அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram

நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட எந்த ஒரு அரசியல் கட்சிகளாலும், நாட்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால், அதற்கு தகுதியானவர்கள் பொதுநலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பொதுநலமில்லாமல், சுயநலமும், கிரிமினல்களும், பிழைப்பு நடத்துபவர்களும், வியாபாரிகளும், இந்த ஊடகங்களில் பேசிவிட்டு தான் போவார்களே ஒழிய, அவர்களால் செயல்பட முடியாது. 

அதுவும் பேசுவது என்றால், ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சி, இன்னொரு கட்சியை பற்றி, இன்னொரு கட்சி இப்படி ஏதோ குறைகளை, குற்றங்களை சொல்லி, இவர்கள் பரிசுத்தமாக்கிக் கொள்வார்கள். இவர்கள் பரிசுத்தமடைந்தவர்கள் என்று நம்ம கார்ப்பரேட் மீடியா, தொலைக்காட்சிகள் கற்பனையில் கதை எழுதிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த உண்மை தெரியுமா? தெரியாதா? என்பது எனக்கு தெரியாது.அல்லது இதுதான் அவர்களுடைய ஊடக வியாபாரமா? என்பதும் எனக்குத் தெரியாது.

எனக்கு தெரிந்த உண்மையை மக்களிடம் சொல்கிறேன். ஏற்றுக் கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள். அல்லது அரசியல் ஏமாற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் அவ்வளவுதான் . இதில் நான் ஒரு வழிப்போக்கன் .எது உண்மை என்று என் மனதிற்கு பட்டதோ, அதை சொன்னேன் .ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாதது. அது அவர்களுடைய சொந்த விஷயம். ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள் . ஆசிரியர் தான் பாடம் நடத்துகிறார். அந்தப் பாடத்தை புரிந்து கொண்ட மாணவர்கள் பாஸ் செய்து விடுகிறார்கள். புரியாத மாணவர்கள் தேர்வில் தோல்வியடைகிறார்கள்.

இது எப்படியும் பேசி, எப்படியும் வாழ்பவர்கள் இந்த கருத்து அவர்களுக்கு ஒத்து வருமா? என்பது தெரியாது. ஆனால் படித்த இளைஞர்கள், சிந்திப்பவர்கள் ,உழைப்பவர்கள் ,நேர்மையானவர்கள் அவர்களுக்கு தான் இந்த அரசியல் பாடம் .அதனால், மக்கள் அரசியலைப் பற்றி கார்ப்பரேட் ஊடகங்களில் சொல்லுகின்ற செய்திகளை வைத்து புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் எந்த ஒரு அரசியல் கருத்துக்கும், அவர்கள் சொல்வதை அப்படியே போடுவார்கள். அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை .இதுதான் பத்திரிக்கை, இதுதான் தொலைக்காட்சி .

அதனால், இந்த அரசியல் யாருக்கானது? என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். எந்த நோக்கத்திற்கானது? என்பது புரிந்து கொள்வது அவசியம். இதையெல்லாம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அரசியல் என்பது மக்களுக்கு ஏமாற்றம்தான். இந்த உண்மை புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு புரியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *