ஆளுநர் ஆர் என் ரவி மீது குடியரசுத் தலைவரிடம் புகார் – முதல்வர் மு. க. ஸ்டாலின் .

அரசியல் இந்தியா ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆளுநரை குற்றம் சொல்வதற்கு முன், உங்கள் ஆட்சியை திரும்பிப் பார்த்து ,சரி செய்து கொள்வது நல்லது.

தமிழக அரசியலில் ஆளுநருக்கும் ,முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் திமுகவின் கொள்கைக்கு அல்லது அவர்களுடைய ஆட்சியின் செயல்பாட்டிற்கு ஆளுநர் ரவி ஆரம்பத்தில் இருந்து அவர் ஒத்துவரவில்லை. இதுவரையில் தமிழ்நாட்டில் ஆளுநர்கள் ஒத்து ஊதும் ஊது குழலாகவும், ரப்பர் ஸ்டாம்பாகவும் இருந்து வந்துள்ளனர்.

 ஆனால், இவர் அவ்வாறு இல்லை .இதில் ஒரு முக்கிய கருத்து திமுக எதை செய்தாலும், அதற்கு ஆளுநர் ஒத்து போக வேண்டும் இதுதான் அவர்களுடைய கருத்து. அப்படி ஒத்துப் போக வேண்டிய அவசியம் ஆளுநருக்கு சட்டப்படி இருக்கிறதா? என்பது தான் முக்கிய கேள்வி? மேலும், இவர்கள் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், எங்களுக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது என்பது இவர்களுடைய வாதம். இந்த அதிகாரத்தை நல்ல முறையில் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஆளுநர் கருத்து. ஆளுநர் இவர்களுடைய ஊழலுக்கு ஒத்து போகவில்லை. அது முதல் தகவல் .

அடுத்தது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பிறகு சட்ட சிக்கல் சம்பந்தமாக விவாதிப்பதாக மீண்டும் கடிதம் அனுப்பினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, எதிரான கருத்துக்களையும் அரசியலும் செய்து வருகிறார் என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு. இது பற்றி திமுகவின் லீகல் டீம் அறிக்கை தயாரித்து இருக்க வேண்டும். அது சுமார் பத்து பக்கத்திற்கு குறையாமல், அவரைப் பற்றி சட்ட பிரிவுகளின் கீழ் அவருடைய செயல்பாடுகளை கடிதத்தில் குறிப்பிட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்,

இது பற்றி பல பத்திரிகை ,தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தி இருக்கின்றன. அது பற்றியும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இங்கே செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில்,ஒரு பெரிய அரசியல் இதற்குள் ஒளிந்துள்ளது. அதாவது முதல்வருக்கும், ஆளுநருக்கு இடையே ஒரு அரசியல் அது என்னவென்றால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் கடிதம் அனுப்புகிறார் .அந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்படி ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்க தகுதியற்றவர் ஆக மாட்டார் என்பது இவர்களுடைய கருத்து . தவிர நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே, ஒரு அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் இது முதல்வரின் கருத்து.

 ஆனால் ,ஆளுநர் வெளிநாடுகளில் பண பரிவர்த்தனை செய்துள்ள செந்தில் பாலாஜி ஆதாரத்துடன் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது ஆளுநர் கருத்து. ஒரு குற்றவாளி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் தான் நான் பதவி விலகுவேன் என்பது அமைச்சர் போன்ற உயர் பதவிக்கு தகுதியற்றது. குற்றச்சாட்டு வந்தபோதே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதுவே ஜெயலலிதா ஆட்சியில் ஒரு அமைச்சர் இப்படி ஒருவர் இருந்தால், ஜெயலலிதா காப்பாற்றுவாரா? அல்லது உடனே அவரை பதவியில் இருந்து தூக்கி எறிவார? ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்தாலே அவருடைய கதை முடிந்து விட்டது .அப்படி வைத்திருந்தார் ஜெயலலிதா. இங்கே செந்தில் பாலாஜி வெளிநாடுகளில் பண பரிவர்த்தனை செய்துள்ளது. ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இல்லை என்றால் ஒரு அமைச்சரை அவ்வளவு எளிதில் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் கூடாது. மேலும், ஆளுநர் மதத்தை பற்றி அடிக்கடி பேசி வருகிறார். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையை வகுத்து செயல்படுகிறோம். இதுவும் தவறான ஒன்று என்பது அவருடைய கருத்து. ஆளுநர் எந்த மதத்தையும் பற்றியும், யாருடைய மனமும் புண்படும் வகையில் பேசவில்லை. ஆனால் ஒரு மதத்தின் பேரில் வெளிவரும் தவறான கருத்துக்களுக்கு அவருக்கு பதில் அளிக்க உரிமை உண்டு. ஆளுநர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முன்னால் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோப்புகளை கிடப்பில் போட்டு வைக்கிறார் இந்த ஒரு குற்றச்சாட்டு மட்டும் தான் ஆளுநரை பற்றி பேச வேண்டிய ஒரு கருத்து.

