ஆற்றில் கரையாத சிலைகளின் மீதியை அகற்ற உத்தரவு .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு, முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா முன்னிலை வகித்தார். தலைமை வகித்து டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேசியதாவது:

சதுர்த்தி விழா குறித்து அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவர். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் வைக்கப்பட்ட, ஐந்து நாளில் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்பட்ட, 48 மணி நேரமாகியும் கரையாத கழிவுகளை உரிய வகையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.சிலைகளை கரைப்பதற்கு முன், கரைத்த பின், மாசு கட்டுப்பாட்டு துறையினர், நீரின் தன்மை குறித்து தர ஆய்வு செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடம் தவிர, பிற இடங்களில் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆர்.டி.ஓ.,க்கள் ஈரோடு சதீஸ்குமார், கோபி கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *