அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்! ஊழல் ஒழிக்க முடியுமா? குடும்ப அரசியலை ! ஒழிக்க முடியுமா ?-நாட்டில் ஊழலை ஒழித்தால்! இந்தியா வல்லரசு தான் – ஆசிரியர் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டின் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும், அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது பற்றி யோசனை தெரிவிக்கவும் என்று இளைஞர்களிடம் யோசனை கேட்டுள்ளார்.
இது பற்றி அரசியல் தெரிந்தவர்கள் தான் பதில் அளிக்க முடியும் . தெரியாதவர்கள் பதில் அளிக்க முடியாது .மேலும், இது பற்றி நாட்டில் உள்ள பத்திரிகைகளிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்திருக்கலாம் .ஏன்னெறால் பத்திரிகைகள் ,அதன் தரத்தை வெளிப்படுத்தி இருக்கும் .அது மிக கருத்தாய்வாக எடுத்துக் கொள்ளலாம் . மேலும்,இந்த கருத்தாய்வு சட்டத்தின் மூலம் இப் பிரச்சனையை தீர்த்த முடியுமே தவிர, அரசியலுக்கு புதிய வரவாக உள்ள இளைஞர்களால் இதை தடுக்க முடியுமா? நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் .அதற்கு கடுமையான சட்டத்தின் மூலம் தான் ஒழிக்க முடியும் . அதாவது ஊழல் செய்த பணமும் ,சொத்துக்களும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்.

பினாமி சொத்துக்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். ஊழலுக்கு துணையாக நிற்கக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து கணக்கு ஒவ்வொரு வருடமும் வருமானவரித்துறை ஆய்வு செய்யப்பட வேண்டும் . மேலும் ,அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இவர்களுடைய சொத்து கணக்கு ஒவ்வொரு ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர வருமான வரி துறையும் தாமாக முன்வந்து இவர்களுடைய சொத்து கணக்குகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் .

மேலும், ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் மீது ஊழல் புகார்கள் பொதுமக்கள் கொடுக்கும் புகார் என் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை மிக அதிகாரங்களை கொண்டு இந்த குழுவில் புகார்கள் விசாரிக்க வேண்டும். விசாரணையில் அது ஊழல் செய்த பணம் ஒரு செய்த சொத்து என்று நிறுவனம் ஆனாலே அதை நாட்டோடமையாக்கப்பட்ட வேண்டும் அதன் பிறகு நான் நிரபராதி தான் என்று சொன்னால் அல்லதுஊழல் செய்யவில்லை என்று சொன்னால் நீதிமன்றத்திற்கு சென்று இவ்வழக்கை அவர்கள் சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இவர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்தா வாங்கும் வழக்குகள் இருக்கக் கூடாது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலவையில் இருந்தால் அல்லது வழக்கு முடிவுக்கு வரும் வரை அவரை தேர்தலில் நிற்க்க வைக்க கூடாது.

நாட்டில் ஊழல் செய்து சொத்து சம்பாதித்த ஆட்சியாளர்கள் முதல் பஞ்சாயத்து தலைவர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையமும் , வருமானவரி துறையும் ஆய்வு செய்து ஊழல் செய்த பணமும் சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும் . மேலும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் . இத தவிர நடுநிலையான ஊடகங்களுக்கும் சமூக நலன் ஊடகங்களுக்கும் மட்டுமே சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும் அரசியல் கட்சி பத்திரிக்கை வியாபார பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அந்த வரிசையில் இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீண்டிப்பதை தவிர்க்க வேண்டும் .

ஊழல் செய்த பணத்தை அல்லது சொத்துக்களை அரசு உடனே பறிமுதல் செய்ய வேண்டும் அது உண்மையாக உழைத்தது என்றால் நீதிமன்றத்தில் அவர்கள் சென்று சொந்த செலவில் வாதாடி ஆதாரங்கள் கொடுத்து மீட்கட்டும் . இதில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமே ஒழிய இந்த சட்டத்தில் ஓட்டையை வைத்து ஊழல்வாதிகள் தப்பிக்க கூடாது .அப்படி செய்து பாருங்கள் .நாட்டில் ஊழல் ஒழிக்க முடியும். நாட்டில் ஊழலை ஒழித்தால் இந்தியா வல்லரசு தான் – ஆசிரியர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *