
தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி.
இவர் யார் என்றால் கடலூர் தென்னாட்டு ஜான்சிராணி என்று தியாகி அஞ்சலை அம்மாள் படையாட்சியார் பேத்தி ஆர்த்தி . இவருடைய தனித் திறமையாலும் சேவையினாலும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகி அஞ்சலை அம்மாள் பேரன் வழி பேத்தி ஆவார்.
கடலூர் மாவட்டம், சித்தாலி குப்பம் குக்கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த இளம் வயதிலேயே ஒரு கிராமத்தில் பிறந்து இங்கிலாந்தில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அக்கிராமத்தினர், வன்னிய சமூக அமைப்புகள் பராட்டுத் தெரிவித்துள்ளன.