தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்களிக்கும் புதிய இயந்திரம் (ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்) மூலம், இந்தியாவில் ஒருவர் எந்த மூலையில் இருந்தாலும் அங்கு வாக்களிக்கலாம் . இந்த புதிய வகை வாக்களிக்கும் இந்திரத்தை அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்க அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் சாகு தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ,பாமக, தேமுதிக ,இந்திய யூனியன் ,முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு வருகின்ற 16ஆம் தேதி இது குறித்து விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இமெயில் மூலம் தகவலும் தெரிவித்துள்ளது.
ஆனால், அதிமுக அரசியல் கட்சியில் மட்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தில் அதிமுக தலைமை கழகத்தில் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு மீண்டும் ஸ்பீட் போஸ்ட் மூலம் அதிமுக தலைமைக் கழகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தையும் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால், தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் சாகு, இதுகுறித்து டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ,அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கும், குளறுபடிக்கும் தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து செய்து வைக்க முடியாது. அதை நீதிமன்றம் தான் தீர்த்து வைக்க முடியும். தவிர ,ஒரு கட்சியில் உள்ள பைலா (baila)வில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதை தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த விதிமுறையில் தான் செயல்பட முடியும்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த விதிமுறைகளை மாற்றி, நிர்வாகிகள் மூலம் தான் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார். இதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களால் தான் இந்த கட்சியின் விதிமுறைகளை மாற்ற முடியும் என்கிறார். இந்த இரண்டு விதிமுறைகளில் கட்சியின் ஆரம்ப கால விதிமுறை என்ன உள்ளதோ, அதுதான் நடைமுறைப்படுத்த முடியும். அவ்வப்போது அவரவர் இஷ்டத்திற்கு அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்று அதிமுகவின் அரசியல் கட்சி விதிமுறையில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அதனால், இந்த சர்ச்சையில் அதிமுகவின் தேர்தல் சின்னம் முடக்கப்படுமா? என்பது மிகப்பெரிய சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களின் எதிர்காலம், அரசியலில் கேள்விக்குறியாகுமா?