயர் ரெய்டில் இருந்துள்ளது.

இது தவிர, இந்த ரெய்டுக்கு திமுகவுக்குள்ளே இந்த, இந்த அதிகாரிகளுக்கு இன்னார், இன்னருடன் தொடர்பு என்றெல்லாம் தகவல் சொல்லி இருக்கிறார்களாம். அதிலும், பல இடங்கள் ரெய்டு நடந்துள்ளது .அப்படி நடக்கும் போது தான் அண்ணா நகர் மோகன், அவரது மகன் சின்னமலை, ஐடி விங் கார்த்திக், போன்றவர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. அதுதான் திமுக மேல் இடத்தை ஆசை உள்ளது.

 அதாவது சாதாரணமாக இருந்த முதல்வர் அடுத்தடுத்த நாட்களில் வந்த தகவலால் டென்ஷன் ஆகிவிட்டாராம். நான் ஆறு மாதத்திற்கு முன்னரே சொன்னேன். ஆட்சிக்கு வந்திருக்கிறோம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். என்று என் பேச்சைக் கேட்டால் தானே, இங்கு நடக்கும் எதுவுமே எனக்குத் தெரிவதில்லை .கட்சியிலிருந்து ஒருவரை நீக்கினால் கூட எனக்கு உடனடியாக தகவல் வருவதில்லை என்று சொல்லி ,மனம் நொந்து பேசியதாக திமுக வட்டாரத்திலிருந்து வெளிவரும் தகவல்.

 மேலும், முதல்வரின் மருமகன் விட்டுக் கொடுக்க முடியாமல், அவரால் முடிந்ததை சரி செய்ய பார்க்கிறார். எதுவும் அவருடைய முயற்சிகள் எடுபடவில்லை என்பது டெல்லி வட்டார தகவல்.

இப்பிரச்சினை ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் பிடிஆர் பேசிய ஆடியோ தகவல் அவர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.. இது பற்றி பி டி ஆர் முதல்வரிடம் விளக்கம் சொல்லி இருக்கிறார் .ஆனால், அதை ஏற்க அவர் தயாராக இல்லை. அவருடைய பதவியும் நாட்கள் எண்ணுவதாக திமுக வட்டார தகவல்.

 மேலும், இவருடன் சேர்த்து மூன்று அமைச்சர்களை நீக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது. அது எப்போது என்று தெரியவில்லை. மேலும் ஜி ஸ்கொயர் ரைடு நடக்கும்போது, சபரீசன் தனது நண்பர் விஜிபி வினோத்துடன் லண்டன் சுற்றுலாவில் இருந்திருக்கிறார் .இது முதலில் அங்கு ஆரம்பித்து அண்ணா நகர் எம் எல் ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் சபரீசனின் உறவினர், நவீன் வீடு, சபரிசனின் ஆடிட்டர் சண்முகராஜ், அவரது உதவியாளர் ஈஸ்வரி, மாலதி என சபரீசன் சம்பந்தப்பட்டவர்களை வருமானவரித்துறை தோண்டி எடுத்துள்ளது.

மேலும்,  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லோட்டஸ் பீவின் டெவலப்பர்ஸ் (lotus bhevin developers) நிறுவனம் ஜி ஸ்கொயர் இன் அங்கம் .அதில் சபரீசன் பார்ட்னர் என்று ஆடிட்டர் சண்முகராஜ் சொன்ன தகவல். மேலும் மற்ற இடங்களில் கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, சபரீசனுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை முடிவு எடுத்துள்ளது என்கின்றனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பும் என்று தெரியவரும் தகவல்.

 இது தவிர, சபரிசனின் நெருங்கிய நண்பர்கள் ஆன லண்டன் வெங்கட் மற்றும் நவீன் நெருங்கிய சேலம் மூர்த்தி ஆகியோரது இல்லத்தில் நடந்த ரைடு வருமானவரித்துறையினருக்கு மணல் கடத்தல் மாபியாக்கள் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோர் ஆண்டுக்கு சுமார் 900 கோடி பணம் கொடுத்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம். இந்த பணம் அண்ணா நகர் கார்த்திக் மூலம் ஆடிட்டர் சண்முகராஜிடம் சென்று, ஹவாலா ஆப்பரேட்டர்கள் மூலம் துபாய், கனடா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக ஐடி அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்களாம்.இதனால், இந்த மூவரும் ஐடி வலைக்குள் வந்துவிட்டனர்.மேலும்,

 இவர்கள் அனைவரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள். துரைமுருகன் துபாய் சென்றபோது, கரிகாலன் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனால், இந்த மூன்று பேருக்கும் விரைவில் சமன் போகும் என்று அமலாக்கத்துறை வட்டார தகவல். இது தவிர ,லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் பென்னின்சுலா வீட்டுக்கும் வருமான வரித்துறை ரெய்டு போய் உள்ளது. அங்கே பென்னின் சுலா கம்பெனியில் ஐபேக் மாதிரி அரசியல் உத்தியை உருவாக்கும் டீம் வேலை செய்கிறார்கள்.

இதுபோல் மூன்று பெரிய நிறுவனங்களை சபரீசன் இயக்கி வருகிறார். இவருக்கு பின்னால் யாரெல்லாம் பார்ட்னர்கள் உள்ளே வந்தார்களோ? அவர்களுடைய முதலீடுகள், பெயர்கள், நிறுவனங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்னாக வலைக்குள் சிக்கிய மீன்களைப் போல் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்கள். இவர்கள் ஆளுநரை அலட்சியப்படுத்தி, கேவலப்படுத்தும் போதே, அதற்கான மொத்த தகவல்களை டெல்லி மேலிடத்துக்கு அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளார்.

 இது தவிர, சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடுகள், ஊழல்கள் எடுக்கப்பட்டு அதுவும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். அதனால், டெல்லி மேலிடத்தில் திமுக வசமாக மாட்டியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.மேலும்,

 இது பற்றி ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஆதங்கம் .இதை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி ஊடகங்கள் எப்படி வெளியிடும் ?பெரும்பாலான ஊடகங்கள் அவர்களுக்கு சொந்தமானது . இதையெல்லாம் பார்க்கும் சமூக ஆர்வலர்கள் ,இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால், திமுக தமிழ்நாட்டை பட்டா போட்டு விடுவார்களோ என்பதுதான் அரசியல் தெரிந்தவர்களின் பயம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *