
ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர்.
இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

.இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் டாட்டாவின் இடத்திற்கு அவர்கள் வர முடியுமா? இன்று நாட்டில் உள்ள தொழிலதிபர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு அரசு மரியாதைகளுடன் உடலை அடக்கம் செய்ய மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக் நாத் சிஷிண்டே உத்தரவிட்டுள்ளார் . இந்தியாவுக்கு பெருமை சேர்த்த !சமூகத்திற்கு தன் வாழ்நாளில் அர்ப்பணித்த மகா ஆத்மாவுக்கு! மக்கள் நன்றியுடன் இரங்கல் . அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் .
