நாட்டில் தேர்தலில் நிற்க தகுதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்? எத்தனை முறை கட்சிக்காக ஜெயிலுக்கு போனார்கள்? கட்சிக்காக பாடுபட்டார்கள்? இந்த கதை எல்லாம் கட்சிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களுக்காக அவர் என்ன செய்தார்? சமூகத்திற்கு என்ன செய்தார் ? அந்தப் பட்டியல் தான் தேவை. இதை எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை , தொலைக்காட்சியும் கேட்காது. ஆனால் அவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பார்கள் .இந்த விளம்பர ஊடகங்களின் அரசியல், நாட்டில் ஊழலை தான் ஊக்குவிக்கிறது.
சமூகத்தில் இவர் யார்? என்றே தெரியாமல், இவருக்கு எப்படி வாக்களிப்பது? இவர் யார்? என்று தெரியாமல், பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலை பேசுவது ,தேர்தல் அல்ல. மக்களை ஏமாற்றும் தேர்தல். அதன் அடிப்படை அர்த்தம் புரியாதவர்களிடம் பணத்தை கொடுப்பது, அடிப்படை அர்த்தம் தெரியாதவர்களிடம் ,ஒரு கட்சியினரை பற்றி மற்றொரு கட்சியை விமர்சனம் செய்து, தங்களை புனித படித்துக் கொள்வது, இந்த புனித வேலைக்கு கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும், சில பிழைப்பு நடத்தும் பத்திரிகைகளும் ,போட்டி போட்டுக் கொண்டு மக்களிடம் இதுதான் அரசியல், இதுதான் அரசியல் கட்சி என்று காட்டிக் கொண்டிருக்கிறது .இது பத்திரிக்கை வேலை அல்ல .இது புரோக்கர் வேலை .
பத்திரிக்கை என்றால்,மக்களிடம் உண்மையை சொல்வது தான் பத்திரிக்கை. பத்திரிக்கை என்று சொல்லி புரோக்கர் வேலை செய்வது பத்திரிகை வேலையல்ல. தெரியாதவனை ஏமாற்றுவது திறமை அல்ல. அந்தத் திறமை தெரிந்தவர்களிடம் வேலைக்காகாது. ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அவனை ஏமாற்றுவது புத்திசாலி வேலை அல்ல.அதைத்தான் திறமை என்கிறார்கள்.
இன்றைய பத்திரிகைகள் முதல் அரசியல் வரை ,அதிகாரம் வரை, இதுதான் திறமையா? மேலும், இந்த மக்களுக்கு பாடம் எடுத்தால் கூட ,இவர்களுக்கு இந்த தேர்தலை பற்றியும் ,அரசியலைப் பற்றியும், அரசியல் கட்சியை பற்றியும் ,புரிய வைக்க முடியுமா? என்பது தெரியவில்லை. இவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் கொடுத்தது மிகப்பெரிய தவறு. ஒருவரை தேர்வு செய்வதற்கு ,அவரே பணம் கொடுக்கிறார் என்றால், பணம் கொடுப்பவர் அதற்கு தகுதி இல்லை என்பதால் தான், அவர் பணம் கொடுக்கிறார். தகுதியானவர் ஏன் பணம் கொடுக்க வேண்டும் ? பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்ய எவரும் வர மாட்டார்கள் .
மேலும், பணத்தை சம்பாதிக்க தான் அவர்கள் இருப்பார்களே ஒழிய, அவர்கள் ஒரு காலம் தங்களுடைய பணி ,மக்களுக்கான பணி என்பதை உணர மாட்டார்கள் . அதனால் தான், நாட்டில் உள்ள பொது சொத்துக்கள் எப்படி சட்டப்படி கொள்ளையடிக்கலாம்? இதற்கு தான் பஞ்சாயத்து தலைவர் பதவியா? இதற்கு தான் நகராட்சி தலைவர்யா? பதவி பேரூராட்சி தலைவர்யா? பதவி தேவைப்படுகிறதா ?
எனவே, மக்கள் கொடுத்த அதிகாரத்தை சட்டப்படி கொள்ளை அடிக்க அதற்கு துணை போகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அதன் முக்கிய துறை ரீதியான அதிகாரிகள் மீது ,ஊழல் சட்டங்கள் கொண்டு வந்தால் தான், இதற்கெல்லாம் மேலும் மற்றொரு செக் வைக்க முடியும். இப்படி பல இடங்களில் செக் வைத்தால் ,தகுதியற்றவர்கள் இந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள். அதனால் ,உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு ,தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை பெறுவதற்கு வைத்த செக் போல, இதற்கும் செக் வைத்தால், நாட்டில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு, இப்படி ஒரு பொதுநல வழக்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்தது போல, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் ஊழல் சட்டங்கள் பாய, சமூக ஆர்வலர்கள் ஏன் பொதுநல வழக்கு தொடரக்கூடாது?