இந்திய நாட்டின் பொருளாதாரம் எந்தெந்த காரணங்களால் பாதிப்புக்கு உள்ளாகி வீழ்ச்சி அடைகிறது?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எந்த ஒரு நாட்டிலும்,நேர்மையான ,வெளிப்படையான அரசியல் மக்களுக்கு இல்லாத போது, அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அடுத்தது அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பிளாக் மணி, அதாவது கருப்பு பணம், வேறு ஒரு நாட்டில் முதலீடு செய்யும் போது, அங்கு பணப்புழக்கம் இல்லாமல், பொருளாதார வீழ்ச்சி அடையும் .

அடுத்தது மக்கள் உழைக்காமல், இலவசத்தை நம்பி வாழ்ந்தால், பொருளாதார வீழ்ச்சியடையும். இவையெல்லாம் இந்திய நாட்டின் அரசியலில் நடக்காதது ஒன்றுமில்லை. மக்களுக்கு உண்மை தெரியவில்லை .அடுத்தது தகுதியான, நேர்மையான ,வேட்பாளர்களை தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு தகுதி இல்லை என்றாலும், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

அதாவது தகுதியற்றவர்கள், வாக்காளர்களுக்கு பணமும், பொருளும் கொடுத்து, கையில், காலில் விழுந்து, 100 தடவை நடையாய் நடந்து, வாக்குகளை வாங்கி, பதவிக்கு வந்து நேர்மையாக பணி செய்யாமல், ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை அதாவது அந்த கருப்பு பணத்தை கொண்டு போய் வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி ,வீழ்ச்சியடையும். மேலும்,

இந்திய நாட்டின் பொருளாதாரம் பல்லாயிரம் கோடி ஊழல்வாதிகளால், இன்று வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது .அதில் முதலிடத்தை பிடித்துள்ளது காங்கிரஸ் ,திமுக, பாமக போன்ற கட்சிகளின் முக்கிய புள்ளிகள் ஸ்விஸ் பேங்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். பா சிதம்பரம், சோனியா காந்தி போன்றோர் சீனாவில் சுமார் 5000 கோடி அளவுக்கு முதலீடு செய்து இருக்கிறார்கள், என்ற தகவல் வெளியாகி உள்ளது.இது இந்திய நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய, முக்கிய காரணம். மேலும்,

இந்த பொருளாதாரம் அனைத்தும் இந்திய மக்களின் உழைப்பு. இந்த உழைப்பை கொண்டு போய் வெளிநாடுகளில் பதுக்குகிறார்கள். இவையெல்லாம் பிரதமர் மோடி இப்போது கட்டுப்படுத்தி இருக்கிறார். தவிர, தமிழ்நாட்டில் அதிமுக, இரண்டு அரசியல் கட்சிகளும், இலவசம், டாஸ்மாக் வியாபாரம், இதையெல்லாம் கொடுத்து, மக்களின் உழைப்பை கேவலமாக்கி விட்டது .

அதன் விளைவு இப்போது வட மாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதனால், தமிழ் சமுதாயம் இனி உழைப்பு இல்லாமல் நிச்சயம் பொருளாதாரத்தில் உயர்வடைய முடியாது. இந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடினால் தான், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அடையும். மக்கள் வேலைக்கு செல்வார்கள். காலையில் 10:00 மணிக்கே டாஸ்மாக் கடையை திறந்து வைத்தால் ,மது போதைக்கு அடிமையானவன் எப்படி வேலைக்கு செல்வான்?

 

இன்று வடநாட்டில் இருந்து தொழிலாளர்கள், தமிழ்நாட்டை ஆக்கிரமித்து உள்ளார்கள் என்ற செய்தியை மட்டும் பத்திரிகைகளில் வெளியிடும்போது அரசாங்கம் அதை பார்க்கவில்லையா? அதற்கான நடவடிக்கை இதுவரை என்ன எடுத்திருக்கிறது? மேலும், வடநாட்டு தொழிலாளர்கள் கூலி குறைவாக இருந்தாலும், அவர்கள் உடல் உழைப்பு அலட்சியப்படுத்தாமல் வேலை செய்கிறார்கள். அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .மேலும் இன்று இந்த குடிகாரர்களின் மனைவிகள், வேலைக்கு செல்கிறார்கள் .அவர்கள் செல்வதால் தான் இன்று அவரது குடும்பம் ஓரளவு பட்டினிலிருந்து காப்பாற்றப்படுகிறது.

தவிர ,ஜாதி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், நாம் தமிழர் கட்சி, பாமக ,அதேபோல் கொங்கு மண்டலத்தில் புதிய தமிழகம் கட்சி, கம்யுனிஸ்டுகள், இவர்கள் எல்லாம் தொழிலாளர்கள் மத்தியில் யூனியன்கள் ஆரம்பித்து, அந்த தொழிலாளர்கள், அந்த கம்பெனி விட்டு தூக்கும் அளவிற்கு தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாகிவிட்டது .இதுபோல் பல கம்பெனிகள், இந்த யூனியன்களால் நாசமாகி ஊத்தி மூடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இது போன்ற அரசியல் கட்சிகளின் தலையீடு, கம்பெனி நிர்வாகத்தில் இருந்தால் அந்த நிர்வாகமே சீரழித்து விடுகிறது. இதனால் பல குடும்பங்கள் என்று நடுத்தெருவில் நிற்கிறது.

இது தவிர ,சில கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தந்த கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தி ஸ்கிராப் மற்றும் யூனியன், தாதா வேலைகள் இதனாலும் கம்பெனியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு , பல கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன.

மேலும், இன்று வட நாட்டு தொழிலாளர்கள் கார்பெண்டர், பெயிண்டர்கள், ஹெல்ப்பர்கள், டெய்லர்கள், மேஸ்திரிகள், சித்தாள் ,பெரியாள், ஹோட்டல் வேலைகளில் மாஸ்டர்கள், ஹோட்டல் வேலை செய்பவர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், இன்று வட நாட்டு தொழிலாளர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். தவிர ,தாம்பரத்தில் உள்ள ஒரு முக்கிய ஓட்டலில், வடநாட்டு ஒரு தோசை மாஸ்டர் சொன்ன விபரம், கேட்டவருக்கு தலை சுற்றியது. அவர் சொன்ன தகவல், மாதா ,மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊருக்கு அனுப்புகிறேன், என்று சொல்லி உள்ளார்.

 அப்படியானால் ஒரு தொழிலாளி பத்தாயிரம் என்றால், பத்து பேர் அனுப்பினால் ஒரு லட்சம் அதுவே 100 பேர் அனுப்பினால் ஒரு கோடி, ஒரு லட்சம் பேர் அனுப்பினால் ஆயிரம் கோடி மனம் அதிர்ச்சி அடைந்தது. இது எல்லாம் ஒரு தோராயமான கணக்கு. இதுவே இப்படி என்றால், ஒவ்வொரு மாவட்டம் தோறும், இந்த வடநாட்டு தொழிலாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்று தோராயமான தகவல் எடுத்தால் கூட, இன்று திருப்பூரில் சுமார் மூன்று லட்சம் பேரும், கோவையில் 7 லட்சம் பேரும், சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள், என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.மேலும்,

வட மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் மூலம் இன்று மாத மாதம் 3000 கோடி என்றால், அதுவே வருடத்திற்கு 36,000 கோடி ,இந்த பணப்புழக்கம் தமிழ்நாட்டில் உள்ள சிறு,குறு ,பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்த பணம் ,தற்போது, வட மாநிலங்களில் புழங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே இருக்கும் மக்களையும், சிறு, பெரும் வியாபாரிகளையும், வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

 ஆனால், இங்கே நம்தமிழ் மக்கள்! சாராயக்கடையும் ,டாஸ்மாக் கடையும் வளமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ,என்ன பதில் சொல்லப் போகிறது? திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? இதற்காக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பாஜக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மக்கள் இதைப்பற்றி சிந்தித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? அவர்களுடைய நோக்கமெல்லாம் ஆட்சியாளர்கள் கொடுக்கும் இலவசமும், தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக கொடுக்கும் பணமும், பிரியாணியும் உங்களை தரைமட்டத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும் என்பது உறுதி.மேலும்,

 பக்கத்து மாநிலமான கேரளாவில் இலவசம் கொடுத்தாலும், அந்த மக்கள் வாங்க மாட்டார்களாம் . தமிழ்நாட்டில் இலவச கிடைக்கவில்லை என்று சண்டை போடுகிறார்கள். இதனால், இந்த மக்களின் உழைப்பு கேவலப்படுத்தப்படுகிறது .உழைப்பவர்கள் முன்னுக்கு வர முடியவில்லை. சோம்பேறிகளையும், குடிகாரர்களையும், வெத்து வெட்டுக்களையும், அரசியலில் ஈடுபடுத்தி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தகுதியானவர்கள், நேர்மையானவர்கள் அரசியலில் பதவிக்கு வர முடியவில்லை.மேலும்,

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வளர்ச்சி அடைந்து, தமிழ் மக்கள் வீழ்ச்சி அடைந்து, எங்கே இவர்கள் இங்கே முதலாளி ஆகி விடுவார்களோ, என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், தமிழக மக்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகி, வட மாநில தொழிலாளர்களின் நிலைமை ஓங்கி விட்டால் என்ன செய்வீர்கள்? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் முக்கிய கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *