பிரதமர் மோடி இந்திய ராணுவத்திற்கு தேவையான உதவிகளையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறார் .அவர்களை சந்தித்து குறை நிறைகள் ,அவர்களை பற்றிய நலம் விசாரித்தல் போன்றவற்றை செய்து வரும் போது ராணுவ வீரர்களுக்கு ஒரு உத்வேகமும் ,எழுச்சியும் ஏற்படுகிறது.
தவிர ,துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக சென்ற இந்திய ராணுவ மீட்புக் குழு சென்று வந்த பிறகு, அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகளை பற்றியும், பிரதமர் மோடி நம் ராணுவ வீரர்கள் இடம், விசாரித்து தெரிந்து கொண்டார்.
அவர்கள் ஒவ்வொருவரும், அங்கு நடந்த சம்பவங்களை விளக்கி தெரிவித்தனர். மேலும் ,அந்த நாட்டு மக்கள் இவர்கள் மீது காட்டிய அன்பு இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை, இவை அனைத்தும் பிரதமரிடம் தெரிவிக்கும் இந்த காணொளி காட்சி, நம்ம எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தியா என்றால் உதவி செய்யும் நாடாக இன்று உலக நாடுகளில் பிரதமர் மோடியால், ஒரு உறவு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மிகவும் வரவேற்கத்தக்கது.