ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை சவுக்கு சங்கர் போல ஆக்கலாம் என்று திமுக அரசு நினைகிறதா?

அரசியல் ஆன்மீகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram

நாட்டில் அரசியல் பேசுவதும் தவறு என்கிறீர்கள். ஆன்மீகம் பேசுவதும் தவறு என்கிறீர்களா? சவுக்கு சங்கர் திமுக ஆட்சியையும், ஸ்டாலின் குடும்பத்தையும் தொடர்ந்து பேசி வந்ததால் இந்த எதிர்ப்பு என்பதை அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. ஆனால், இங்கே ஆன்மீகவாதி மகாவிஷ்ணு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருந்து வரும்போது, அவருக்கு எதிரான தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவரை குற்றவாளியாக்க காவல்துறை முயற்சி செய்கிறதா? மகாவிஷ்ணுவின் விஷயத்தில் நீதிமன்றம் மௌனம் சாதிக்கிறது. 

ஆன்மீகவாதி மகாவிஷ்ணுவை அரசு பள்ளியில் விருந்தாளியாக வரவழைத்து பேச சொல்லிவிட்டு, அவர் பேசியது தவறு என்று கூறிவிட்டார்கள். இந்த கதை எதற்காக என்று காவல்துறை வரை நீடிக்கிறது? மேலும் அவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் இப்படி, அப்படி பல போலி செய்தி ஊடகங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் குடை பிடித்துக் கொண்டு கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக இரண்டு வருகிறது. மகாவிஷ்ணு செய்த தவறு என்ன?

 ஒருவர் பேசிய கருத்துக்கு ஆயிரம் கருத்துக்களை கற்பனை செய்து பேசலாம். அதிலும் அதிகாரம் இருக்கிறது என்றால், நீங்கள் என்ன சொன்னாலும் அது சட்டமாகிறது. அதிகாரம் இல்லாத மக்கள் பேசுவது சட்டமாகவில்லை. எதற்கும் ஒரு அடிப்படைய ஆதாரம் இல்லாமல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் ஒரு அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார். அவருடைய நல்ல நேரம் மக்கள் அவரால் பயனடைந்தவர்கள் யாருமே அவரைப் பற்றி தரக்குறைவாக, தவறாக சொல்லவில்லை. ஆனால் செய்திகள் மட்டும் தவறாக மாறி மாறி வருகிறது.

 இங்கே தொழில் நிறுவனங்களில் இருந்து பணம் வாங்கினார். மற்றவர்களிடம் இருந்து பணம் கேட்டார். ஒரு சாமியார் அல்லது ஒரு அறக்கட்டளை நிறுவிய ஒரு நபர் பல இடங்களில் பணத்தை கேட்டு தான் வாங்குவார். இதில் என்ன தவறு? விருப்பப்பட்டு தான் அவருக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். யாரையும் போய் மிரட்டி பணம் வாங்கவில்லை. அப்படி மிரட்டி வாங்கி இருந்தாலும், அது சட்டப்படி தவறுதான் .அப்படி யாராவது மிரட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? 

ஆன்மீக வகுப்புகள் நடத்தி அதற்கு கட்டணமாக 20 ஆயிரம் வசூலித்தார். வெளிநாடுகளில் போய் அவர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அங்கே அதிக பணம் கிடைத்தது. விருப்பப்பட்டு மக்கள் கொடுக்கிறார்கள். இது எத்தனையோ சாமியார்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இதில் என்ன தவறு?வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் சர்ச்சுகளுக்கும், தர்காக்களுக்கும் வருகிறதே ,அதைப் பற்றி எந்த ஊடகமும் ஏன் வாய் திறக்கவில்லை? யாரையும் போய் ஏமாற்றவில்லையே ,சரி அப்படியே வைத்துக் கொள்வோம். ஆன்மீகவாதி மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் .

ஆனால், அரசியல்வாதி என்ன சொல்லிட்டு நீங்க அரசியலுக்கு வரீங்க? உங்க சொத்து கணக்கு யாருக்காவது காட்டுறீங்களா?கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து குறிப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னீர்களா ? என்ன சொல்லி வந்தீர்கள்? எப்படி உங்களுக்கு மட்டும் சொத்து கணக்கு உழைக்காமல் கோடிகளில் புரளும்? ஒரு சாதாரண கிராமத்திலிருந்து நகரம் வரைக்கும் உங்களுடைய வருமானம் அரசியலில் எவ்வளவு கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து பெருக்கிக் கொள்வது பத்து தலைமுறைக்கு ,நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்துக் கொள்வது இது எல்லாம் அரசியலில் நடக்கலாம்.

ஆனால், மக்களிடம் பிச்சை எடுத்து, பிச்சை எடுத்த பணத்தில் கூட 100 பேருக்கு சோறு போட்டு, நல்ல விஷயங்களை, நல்ல கருத்துக்களை  மக்களிடம் சொல்லி ,தெய்வ பக்தியை மக்களிடம் சொல்லி வந்துள்ளார். இவ்வளவு தானே . இதனால் யார் பாதிக்கப்பட்டார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ?என்பதை திமுக அரசோ அல்லது பத்திரிகைகளில் செய்தியை வெளியிடுபவர்களோ ஆதாரத்துடன் நிரூபிப்பார்களா? இதுவே ஒரு கிறிஸ்தவரோ அல்லது ஒரு முஸ்லிமோ இப்படிப்பட்ட விவகாரங்களில் இருந்தால், இந்த அரசு என்ன செய்திருக்கும்? அதைப்பற்றி வாயை கூட திறந்து இருக்காது. 

இதையெல்லாம் பிஜேபி ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ஆன்மீகவாதிகளே இதை பேசும் அளவிற்கு வந்துள்ளது. எத்தனையோ கருத்துக்களை எச் ராஜா மேடையில் பேசி இருப்பார். இந்த ஆன்மீக விஷயத்தில் பாதிக்கப்பட்ட மகாவிஷ்ணுவிற்காக ஏன் பேசவில்லை? பிஜேபி மக்கள் பிரச்சினைகளில் இருந்தும், மக்களுக்கான செயல்பாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டில் விலகி நிற்கிறது. இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றாமல், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன் .

மேலும், மக்களைப் பார்த்து பிரச்சனைகளை பார்த்து, தலையை கவுந்து கொண்டால், தமிழ்நாட்டில் எக்காலத்திலும் பிஜேபி ஆட்சிக்கு வர முடியாது. இங்கே திமுக, அதிமுகவிடம் போட்டி போட வேண்டிய சூழ்நிலைக்கு தான் அரசியல் இருக்கிறது .அதே நிலைமை தான் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் எப்படி போட்டி போட்டு ஜெயிக்கப் போகிறார்கள்? இங்கே திருடனும் நல்லவன் என்று பேசிக் கொண்டிருப்பான். முட்டாள்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதற்கும் 100 பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். 

அதனால், பிரச்சனையை சமாளிக்காமல் அரசியலில் இல்லை. தமிழ்நாட்டில் திமுக ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தால், ஐந்தாண்டு காலம் கடத்தி இருக்கிறது. விரைவில் தமிழ்நாட்டில் அதனுடைய சாதனை என்ன? என்பது மக்கள் அதிகாரத்தில் வெளிவர உள்ளது. ஒரு நல்ல விஷயம் தவறு என்கிறீர்கள்? அப்படி என்றால், தமிழ்நாட்டில் போதைப்பொருள் கஞ்சா கடத்தல், இது எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் ?பள்ளிக்கல்வி கல்லூரிகளிலே விற்கப்படுகிறது? அது எல்லாம் நல்ல விஷயமா? இதற்கு மக்கள் தான் தீர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *