இந்தியா அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாகும் .அந்த நம்பிக்கையை நீதிமன்றங்கள் நிலை நிறுத்துகிறதா ? – பொதுமக்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களின் வாக்குரிமையை வாக்காளர்கள் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களை  அரசியல் கட்சிகளில் தேர்வு செய்து கொள்கிறார்கள். தேர்வு செய்த வேட்பாளர்கள் பதவி அதிகாரத்திற்கு வந்தவுடன், தான் பதவிப் பிரமாணம் செய்த படி நடக்காமல் இறையாண்மைக்கு விரோதமாக சொத்துக்களை குவிக்கிறார்கள்.

 அப்படி சொத்துக்களை குவிக்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ,மத்திய மாநில அரசின் சொத்து குவிப்பு  புகார்கள் அவர்கள் மீது கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணை நீதிமன்றத்தில் முறையாக நடக்கிறதா? என்றால் இல்லை .அங்கே அதிக ஆரமிக்கவர்களுக்கும் ,பதவிக்கு வந்தவர்களுக்கும், ஒரு சட்டமாக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் ,

நீதிபதிகள் தீர்ப்பு விமர்சனம் செய்யக்கூடாது என்று இருக்கிறது. இருப்பினும் விமர்சனம் இல்லை .இதில் தவறுகள் இருப்பது சுட்டிக்காட்ட பத்திரிகைகளுக்கு கடமை உண்டு .மேலும், அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கிற்காக தான் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வந்தது .

 ஆனால், அந்த வழக்கு விசாரணை எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது?  என்று கூட தெரியாமல் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. காலதாமதம் என்ற ஒரு காரணம் காட்டி விடுவிக்கிறார்கள். உண்மையிலேயே சட்டம் சாமானியனுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் , ஒரு சட்டமாக வளைந்து கொள்கிறதா? என்பதுதான் பொதுமக்கள் கேட்கும் மிகப்பெரிய கேள்வி? மேலும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்து .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *