ஆன்மீகம் என்றால் பட்ட பட்டையாக விபூதிகளும், நாமங்களும், போட்டுக்கொண்டு வேஷம் காட்டுவது அல்ல. உண்மையான தெய்வ வழிபாடும் ,ஒழுக்கமும் தான் ஆன்மீகம் என்று ஒரே வரியில் சொல்லி விடுகிறார்.
இந்த ஆன்மீக வாழ்க்கையில் பயணம் செய்பவர்கள், எல்லோருமே அந்த நிலையை அடைய முடியுமா? அது முடியாது. எத்தனையோ தவறுகள் வந்து அதற்கு இடையூறாக இருக்கிறது. அது மட்டுமல்ல, உணவு பழக்க வழக்கங்கள், தேக நலம் இவையும் முக்கியமானது.
தவிர, ஆசை என்பதை துறக்காமல், அதை அடைய முடியாது. இங்கே ஆசையை துறந்தால் தான் ஆண்டவனை அடைய முடியும். ஆசை ஒரு பக்கம், வேஷம் ஒரு பக்கம், கர்ம வினை ஒரு பக்கம்,இந்த நிலையில் உண்மையான நிலையை அடைவது இன்றைய கலி காலத்தில் மிகவும் கடினமான ஒன்று. அதனால் தான் நிறைய போலி சாமியார்கள் உருவாகி ,இதற்கு ஒரு கலங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். போலி சாமியார்கள் இறைவனை அடைய முடியாது.
இறைவனை அடைய சாமியார் வேஷத்தில் தான் அடைய முடியும் என்ற ஒரு விதிமுறையும் கிடையாது. இறைவன் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும், அவனுடைய அனுகிரகத்தையும், அருளையும் கொடுக்க முடியும்.
அவனுடைய அருள் இன்றி, அவனை நெருங்கவோ ,அடையவோ முடியாது. அதனால் ஆன்மீகத்தை கடைப்பிடித்து ,அந்த நிலையில் இறைவனை அடைய நினைப்பவர்கள் உண்மையான தெய்வ வழிபாடும், ஒழுக்கமும் மிகவும் அவசியம். மேலும்,
இறை சிந்தனையைத் தவிர ,மற்றவற்றில் நாட்டம் செலுத்துபவர்கள், அதில் தோல்வியை தழுவுவார்கள். எனவே, இதில் வெற்றி பெறுபவர்கள் மிகச் சிலராகத்தான் இருக்க முடியும்.