கோவா மாநிலம் எப்படி உருவானது? என்பது குறித்த அதன் கலாச்சார நிகழ்வு கிண்டி ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கோவாவின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள், போர்ச்சு கீசியர்களால் கோவாவில் அவர்களின் ஆதிக்கம் ,அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், பிறகு அது எவ்வாறு விடுதலை பெற்றது? அதன் வரலாற்று கலாச்சார நிகழ்வுகள் கொண்ட கலை, நிகழ்ச்சிகள், சிறப்பாக நடத்தப்பட்டது.
கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்களுக்கு விருதும், சால்வையும், அணிவித்து ஆளுநர் ஆர் என் ரவி மகிழ்வித்து மரியாதை செய்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் எஸ் ஜி ஏ சபா தலைவர், அதன் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். தவிர, நெல்லி குப்புசாமி செட்டியார், டாக்டர் சுஜீர் எம்டிஎஸ் போன்ற பல சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி பண்டைய கலாச்சார நிகழ்வுகளை நினைவுபடுத்தி பேசினார். கலாச்சாரம், பண்பாடு, மனித வாழ்க்கையில் வாழ்ந்து முடிந்த பிறகும் பேசுகின்ற ஒரு வரலாற்று சிறப்பு தான், மனித வாழ்க்கையின் கலாச்சார பண்பாடு. இந்திய நாட்டின் கலாச்சாரம், பண்பாடு பெருமை மிக்கது. போற்றுதலுக்குரியது என்று தெரிவித்தார்.
அது உண்மைதான் ,இன்று உலக நாடுகளில் கலாச்சார, பண்பாடு சீரழிவு ஏற்பட்டுள்ளது .அதில் அமெரிக்காவின் கலாச்சாரம் டோட்டல் வேஸ்ட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களெல்லாம் இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். ஆனால், நாம் தான் அதை புரியாமல் பெரிதாக நினைக்கிறோம். மேலும், கலாச்சாரம் வாழ்வியலோடு கலந்தது. கல்வி வாழ்வியலோடு கலந்தது.
ஆனால், கலாச்சாரங்கள் தெரியாமல் தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபங்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் என்பது மதமாக பிரிக்கிறார்கள், கலாச்சாரம் என்பது வாழ்வியலோடு கலந்தது. அது கலை, கல்வி, மதம், வழிபாடு இவை அனைத்தும் சார்ந்தது தான் கலாச்சாரம். இந்த கலாச்சாரத்தின் அடிப்படையே ஆன்மீகமும், லவ்கீகமும் கலந்தது. இதை தான் மன்னர் காலத்தில் இருந்து இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் கலாச்சாரம்.
அரசியல் சுய லாபங்களுக்காக கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தினாலும், இந்திய கலாச்சாரம் வலுவானது, பழமையானது, போற்றத்தக்கது. எந்த நாட்டில் கலாச்சாரம் வலுவானதாக உள்ளதோ, அந்த நாட்டில் மக்களின் வாழ்க்கை தரம் ,செல்வ வளம் ,கல்வி ,திறமை இவையெல்லாம் ஒருங்கே அந்த நாட்டில் உயர்ந்து, ஒப்பற்ற வாழ்க்கையை மனித குலம் வாழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதைதான்,
ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கியத்துவமாக இந்தியாவின் கலாச்சாரம் பழமையானது, வலிமையானது என்று தெரிவித்துள்ளார். இது போன்ற கலாச்சார நிகழ்வுகள் ,இதுவரையில் எந்த ஆளுநரும் தமிழ்நாட்டில் நடத்தியது இல்லை .அது மட்டும் அல்ல ,மக்களுக்கு தற்போது கலாச்சாரத்தின் உண்மைகள், அதன் சிறப்புகள் புரியவில்லை. அதற்கு ஒரு உதாரணம் மட்டும் இங்கு தருகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் படித்து, பட்டங்களை தன் பெயருக்கு அருகில் போட்டவர்கள் ஊருக்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
ஆனால், அந்த மக்கள் வாழ்ந்த கலாச்சாரம், இன்றைய தலைமுறையில் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்களின் சந்தோஷம், நிம்மதி, நிறைவு ,இந்த தலைமுறைகளிடம் இல்லை. மாறாக பெரும்பாலோர், தீய பழக்கங்கள், போதைக்கு அடிமையாகி, படித்தவர், படிக்காதவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது கலாச்சாரத்தின் பெருமையும் அல்ல. வாழ்க்கையின் பெருமையும் அல்ல.
எனவே, இளைய தலைமுறைகள் நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பெருமையும், உணர்ந்து வாழ வேண்டும். கலாச்சாரம் தான் வாழ்க்கையின் அஸ்திவாரம், கலாச்சாரம் தான் மனித குல வரலாற்றின் சிறப்பு, வாழ்ந்து முடிந்த பிறகும் பேசுவது கலாச்சாரத்தின் வரலாற்று சிறப்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.