அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு உதயசூரியன் சின்னம், டீ சர்ட் அணிந்து வருவது, சட்டத்திற்கு புறம்பான ஒன்று. அதுவும் அரசு நிகழ்ச்சிகளில் அவ்வாறு பங்கேற்பது அரசின் விதிமுறைகளுக்கு எதிரான ஒன்று. அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி பொதுவான மக்களுக்கான நிகழ்ச்சி .
இதில் அரசு அதிகாரிகளும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கும் உண்டு. மேலும், பொறுப்புள்ள உயர் பதவியில் இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், கட்சி பணி ஆற்றுவது போல், அரசு பணியாற்றுவது சட்ட விதிமுறைகளுக்கு எதிரான ஒன்று .இது சம்பந்தமாக சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வாழ்க்கு விசாரணை விரைவில் வரும் என தகவல் .