ஆனால், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மட்டுமல்ல, மின்சாரத் துறையிலும் மதுவிலக்கு துறையிலும், ஊழல்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது தவிர, கடந்த ஆட்சியில் செய்த ஊழல் புகார்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை முதலமைச்சர் காப்பாற்றுவது அல்லது அவருக்காக வாதாடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வீட்டுமனை பிரிவு கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற இந்த கட்டண உயர்வு சாமானிய நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஒரு பக்கம்,

 அரசியல் நிர்வாகத்தில் எங்கு தொட்டாலும் ஊழலாக உள்ளது .அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல் என்பது தொடர்கிறது. அடுத்தது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதுவும் சரியான முறையில் இல்லை .இதை எல்லாம் மறைத்து ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற ஊடகங்கள் ,கோடிக்கணக்கில் விளம்பரங்களை ,சலுகைகளை மக்களின் வரிப்பணத்தில், அனுபவித்துக் கொண்டிருக்கிறது .மக்கள்தான் இதில் ஏமாளிகள். மக்களுடைய வரி பணம் தான், இந்த ஊடகங்களுக்கு சன்மானமாக போய் சேருகிறது.

 இது எப்படி அரசின் கொள்கை முடிவாகும் என்பது தெரியவில்லை? அப்படி என்றால் பத்திரிகை சுதந்திரம் என்பது சட்டத்திலிருந்து எடுத்து விடுங்கள் .அது வெறும் வாய் வார்த்தைக்கு பேசுகின்றார் பேச்சா? அல்லது பத்திரிகையின் சுதந்திரம் என்பது அரசின் கொள்கை முடிவா? எப்படி பத்திரிகை விதிமுறையில் கொண்டு வர முடியும்? இது போன்ற பல தவறான விஷயங்கள் பத்திரிகை துறையில் இருக்கிறது.

இது தவிர ,சர்குலேஷன் என்பது அதுவும் ஒரு தவறான விதிமுறை, சர்குலேஷனை வைத்து பேசப்படுகின்ற, இன்றைய பத்திரிகைகள் எத்தனை மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறது? சலுகை விளம்பரங்களை அனுபவிக்கின்ற எத்தனை பத்திரிகைகள் ,ஊழலுக்கு எதிரான குற்றங்களை மக்களிடம் வெளியில் கொண்டுவந்துள்ளது? அரசு செய்கின்ற அனைத்து தவறுகளுக்கும், ஒத்து ஊதுவது பத்திரிகை வேலையா? அதற்கு பத்திரிகையே தேவையில்லை.

 அப்படிப்பட்ட பத்திரிகைகள் நாட்டில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? யாருக்காக பத்திரிகை? அது மக்களுக்கா? இல்லை ஆட்சியாளர்களின் ஜால்ராவா? இது போன்ற பத்திரிகைகளும் ,ஊழல்வாதிகளும் அரசியலில் நல்லவர்கள் வேஷம் போட்டுக் கொண்டு ,தங்களை சட்டத்தின் முன் நிரபராதிகள் என்று நிருபித்துக் கொண்டிருந்தால், வாக்களித்தவர்கள் முட்டாள்கள்.

எதற்காக வாக்களிக்கிறோம்? ஏன் வாக்களிக்கிறோம்? என்று தெரியாத வாக்காளர்கள் இருக்கும் வரை நாட்டில் ஊழல்வாதிகளை ஒழிக்க முடியாது. நேர்மையான வெளிப்படையான அரசியல், மக்களுக்கு கொண்டு செல்ல முடியாது. நீதிமன்றம் ஊழல்வாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்காத வரை சட்டம் வளைக்கப்படுகிறது. ஆதாரம் மட்டுமே நீதிமன்றத்திற்கு விசாரணையில் தெரியுமா?

அப்படி என்றால், இவர்களுடைய சொத்து எப்படி 100 மடங்கு பெருகுகிறது? இதற்கு ஆதாரம் , நீதிமன்றத்திற்கு இது போதாதா? நீதிமன்றமும், பத்திரிகை துறையும் மனசாட்சியுடன் செயல்படாத வரை, நாட்டில் சமூகக் குற்றங்கள் அதிகரிப்பும், ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அவர்களை வெளியேற்ற முடியாது. மேலும்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் மட்டுமே கருத்தாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக இவர்களுடைய நலன் தான் கருத்தாக உள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநர் மீது புகார் அனுப்பிய போதே , ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். அந்த சந்திப்பின்போது திமுக ஆட்சியின் ஊழல் நிலவரம் குறித்து விவாதித்து இருப்பார்கள். இது தவிர, செந்தில் பாலாஜி விவகாரம் அதுவும் முக்கிய விவாதம் நடைபெற்று இருக்கும். இந்த சட்ட சிக்கல் கருத்து மோதல் எல்லாம் ஆட்சி நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் இப் பிரச்சனை வருமா? அதனால்,

முதல்வர் மு. க. ஸ்டாலின்,ஆளுநரை குற்றம் சொல்வதற்கு முன், உங்கள் ஆட்சியை திரும்பிப் பார்த்து ,சரி செய்து கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *