அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram

நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில்  எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள்.

அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள்,  இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு தகுதி இல்லாதவர்கள் எல்லாம், இந்த மீடியா விளம்பரத்தில் வளர்ந்திருக்கிறார்கள். 

அதேபோல் சாமியார்களில், ஜோதிடர்களில், போலி சாமியார்கள் ,போலி ஜோதிடர்கள், உருவாகி இருக்கிறார்கள். மேலும், பத்திரிக்கை துறையில் போலிகளைப் பார்த்து செய்தி துறையே நடுங்குகிறது . ஒருவர் ஒரு செய்தி போட்டால், நானும் பத்திரிகை என்று கொண்டு வந்து காட்டுவதற்கு  தயாராக இருக்கிறார்கள். பணத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம்,  அது அரசியலாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும் ,எல்லாவற்றிலும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும், அத்தனையும் தகுதிக்கும், தரத்திற்கும், முக்கியத்துவம் அங்கே இருக்காது. 

ஒரு ஜோதிடரிடம் போனால் என்னோட பீஸ் ஆயிரம், இரண்டாயிரம் என்று சொல்வார்கள் . சொல்பவர்களின் ஜாதக கணிதம் நூற்றுக்கு 25 சதவீதம் கூட அதில் நடக்காது. அதாவது இவர்கள் சொன்னதற்கும், நடைமுறைக்கும் ஒத்து போகாது. அப்படி என்றால் அது நடக்காது. அதேபோல் சாமியார்கள், இந்த போலி சாமியார்கள், வருமானத்தை குறிக்கோளாக வைத்துக் கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்வார்கள். 

அதேபோல் அரசியல்வாதி பணம் மட்டும்தான்  நோக்கமாக இருக்குமே தவிர, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்? அவர்களுடைய பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் போலி அரசியல்வாதிக்க இருக்காது. ஆனால், பேச்சிலே கொடுப்பது போல் பேசி, ஆளை கவிழ்த்து அனுப்புவார்கள்.

 ஆனால், பதவிக்கு மட்டும் அலைந்து கொண்டிருப்பார்கள். மக்களுக்கு செய்வதிலே எந்த ஈடுபாடும் காட்ட மாட்டார்கள். ஆனால், பதவி அதிகாரத்திற்கு மட்டும் அலைந்து கொண்டிருப்பார்கள். இதுதான் அவர்களுடைய உண்மையான முகம். மேலும்,இந்த போலி சாமியார்கள் காவியை உடுத்திக்கொண்டு ,கொட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு, இறைவன் மீது பற்று இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். பணத்தின் மீதும் உலக இச்சைகள் மீதும் பற்று வைத்துக் கொண்டு, இறைவன் மீது பற்று இருப்பதாக போலி வேஷம் போடும் சாமியார்கள் அதிகமாகி விட்டார்கள். தவிர, 

உண்மையான சாமியார்கள் நாம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். அவர்கள் பணத்திற்காகவோ, பொருளுக்காகவோ அலைய மாட்டார்கள். இறைவனே கதி என்று கிடப்பார்கள். இவர்கள் இப்படி என்றால் பிராமணர்களில் யாக பூஜை செய்கிறேன். அந்த பூஜை செய்கிறேன், இந்த பூஜை செய்கிறேன், இந்தக் கோயிலுக்கு போங்கள் ,அந்த கோயிலுக்கு போங்கள் என்று சொல்லி  எத்தனையோ பேர்பணம் கொடுத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

 இறைவனை நாம் பக்தியோடு வணங்கினால், நம்மை நோக்கி வருபவர் இறைவன். இறைவனை நாம் எந்த அளவிற்கு நம்புகிறோமோ, அந்த அளவுக்கு இறைவன் நம்மை தேடி வருபவர். அதாவது பக்தர்களை தேடி இறைவன் வருவான். இறைவனை தேடி பக்தர்கள் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இறைவனே நம்முடைய பக்தர்களுக்கு என்ன செய்யலாம்? என்று செய்ய  காத்துக் கொண்டிருப்பார்.அதாவது

நம்முடைய அரசனும் அல்லது முதலாளியும் அவர்களிடம் விசுவாசமாக இருந்தால் அவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வார்கள். அதேபோல் நாம் இறைவனை தாய், தந்தை போல  நேசித்தால் அவன் நமக்கு அதே கருணையோடு நமக்கு தாயுள்ளத்தோடு செய்வார் .இதுதான் இறைவன். இறைவன் எப்படி செய்வார்? எப்படி இருப்பார் ?என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. நாம் இறைவனை நெருங்க, நெருங்க இங்கே அதிகம் தேவைகள் இருக்காது.தேவைகள் அதிகம் இருப்பவர்கள், இறைவனை நெருங்க முடியாது. 

அதேபோல் இந்தப் போலி பத்திரிகையாளர்கள் ,சிறிய பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள், அது தினசரியாக இருக்கட்டும், மாதமாக இருக்கட்டும், வாரமாக இருக்கட்டும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ,எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை? என்பதை விட ,அவர்களுடைய சொந்த நோக்கத்துக்கு தான் அதிகம் போலிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதாவது  தன்னை ஒரு பெரிய பத்திரிகையாளர் போல காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு அலாதியான பிரியம். நானே பார்த்திருக்கிறேன், எத்தனையோ பேர் கழுத்தில் போட்டுக்கொண்டு சுற்றுவார்கள்.

அதிலும் இந்த அரசு அடையாள அட்டை என்றால் இன்னும், ஏதோ ஒரு பெரிய தகுதி இருப்பது போல் கற்பனை. நாட்டில் அரசியல் தெரியாத மக்கள் 60% அதிகம் . அதனால்தான், அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சி என்று நினைத்துக் கொண்டார்கள். அரசியல் கட்சி என்பது சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பில் உள்ளவர்கள்,கட்சியில் சேர்ந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்பதை சிந்திப்பார்கள். கட்சி நமக்கு வருமானத்தை ஈட்ட கூடியது என்று நினைப்பவர்கள் தான், இப்போது அரசியல் கட்சிக்கு ஓடுகிறார்கள். 

அதில் எந்த கட்சிக்கு போனால் அதிகம் சம்பாதிக்கலாம் ?எந்த கட்சியில் நம்மளை அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள்?இதற்கு என்ன காரணம்? கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அல்லது youtube களில் நீங்கள் என்ன வேண்டுமானாலும், சொல்லிவிட்டு போகலாம். நான் வானத்தை வில்லாக வளைப்பேன். செய்ய முடியாததை எல்லாம் செய்து விடுவோம் என்று ஆணித்தரமாக பேசி விடுவார்கள். அதை நம்பி  ஓட்டு போடுவார்கள். அவர்களும் வாங்கிய பணத்திற்கு நம்பிக்கையானவர்களாக வாக்களிப்பார்கள். இவர்களை பேசி, பேசி இவர்களுடைய வீக்னஸ் தெரிந்தவர்கள். இவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்வார்கள்.மேலும்,

அதனால் யாரெல்லாம் தண்ணி ( Tasmac )அடிப்பார்கள்? அவர்களுக்கு அதை கொடுத்தால், எந்த வேலை சொன்னாலும் செய்வார்கள் என்பது தெரியும். இப்போது என்ன என்றால், தேர்தல் ஆணையம் ஒத்துக்கொண்டால், தினமும் கால் கோட்டர் குடிகாரர்களுக்கு ஃப்ரீ என்று கூட  தேர்தல் அறிக்கையில் அறிவித்து விடுவார்கள். இப்படி சமூக நோக்கங்களை தவிர்த்து, மக்கள் நலனை தவிர்த்து, பணத்தை சம்பாதிக்கும், வியாபார அரசியலும்,பதவி வெறி அரசியலும்,ஜாதிகளை ஏமாற்றும் அரசியலும், மதத்தினரை ஏமாற்றும் அரசியலும், போலித்தனமான அரசியல். இதில் எத்தனை கோடி? போட்டு, எத்தனை கோடி எப்படி எடுக்கலாம்? இதுவா அரசியல்? 

இதுதான் அரசியல், என்று கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகங்கள் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆங்கில தொலைக்காட்சிகள், இதை தான் பெருமையாக மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறதா? அப்படி என்றால்  அந்த வியாபார அரசியலுக்கும், இவர்களுடைய பத்திரிக்கை வியாபார அரசியல் இரண்டும் ஒன்றாகத்தான் உள்ளது. 

இந்த கார்ப்பரேட்டுகளே, இந்த லட்சணம் என்றால், பத்திரிகை என்றால் என்ன என்று தெரியாது, நானும் பத்திரிகை என்று RNI வாங்கிக் கொண்டு சமூகத்திற்கும், மக்களுக்கும் என்ன இவர்களால் சொல்ல முடியும்? அதனால்தான், செய்தித் துறை இந்தப் போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் பார்த்து பயப்படுகிறது .இங்கே பத்திரிக்கை நடத்த என்ன தேவை? என்பதை விட , செய்தித் துறை பணம் தேவை என்று மொட்டையாக சர்க்குலேஷன் என்ற விதியை சொல்கிறது. உன்னுடைய பத்திரிக்கை சமூக நோக்கத்திற்கு தேவையா? இல்லை மக்களுக்கு தேவையா? என்பதெல்லாம் செய்தித் துறைக்கு தேவையில்லை. 

அந்த பத்திரிக்கை  எவ்வளவு சர்குலேஷன்? எவ்வளவு பிரிண்ட்? மக்களிடம் எவ்வளவு விற்பனை என்று  கேட்பதில்லை.சர்குலேஷன் இருக்கிறதா? இதுதான் பத்திரிக்கைத்துறை . நீதித்துறை! நீதித்துறையில் ஒரு லட்சம்,இரண்டு லட்சம் கொடுத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் படிக்காமலே பட்டங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். கல்லூரியில் படித்து பட்டம் பெற்று சட்டம் பயின்றாலே, ஒரு வழக்கில் வெற்றி பெறுவது என்பது ஒரு பெரிய போராட்டம் தான். ஆனால், படிக்காமலே இந்தப் பட்டத்தை வாங்கி வந்து, கோட்டு போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த போலிகள்.பெரும்பாலும் இவர்கள் அரசியல் கட்சிகளில் பொறுப்புக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஜாதி கட்சி என்றால், இவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அப்போதுதான், அவர்களுடைய ஜாதிகளை இவர்கள் ஏமாற்ற முடியும்.மேலும்,

கல்வி என்பது கடை சரக்கு பொருள் அல்ல, அதேபோல் ஒருவருடைய தகுதி, திறமை, கடையில் விற்கும் பொருள் அல்ல. இதையெல்லாம் பார்த்து தான்  ஒருவருக்கு பதவி, அதிகாரம் வழங்கப்பட்டது. தவிர, அவர்களுடைய நேர்மை, செயல்பாடுகள் இதையெல்லாம் பார்த்து தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். இப்போது யார் அதிக பணம் கொடுப்பான்? என்று பார்த்து வாக்களிக்கிறார்கள். மக்கள் செய்கின்ற தவறு, மக்களிடமே வந்து சேருகிறது. மக்கள் இனிவரும் காலத்தில் எவன் வந்தால் என்ன? எவன் போனால் என்ன? என்று நினைக்க முடியாது. 

வாழ்க்கையின் நெருக்கடிகள், போராட்டங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் ,அரசியல் கட்சியினரால் மக்களுக்கு உருவாகிறது. அதனால், இவர்களும் நல்லவர்கள் வேஷம் போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்றைய அரசியல் கட்சிகளில் சேவை செய்பவர்களை விட, சண்டைக்கு மல்லு கட்டுப்பவர்கள் தான் அதிக அளவில் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். எனவே, நாட்டில் போலிகளால் உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு போராட்டங்களும் ,நெருக்கடிகளும், பிரச்சனைகளும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க வேண்டி உள்ளது எவ்வளவு? சந்தித்தது எவ்வளவு? ஒரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திற்கும் அவர்கள் செய்த நல்லது என்ன? கெட்டது என்ன? இதையெல்லாம் திரும்பிப் பார்க்க வேண்டிய காலகட்டத்தில்!

 தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் இச்செய்தி மிக, மிக முக்கியமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரவர் இதை ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளட்டும்.ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *