ஆன்மீக சித்தாந்தத்தை அரசியல் சித்தாந்தம் அழிக்க முடியுமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

INDIA POLITICAL  ALLIANCE

பிஜேபி ஆன்மீக சித்தாந்த அரசியல். இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் சித்தாந்தம் கூட்டணி கட்சிகள் . இது தவிர,மீடியாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் எந்த 

சித்தாந்தமும் இல்லாமல் , பெரிய கட்சிகளிடம் பெட்டிகளை வாங்கும் சித்தாந்தமும், பல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அரசியல் தெரியாதவர்களிடம் ,அரசியல் செய்து கொண்டு ,அரசியல் தெரிந்தவர்களையும் ,படித்தவர்களையும் மிரட்டிக்கொண்டு, அரசியல் செய்யும் சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் தான் பார்க்க முடியும் .

மேலும் ,ஏதோ ஒரு அரசியல் சித்தாந்தத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் சீமான் போன்ற பல அரசியல் கட்சிகள், எந்த நோக்கத்திற்காக இவைகள் செயல்பட்டு வருகிறது? என்பது கூட தெரியாதவர்கள், அரசியல் என்கிறார்கள் .அப்படி என்றால் இந்த கட்சிகள் எல்லாம் மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? சமூகத்திற்கு இதன் பயன்கள் என்ன? இதைப் பற்றி ஆய்வு செய்தால், அரசியல் தெரிந்தவர்களுக்கு உண்மை புரியும். தெரியாதவர்களுக்கு இந்த உண்மைகள் புரியாது .அதனால் தான், மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து அரசியலை படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

மேலும் ,அரசியல் சித்தாந்தம் ஆன்மீக சித்தாந்தத்தை அழிக்க முடியுமா? ஒரு காலம் முடியாது. ஏனென்றால் ,ஆன்மீகத்தின் அடிப்படையில் தான், மனிதன் மனிதனாக மாறுகிறான். மிருகம் பாதி ,மனிதன் பாதி என்ற வாழ்க்கையில் இருந்து ,மனிதனாக மாறி, மனிதன் தெய்வ நிலைக்கு மாறுகிறான். அப்படி என்றால் மிருகம் பாதி ,மனிதன் பாதி என்ற வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ,அரசியல் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் .அவர்கள் எப்படியும் பேசுவார்கள், எப்படியும் வாழ்வார்கள்.

அதனால், பிஜேபியில் இருப்பவர்கள் அப்படி இல்லையா? என்று கேட்கக் கூடாது. ஏனென்றால், நான் பேசுவது இங்கு சித்தாந்தத்தை மட்டும் தான். ஒரு அரசியல் கட்சி என்ன சித்தாந்தத்தை கையில் எடுத்துள்ளது ?அதை மட்டும் தான் இங்கே தெளிவு படுத்துகிறேன் .பல அரசியல் கட்சிகளுக்கு பல சித்தாந்தங்கள் இருக்கலாம். ஆனால் ,அதன் அடிப்படை வேர்கள் எங்கிருந்து தோன்றுகிறது? இதுதான் முக்கியம். எத்தனையோ பேருக்கு இந்த உண்மைகள் கூட பல அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு தெரியாது.

 இங்கே கட்சி என்றால், கொள்ளை அடிப்பதற்கு,சட்டத்தை ஏமாற்றுவதற்கு, அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல கட்சி. அரசியல் கட்சி என்றால், எந்த நோக்கத்திற்கானது? என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இங்கே ஆன்மீக சித்தாந்தத்தில் பிரதமர் மோடி ,யோகி ஆதித்யநாத் மற்றும் பல ஆன்மீகவாதிகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மக்களுக்கான சேவை மட்டுமே முக்கியம் என்று செய்து வருகிறார்கள். அங்கே ஊழல் இருக்காது .ஆனால், அரசியல் சித்தாந்தத்தில் ஊழல் மட்டுமே முக்கியமாக இருக்கிறது .அவர்களுடைய சொந்த நலன் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. ஆனால், ஆன்மீக சித்தாந்தத்தில் மக்கள் நலன் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. இது எப்படி ஆன்மீக சித்தாந்தத்தை அழிக்க முடியும்.

அது மட்டுமல்ல, இந்தியாவில் எத்தனையோ மகன்கள் அவதரித்த இந்த மண்ணில், ஆன்மீக சித்தாந்தத்தை அழிக்க முடியாது .மேலும், இன்று கூட எத்தனையோ திமுக ,அதிமுக கட்சி பொறுப்பாளர்கள் ,ஐயப்பன் பக்தர்களாகவும், குருசாமிகளாகவும் வேறு சில சிவன், விஷ்ணு ,அம்பாள் பக்தர்களாகவும் இருந்து வருகிறார்கள். 

மேலும் ,இந்து மதத்திற்காகவும், இந்துக்களுக்காகவும், அவதார புருஷர்கள் பல யுகங்களாக தோன்றுகின்ற இந்த மண்ணில் ,இந்து மதத்தை தவிர, வேறு எந்த மதமும், அதற்கு ஈடு இணை இல்லை .இதை அரசியல் சித்தாந்தம் அழிக்க முடியுமா?

எப்போதெல்லாம் இந்து மதத்திற்கு சோதனைகள் வருகின்றதோ, அப்போதெல்லாம் அவதார சித் புருஷர்கள் இந்த மண்ணில் தோன்றி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் வடக்கில் பல மகான்களும்,சித்தர்களும் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்களில் ஒருவர் தான் இன்று மிகப்பெரிய ஒரு யோகி பிரதமர் நரேந்திர மோடி .எத்தனையோ பிரதமர்கள் இந்தியாவில் ஆட்சி செய்திருந்தாலும், இவர் மட்டும் தான் காசியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். இன்று காசி மாநகரம் மிகப்பெரிய புனித புண்ணிய ஸ்தலம், விளக்குகளால் ஜொலிக்கிறது.

அதே போல் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ,ராமர் கோயில் கட்டப்பட்டு அதற்கு கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது .அப்படிப்பட்ட ஒரு சிறப்பு எந்த பிரதமருக்கும் கிடைக்கவில்லை .இது மிகப் பெரிய யோகிகள், மகான்கள், அவர்களால் தான் இது முடியும். யார் வேண்டுமானாலும், இறை பணியை செய்து விட முடியாது. இறை பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே ,இறைவன் தேர்ந்தெடுப்பார். அங்கே அரசியல் சித்தாந்தம், ஆன்மீக சித்தாந்தத்தில் எடுபடாது. இன்று மக்களை நோக்கி ஆன்மீக சிந்தாந்தம் வளர்ந்து விட்டது. அரசியல் சித்தாந்தம் குறைந்துவிட்டது .

இது சித்தாந்தம் அல்ல, வேதாந்தமும் அல்ல ,மனித வாழ்க்கை இறைவனை நோக்கி பயணிப்பது தான் சிறந்த வாழ்க்கை .அதில் தான் நிம்மதி ,சந்தோஷம் நிறைவு கிடைக்கும். மணி போன்ற பத்திரிக்கையாளர்கள், அரசியலுக்காக இந்த சித்தாந்தங்களை பேசி ஒன்றும் பயன் இருக்காது .அது காலத்தின் கட்டாயத்தில் அதிமுக, திமுக வந்தது .அதுவே காலத்தின் கட்டாயத்தில் அழிந்து போகிறது. இதுதான் ஆன்மீகம் .

எப்போது உண்மை மக்களுக்கு இறைவன் உணர்த்துகிறாரோ, இந்த போலி அரசியல் சித்தாந்தம் அழிந்துவிடும் .தர்மத்தின் பாதையில் மனித வாழ்க்கை பயணிக்கும் போது ,அதர்மம் தானாக அழிந்து விடும். இதுதான் ஆன்மீக சித்தாந்தம் .இதற்காக தான் பல மகான்கள், சித் புருஷர்கள், யோகிகள், அவதார எடுத்து இந்த மண்ணில் அவர்கள் ஜீவசமாதி அடைந்தாலும் , இன்றும் அவர்கள் இந்த உலகை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தெய்வம் . தெய்வத்தை தேடி அலை வேண்டியது இல்லை .

தெய்வம் நம்மளை தேடி வரும். அதற்கான தகுதி மனித வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .கடவுள் எங்கே இருக்கிறார்?  என்ற கேள்விக்கு சிலையில?  கோயிலிலா ? எதில் என்பதை  அவரவர்க்கு அது உணர்த்தும் போது தெய்வம் எங்கும் இருக்கிறது. அது எப்படியும்  நமக்குள் பேசுகிறது. நமக்குள் வாழ்கிறது .அதுதான் இறைவன் .கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *