நாட்டில் கடல் வழி போக்குவரத்து அதன் தேவைகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து பற்றிய ஒரு கல்வி முறையை பயிற்சி வகுப்பாக இங்கே செயல்படுத்தி வருகிறது.
இது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல் சார்ந்த துறைக்கான பயிற்சி மற்றும் மனித வளத்தை கடல் சார் மற்றும் நீர் வழி போக்குவரத்தில் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது.
இதைப் பற்றி ஓய்வு பெற்ற சி எம் டி இ கேட் ஜோசா Cmde (ஓய்வு) தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் எம். சரவணன் (நிதியதிகாரி) பொறுப்பு இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, இப் பல்கலைக்கழகம் புதிய இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதுகலை பட்ட படிப்பு
எம்டெக் (மெரைன் டெக்னாலஜி) கொல்கத்தா
எம் பி ஏ (சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட மேலாண்மை) விசாகப்பட்டினம்.
இளங்கலை பட்டப்படிப்பு
பி எஸ் சி (கடல் சார் அறிவியல்)
பிபிஏ (தளவாடங்கள் சில்லறை வணிகம் மற்றும் மின்பணிகம்) சென்னை மற்றும் கொச்சி
பிபிஏ (கடல் சார் தளவாட தொழில் பயிற்சி உட்பகுதிக் உட்பட்டது) விசாகப்பட்டினம்.
மேலும் கடல் சார் ஆராய்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்துறையை மேம்படுத்த முடியும். தவிர இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் அனைத்து வளாகங்களிலும் 2017 இல் எம் எஸ் /பி ஹெச் டி MS/PhD போன்ற ஆராய்ச்சி படிப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது இதனால் கடல் சாறு துறையில் ஆராய்ச்சிகளை ஊக்கி வைப்பதோடு தகுதியுள்ள ஆசிரியர்களை உருவாக்க இப்பட்ட படிப்பு பெரும் பங்கு வகிக்கிறது மேலும்
கடல் சார் பல்கலைக்கழகம் உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆர்வமுள்ள மாணவர்களை இக்கல்வியில் பூட்டி வைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு, இந்த பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வைக்கிறது
மேலும் இந்த சர்வதேச கூட்டுறவு வலை அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு ஐ எம் யூ விண்ணப்பம் தாக்கல் செய்தது. உறுப்பினர்கள் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் ஆர்டிக் அல்லாத உறுப்பினராக ஏற்றுக் கொள்வதற்கு ஒரு மனதாக வாக்களித்தனர் .
மேலும், ஸ்காலர்ஷிப் திட்டம் கடல்சார் அறிவியல் படிப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இதை இந்திய மாணவர்கள் பயன்படுத்தி, இத்துறையில் உள்ள பணி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.